Tuesday, 18 March 2025

ஏழு தடைகள்

வாழ்கையில் நம்மை சிறைபடுத்தும் ஏழு தடைகற்கள். இவற்றை உடைத்து எறியுங்கள். வாழ்க்கை மேம்படும்.

1. காலம் கடத்துதல். எந்த ஒரு வேலையை செய்ய வேண்டுமானாலும் உடனே செய்துவிடுங்கள். நாளை இல்லாமலும் போகலாம்.

2. முடிவெடுக்க முடியாத மனநிலை: சரியான நேரத்தில், சரியான முடிவெடுக்க முடியாமல் எத்தனை பேர் மனதுக்கு பிடிக்காத வாழ்கையை, வேளையில் இருந்து கொண்டிருக்கிறார்கள்?

3. தாழ்வு மனப்பான்மை: நான் எதற்கும் லாயக்கில்லை... அவன்/அவளிடம் இருக்கும் திறமை எனக்கில்லை என்றெல்லாம் எண்ணாதீர்கள். உங்களைப்போல் உங்களால் மட்டுமே இருக்க முடியும்.

4. அதிகமாக யோசித்தல்: நடக்காத ஒரு விஷயத்தையோ, ஏன் நடக்க கூட வாய்ப்பில்லாத விஷயத்தையோ நினைத்து காலம் கடத்தாதீர்கள்.

5. பொறாமை: சொல்லவா வேண்டும்?

மனிதர்களிடம் அதிகம் உள்ளது..

6. குறுகிய மனம்: இந்த உலகத்தில் எல்லார்க்கும் வேண்டியது எல்லாம் உள்ளது. பரந்து விரிந்து மனதை விசாலமாக்குங்கள்.

7. பலிகடா மனப்பான்மை: எல்லா கஷ்டங்களும் எனக்கு மட்டுமே நடக்கிறது என்று ஒரு மாயக்கோட்டை கட்டாதீர்கள்.

இந்த ஏழு விஷயங்களை தூக்கி எறிந்து விடுங்கள் #வாழ்க்கை முன்னேறும்....

No comments:

Post a Comment