Sunday, 31 August 2025
அதிர்ஷ்டம்
நம் எல்லோருக்கும்,
உலகிலுள்ள எல்லாவற்றையும் தெரிந்து வெற்றி கொள்ள ஆசை;
உலகின் மிகப் பெரிய பணக்காரனாக ஆசை;
உலகையே ஆளுகின்ற பதவியில் அமர ஆசை;
இப்படித் தொட்டதெல்லாம் பொன்னாக வேண்டும் என்று பேராசை எல்லோரிடமும் உண்டு. இந்த ஆசைகள் நமக்கு மட்டும் இல்லை. எல்லாவற்றையும் துறந்துவிட்டதாக கூறும் ஒரு சில சாமியார்கள் கூட உலகரங்கிள் பெரும் பெயரும், மதிப்பையும், செல்வாக்கையும் பெற ஆசைப்படுகின்றனர்.
முதல் கேள்வி
ஆசைகள் ஆயிரமாயிரம் இருக்கலாம், ஆனால் அதை சாதிப்பதற்கான அடிப்படைத் தகுதியும், ஆற்றலும், திறமையும், நம்மிடம் இருக்கிறதா? என்பது முதல் கேள்வி.
எண்ணற்ற சான்றோர்கள் கூறியிருக்கிறார்கள்
- தகுதி என்பது பிறப்பால் வருவது அன்று, நாம் வளர்த்துக் கொள்வதென்று.
- ஏதேனும் திறமை இல்லாவிட்டாலும், பயிற்சியின் மூலம் அடிப்படையிலிருந்து நிபுணத்துவம் வரை வளர்க்க முடியும் என்று.
உண்மைதான்
- தகுதி, ஆற்றல், திறமை, என்று இல்லாத எல்லாவற்றையும் நம்மால் முயற்சித்தால் வளர்த்துக்கொள்ள முடியும்;
இரண்டாவது கேள்வி
“முயற்சித்தால் திறமைகளை வளர்த்துக்கொள்ள முடியும்”
“முயற்சித்தால்” “முயற்சித்தால்” “முயற்சித்தால்”
நாம் முயற்சி செய்கின்றோமா? என்பது இங்கு இரண்டாவது கேள்வி
உண்மையில் சொன்னால்,
- தொலைக்காட்சி பார்ப்பது,
- கைபேசியில் தேவையின்றி நேரம் செலவளிப்பது,
- சமூக வலைதளங்களில் வெருமனே நேரம் செலவிடுவது,
- தேவையற்ற வீண் அரட்டை,
போன்ற பல செயல்கள் நம் இயல்பான சோம்பேறித்தனத்திற்கு ஒத்துப் போவதால், அதையே தினம்-தினம் திரும்பத் திரும்ப செய்து நேரத்தை கழிக்கிறோம்.
இப்படி தேவையற்றவைகளுக்கு அதிக நேரம் செலவிடுவதால், வெற்றிக்குத் தேவையானவற்றிற்க்கு முயற்சி செய்ய நேரம் இருப்பதில்லை
"திறமைகளை வளர்த்துக் கொள்ளாவிட்டால்
வாழ்க்கையில்
எவ்வளவு பெரிய வாய்ப்பு கிடைத்தாலும் பயனில்லை;
உண்மையில் சொன்னால் திறமையில்லாதவனுக்கு
“அதிர்ஷ்டம்” கூட ஒரு வகையான “துரதிஷ்டம்” தான்"
மூன்றாவது கேள்வி
நம்முடைய வாழ்க்கையில் ஆசைகளை அடைய தேவையான திறமைகளை வளர்க்க வேண்டும் என்பது சரிதான். ஆனால் எப்படி வளர்ப்பது? என்பது மூன்றாவது கேள்வி
ஒரு வார்த்தை பதில் - முயற்சி
முழுமையான பதில் - கற்றல், திட்டமிடல், பயிற்சி, விடாமுயற்சி
உங்களுக்கு பிரெஞ்சு மொழியைக் கற்க விருப்பம் இருந்தால் அதற்குரிய நூலையும், கற்பிக்கும் ஆசிரியரையும் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். எதையும் செய்யாமல் அது தானாகவே நம் வீட்டிற்கு வரும் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம். உங்கள் ஆசைகளை மெய்பிக்க, நீங்கள் படிப்படியாய் “உங்களை” வெற்றி கொள்ள வேண்டும்.
“வெற்றிக்குத் தேவையான திறமைகளை பட்டியலிடுங்கள்;
அவற்றை முக்கியத்துவத்திற்கேற்ப வரிசைப்படுத்துங்கள்;
அவற்றில் ஒவ்வொன்றாய் எடுத்து
உங்கள் முழு ஆற்றலோடு கற்று செயல்படுத்துங்கள்;
எந்தவொரு எட்டாக்கனியான வெற்றியும்
எட்டும் தூரத்தில் வந்து நிற்கும்”
அதிர்ஷ்டம்
>
ஒருவன் காலையில் தூங்கி எழுந்தான்...
.
இரவு தூங்க வெகுநேரம் ஆனதால் காலை எழுந்துக்கொள்ள நேரமாகிவிட்டது...
.
சுவரில் மாட்டப்பட்டிருந்த கடிகாரத்தில் 9 ஆகிவிட்டதை காட்டும் விதமாக 9 மணிஅடித்து ஓய்ந்தது....
.
குளித்து முடித்து... காலண்டரில் தேதியை கிழித்தான்... 8-ம் தேதி போய்.. இன்று தேதி 9 எனக்காட்டியது...
.
வங்கிக்கு சென்றுவரலாம் என்று வங்கிக்கு செல்ல ஆட்டோ பிடித்தார்...
.
அதில் ஆட்டோ எண் 9 என வட்டம் போட்டு எழுதியிருந்தது...
.
வங்கியில் இறங்கி வங்கியில் நுழையும்போதுதான் கவனித்தான் வங்கியின் கதவு எண் 99 என இருந்தது..
.
வங்கியின் உள்ளே சென்று கணக்கரிடம் தன்னுடை பாஸ்புக்கை காண்பித்து பண இருப்பை சரிப்பார்த்தான் அதில் 9 இலட்சங்கள் உள்ளது எனக்காட்டியது...
.
இவனுக்கு ஆச்சரியமாக இருந்தது...
.
என்ன காலையில் இருந்து நமக்கு 9 எண் மட்டுமே கண்ணில் படுகிறதே என்று அப்போதுதான் அவனுக்கு நினைவுக்கு வந்தது...
.
இன்று ஏதோ நமக்கு இந்த 9 என்ற எண்ணில் அதிர்ஷ்டம் இருக்கிறது என்று நினைக்கிறேன்...
.
இந்த அதிர்ஷ்டத்தை எப்படியாவது பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நினைத்தான்...
.
அதன்படி அந்த 9 இலட்சத்தையும் எடுக்க செக் எழுதி கொடுத்தான்...
.
அவனுக்கு வந்த டோக்கன் எண் 999
.
அவனுக்கு மிகுந்த ஆச்சரியம்...
.
பணத்தை எடுத்துக்கொண்டு சாலையில் நடந்துச்செல்லும்போது... எதை எடுத்தாலும் 99 ரூபாய் என கடை கண்ணில் பட்டது..
.
அதில் ஒரு தொப்பி அவனை கவர்ந்தது.... அதை 99 ரூபாய் கொடுத்து வாங்கினான்... அப்போதுதான் அவனுக்கு குதிரைப்பந்தையம் நினைவுக்கு வந்தது...
.
நேராக குதிரைப்பந்தையம் நடக்கும் அந்த இடத்துக்கு சென்றான்..
.
வாயில் எண் 9 வழியாக உள்நுழைந்தான்....
.
அங்கிருந்த முகவரை சந்தித்தான்...
ஐயா மொத்தம் எத்தனை பந்தையங்கள் நடக்க இருக்கிறது... மொத்தம் 10 போட்டிகள் என பதில் வந்தது... அப்படி என்னறால் நான் 9-வது போட்டியில் பங்கெடுத்துக்கொள்கிறேன்....
.
பந்தையமாக நான் 9 இலட்சத்தை கட்டுகிறேன் என்று மொத்தப்பணத்தையும் கட்டினான்...
.
எல்லாப் போட்டிகளையும் பார்த்த அவன் 9-வது பந்தையம் வந்தவுடன் தானும் கலந்துக்கொண்டான்...
.
போட்டித்துவங்கியது... 10 குதிரைகள் ஓடியதில் குதிரை எண் 9 என எண்கொண்ட குரையின் மீது தன் மொத்தப்பணத்தையும் கட்டினான்....
.
இன்று எனக்கு 9-ல் அதிர்ஷ்ம் இருக்கிறது.. இன்றைய போடியில் நாம்தான் ஜெயிப்போம் என்று முழுமனதுடன் நம்பினான்...
.
அந்த முகவரும் இவரை அணுகி வினவினார்... ஏன் 9-வது பந்தையம்.. 9 எண் கொண்ட குதிரை.. 9 லட்சம்... இப்படியாய்... என கேட்டார்...
.
அவன் மீண்டும் நம்பிக்கையுடன் சொன்னான் இன்று எனக்கு 9-ல் அதிர்ஷ்டம் அதனால்தான் இப்படி என்று...
.
போட்டி துவங்கியது...
.
குதிரைகள் சீறிப்பாய்ந்து ஓடின...
.
பந்தையம் கட்டியவர்கள் பரபரப்பாய் ஆரவாரம் செய்துக்கொண்டிருந்தார்கள்....
.
போட்டி முடிந்தது....
.
இவன் பணம் கட்டிய குதிரை ஒன்பதாவதாக வந்தது....😜😝😜😝















































