Thursday, 13 March 2025

சிறந்த வீடு

 


ஒரு அப்பா தனது மகளிடம் கூறினார்:

"என் மகளே, உன் வாழ்க்கையில், மூன்று விஷயங்களை விட்டுவிடாதே:

1.சிறந்த உணவை உண்ண வேண்டும்.

2.சிறந்த படுக்கையில் தூங்கவேண்டும்.

3.சிறந்த வீட்டில் வாழ வேண்டும்."

மகள் கேட்டாள்..

"நாம் ஏழைகள், நான் எப்படி அவ்வாறு செய்யமுடியும்?அப்பா "

அப்பா கூறினார்:

"பசிக்கும் போது மட்டும் சாப்பிட்டால், என்ன சாப்பிடுகிறாயோ அதுவே சிறந்த உணவு,

நிறைய வேலை செய்து சோர்வாக தூங்கினால், அந்தப் படுக்கைதான் சிறந்த படுக்கை,

மக்களிடம் அன்பாக நடந்து கொண்டு, அவர்களின் இதயங்களில் நீ குடியிருந்தால் அதுதான் நீ வாழும் வீடுகளில் சிறந்த வீடு..."

என்ன அற்புதமான அறிவுரை..!

No comments:

Post a Comment