Tuesday, 18 March 2025

மூலிகைகள்

ஆனாலும் சொந்த அனுபவம் தெரியும் போது அதன் மகிமையை முழுமையாக உணர முடிகிறது.

இது பெண்களுக்கு மிக உதவும் என்ற நோக்கில் பதிவு செய்கிறேன்.

Urinary infections பெண்களுக்கு எவ்வளவு கொடுமையானது என்பதை அவர்களுக்கு தான் தெரியும்.

பாவப்பட்ட பிறவிகள்.

கடந்த ஒரு ஆண்டாக என் உறவு மிக அவதி பட்டார்கள்.

டாக்டரிடம் சென்றால் antibiotic கொடுப்பார்கள். ஒரு வாரம் மிக சிரமப்பட்டு கட்டுக்குள் வரும்.

ஆனாலும் மீண்டும் மீண்டும் தொற்று வரும். எல்லா சோதனைகளும் செய்யது மீண்டும் மாத்திரைகள்.

எனக்கு நமது மூலிகைகளை உபயோகித்து பார்க்க தோன்றியது.

ஆனால் அவருக்கு நம்பிக்கை இல்லை.

அதனால் எதுவும் சொல்லாமல் தயார் செய்து மூலிகை டீ என்று குடிக்க கொடுத்தேன். குடித்து விட்டு டீ நல்லாத்தான் இருக்கு என சொன்னார்கள். ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் ஒரு முறை குடிக்க கொடுத்தேன்.

இரண்டு மணி நேரம் கழித்து தன்னுடைய infection சரியாக போனது போல் தெரிவதாக சொன்னார்கள்.

தொடர்ந்து குடிக்க கொடுத்ததில் முழுமையாக சரியாகிவிட்டதாக கூறினார்.

என்ன டீ கொடுத்தீர்கள் என கேட்டதால் அவருக்கும் சேர்த்து உங்களுக்கு சொல்கிறேன்.

உங்களுக்கும் உதவக்கூடும்.

தயாரிக்கும் முறை:

தேவையான பொருட்கள்.

1. நெருஞ்சிமுள் செடியின் அனைத்து பாகங்கள் (சர்மூலம்)

2. பூளைப்பூ

3. ஆவாரம்பூ

4. திருநீற்று பத்தி இலை

5. துளசி

6. லெமன்கிராஸ்

7. சீரகம்

8. மிளகு

9. லவங்க பட்டை

10. மஞ்சள்.

இவைகள் எல்லாம் ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு மூழ்கும் அளவுக்கு நீர் சேர்த்து பாத்திரத்தை மூடி நன்றாக கொதிக்க விடவும்.

கொதிக்க ஆரம்பித்ததும் அடுப்பை குறைத்து தொடர்ந்து வேக விடவும்.

இவைகளின் சாரம் முழுமையாக நீரில் கரைந்து இருக்கும்.

இப்போது இந்த நீருடன் சர்க்கரை சேர்த்து குடியுங்கள்.

மூன்று மணி நேரத்தில் வலி காணாது போகும்.





Vi

No comments:

Post a Comment