Thursday 27 June 2013

திடீர் சுற்றுலா...1

நேற்று ( 26-6-13 ) நாகர்கோவிலில் நடந்த நண்பர் மகள் திருமணத்துக்கு மாலாவும், நானும் சென்றிருந்தோம். மதிய உணவுக்குப் பிறகு கிடைத்த நான்கு மணி நேரத்தில் பக்கத்தில் இருந்த மூன்று இடங்களுக்கு சுற்றுலா செல்லும் வாய்ப்பு எதிர்பாராமல் கிடைத்தது. 



மூன்று இடங்களுமே மிகவும் உற்சாகத்தைத் தந்தது -

முதலில் சென்றது மாத்தூர் தொட்டி பாலம் -







இது old photo   இப்போது தண்ணீர் சுத்தமாக இல்லை!

இதுபோல மொத்தம் 28 தூண்கள் உள்ளன.
தென்னாசியாவின் மிக உயர்ந்த பாலம் என்கிறார்கள். ஒரு மலையிலிருந்து இன்னொரு மலைக்கு தண்ணீர் எடுத்துச் செல்ல தொட்டி வடிவில் பாலம் அமைத்து கிட்டத்தட்ட அரை  கி.மீ தூரத்துக்கு அமைத்திருக்கிறார்கள். காமராஜர் காலத்தில் திட்டமிட்டு  சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். 13  லட்சம் ரூபாய்தான் செலவானதாம். மக்கள் நடந்து செல்வதற்கும் பாலத்தில் வசதி உள்ளது. 

வருஷம் 16 படத்தில் கார்த்திக் சைக்கிள் ஒட்டிக்கொண்டு பாடும் " பழமுதிர்சோலை எனக்காகத்தான்..."   பாடல் இந்த பாலத்தில்தான் படமாக்கப்பட்டுள்ளது. 

பாலத்தின் நடுவில் சென்று கீழே பார்க்கும்போது 
பச்சைப்பசேல் என இயற்கை அழகு மனதைக் கொள்ளை கொள்கிறது. இருபுறமும் தென்னை மரங்கள், நடுவே ஆறு, மேலே வீசும் காற்று மற்றும் சுற்றித் தெரியும் மலைகள் - அற்புத அனுபவம்.

பாலத்தின் மறு பகுதிக்குச் சென்று அங்கிருந்து 500 படிகள் கீழிறங்கி நடந்து   பாலத்தின் முகப்பு பகுதிக்கு வர மறுபடியும் பல நூறு படிகள் ஏற  வேண்டும்.

நேரம் கருதி, இந்த நீண்ட நடைப் பயணத்தைத் தவிர்த்து விட்டோம். 

திரும்பும்போது முதல்முறையாக ஒரு புதிய பழம் இங்கு பார்த்தோம். ஆரஞ்சு பழ சைசில் ஒரு மினி பலாப்பழம்! உள்ளே சிறு,  சிறு மஞ்சள் நிற சுளைகள் - இனிப்பும்புளிப்பும் கலந்த சுவை.


மினி பலா!

கேரளாவில் இதனை 'அயனி சக்கை' என்பார்களாம். 

இந்த தொட்டி பாலம் நாகர்கோவிலிலிருந்து சுமார் 40 கிமீ தூரத்தில் உள்ளது.

3 comments:

  1. Sir
    What is this place?. Very nice to see you and madam.
    pkrp

    ReplyDelete
    Replies
    1. Dear PKRP
      Very happy to hear from you..How are U & how is your family? Convey my love to them..

      We'd been to Nagercoil for a marriage and we could go to three places in four hours. In the above photos, you can see the highest & longest agueduct to take water from one hill to another hill. The peoiple here call this as hanging bridge. It is about 40 km from Nagercoil.

      Delete
  2. nice fotos esp Mala's smiling portrait! :)

    ReplyDelete