ஆசாரக் கோவை
- பெருவாயின் முள்ளியார்
இன்னாத எவ்வுயிர்க்கும் செய்யாமை கல்வியோடு
ஒப்புரவு ஆற்ற அறிதல் அறிவுடைமை
நல்லினத் தாரோடு நட்டல் இவையெட்டும்
சொல்லிய ஆசார வித்து.
நன்றியுணர்வு, பொறுமை, இனிய பேச்சு, எந்த உயிரினத்துக்கும் தீங்கு செய்யாமை, கல்வி, எல்லோருடனும் இணக்கம், அறிவாற்றல், நல்லவர்களை விரும்புதல் ஆகிய
எட்டு நல்ல குணங்களும்
ஒழுக்கத்தின் விதைகள் என்பது இதன் பொருள்.
No comments:
Post a Comment