Friday 28 June 2013

திடீர் சுற்றுலா...2

தொட்டி பாலத்திலிருந்து  திற்பரப்பு அருவிக்கு வந்தோம். இந்த அருவி கோதையாறு என பாய்கின்றது.



அருவியில் நீர்வரத்து அதிகமாகவே இருந்தது.  குளிக்க ஆசைப் பட்டாலும் நேரம் கருதி சிறிது நேரம் மட்டும் இருந்தோம். சாரலில் முழுக்கவே நனைந்து விட்டோம்.

இந்த அருவியில் எல்லா காலங்களிலும் நீர் வந்துகொண்டு இருக்குமாம்.
குளிப்பதற்கேன்றே ஒருமுறை இங்கு வரவேண்டும்.


பிறகு அருவியை விட்டு பிரிய மனமில்லாமல் பத்மநாபபுரம் அரண்மனைக்கு வந்தோம். இந்த அரண்மனையை வருஷம் 16 படத்தில் பார்த்திருக்கலாம்.

அரண்மனை நுழைவாயில் 
தேக்கு மரத்திலான கூரைகள், வேலைப்பாடுகள் அமைந்த விதானங்கள், கலைநயமிக்க தூண்கள், வழுவழுப்பான தரைகள் என மூன்று ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த அரண்மனையை வேகமாக சுற்றி பார்க்கவே ஒரு மணி நேரத்திற்கும் மேல் ஆகி விட்டது.

60 க்கும் மேற்பட்ட மூளிகைகளினால் ஆன அரசர் கட்டில்


தீபத்தை எந்த பக்கம் திருப்பினாலும் அப்படியே நிற்கும் குதிரை விளக்கு


 மாலை நாகர்கோவில் ஜங்சனுக்கு வந்து திருச்சி ரயில் பிடித்து அதிகாலை வீடு வந்து சேர்ந்தோம். 

1 comment:

  1. woww!! the falls looks beautiful!! feel like taking a dip...

    ReplyDelete