Sunday, 23 March 2025

தந்தை

தந்தை வீட்டிற்கு வரும்போது சிரித்த முகத்துடன் எதிர் கொள்ளுங்கள்,

ஏனெனில் வெளி உலகம் உங்கள் தந்தையை வெறுப்பேற்றி அலைகழிக்கச் செய்கிறது.

தாய் தந்தை வித்தியாசம்???

தாய் 9 மாதங்கள்

தன் வயிற்றில் சுமக்கிறாள்...

வாழ்நாள் முழுவதும் தந்தை தன் தோளில் உங்களை சுமக்கிறார்..

(நீங்கள் உணரமாட்டீர்கள்)

அம்மா உங்களை பசிக்காமல் பார்த்துக் கொள்கிறாள்...

நீங்கள் பட்டினி கிடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை உங்கள் தந்தை கற்பிக்கிறார்.. (உங்களுக்குப் புரிவதில்லை)

அம்மா உங்களை மார்பில் சுமக்கிறாள்.

அவரை நீங்கள் பார்க்க முடியும்..

தந்தை உங்களை தன் முதுகில் சுமந்து செல்கிறார்.. (அவரை நீங்கள் பார்க்க முடியாது)

தாயின் அன்பு, அது நீங்கள் பிறந்ததிலிருந்தே உங்களுக்குத் தெரியும்...

தந்தையின் அன்பு

அது நீங்கள் தந்தையாகும்போது தான் உங்களுக்குத் தெரியும்.. (பொறுமையுடன் இருங்கள்)

ஒரு தாய்... விலைமதிப்பற்றவள்

தந்தை.....

காலத்தால் மீண்டும் வழங்க இயலாத சொத்து.

No comments:

Post a Comment