21-9-2014
இந்த ஆண்டு மனைவி நலவேட்பு விழாவை மிக எளிமையாக கொண்டாடலாம் என திட்டமிட்டோம் - காரணம் ஜானகி வீடியோ உரிமையாளர் அ /நி வெங்கடாசலம் மறைந்து ஐம்பது நாட்கள்தான் ஆகியிருந்தது. அவர்தான் LIVE TELECAST முதல் வரும் அத்துணை தம்பதியர்களையும் மாலையும், கழுத்துமாக போட்டோக்கள் எடுத்து அவர்களை மகிழ்விப்பார். அவர் இல்லாதது மிகவும் சோகத்தை அளித்தது.
இருப்பினும் அவர் மனைவி திருமதி ஜானகி வெங்கடாசலம் அவர்கள் இந்த விழா சிறப்பாக நடந்தால்தான் அவர் கணவர் ஆத்மா ஆனந்தமடையும் என்று சொல்லி எல்லா ஏற்பாடுகளையும் செய்து இந்த ஆண்டுவிழா
மிக சிறப்பாக நடைபெற வழிவகுத்தார்.
90 வயது தம்பதியரிலிருந்து சமீபத்தில் திருமணமான தம்பதியர்வரை நூறு ஜோடிகள் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.
திருமதி ஜானகி மற்றும் அவர்கள் வீடியோ நிறுவன ஊழியர்கள் அனைவருக்கும் கலந்துகொண்ட அனைவரின் சார்பில் நன்றி தெரிவித்தோம்.
எடுக்கப்பட்ட போட்டோக்களில் சில -
ஜானகி வீடியோஸ் குடும்பத்தினருடன் - தர்ஷனா ராம், ஜானகி, மாலா, JP , ராம் & லட்சுமண் |
No comments:
Post a Comment