Saturday, 30 August 2025

உங்கள் வாழ்க்கைத்துணை மேல் உங்களுக்கு இல்லாத 5 உரிமைகள்

 

திருமணத்திற்கு பிறகு, உங்களில் பலர் உங்கள் வாழ்க்கைத்துணை மேல் உங்களுக்கு சகல விதமான உரிமைகள் இருப்பதாக நினைக்கிறீர்கள்.

கிடையவே கிடையாது. உங்கள் வாழ்க்கைதுணை மேல் உங்களுக்கு உரிமை இருப்பது உண்மை தான். ஆனால், உங்கள் உரிமைக்கு ஒரு எல்லை கோடு கண்டிப்பாகக உண்டு.

உங்கள் வாழ்க்கைத்துணை மேல் நீங்கள் எடுக்க முடியாத 5 உரிமைகளை பார்க்கலாமா?

1. உங்கள் வாழ்க்கைத்துணையை உங்களுக்கு ஏற்றபடி மாற்றும் உரிமை உங்களுக்கு கிடையாது

உங்கள் வாழ்க்கைத்துணையை உங்கள் இஷ்டப்படி மற்றும் அதிகாரம் உங்களுக்கு இல்லை.

உங்களை மாற்றி கொள்ள சொன்னால் உங்களுக்கு பிடிக்குமா?

உங்களுக்கு பிடிக்காது அல்லவா?

உங்களுக்கு எப்படியோ, அதே மாதிரி தான் உங்கள் வாழ்க்கைத்துணைக்கும். உங்கள் வாழ்க்கைத்துணையின் நிறை குறைகளோடு நீங்கள் என்று கொண்டால் தான் உங்கள் திருமண வாழ்க்கை இனிக்கும்.

2. உங்கள் பெற்றோரை பார்த்து கொள்ளும் பொறுப்பை உங்கள் வாழ்க்கைத்துணை மேல் திணிக்கும் உரிமை உங்களுக்கு கிடையாது

ஒன்றை நன்றாக புரிந்து கொள்ளுங்கள். உங்கள் பெற்றோரை பார்த்து கொள்ளும் கடமை உங்களுடையது மட்டும் தான். உங்களை தான் உங்கள் பெற்றோர் பேணி வளர்த்தார்கள். அவர்கள் உங்கள் வாழ்க்கைத்துணைக்கு எதுவும் செய்தது கிடையாது. உங்களை பேணி வளர்த்த பெற்றோரை, அவர்கள் வயதான காலத்தில் பேணி பாதுகாப்பது உங்களுடைய கடமை. அது உங்கள் வாழ்க்கைத்துணையின் கடமையாக திணிக்கும் உரிமை உங்களுக்கு எந்நாளும் கிடையாது.

3. உங்கள் வாழ்க்கைத்துணையை மட்டம் தட்டும் உரிமை உங்களுக்கு கிடையாது

உங்கள் வாழ்க்கைத்துணையை உங்கள் மனம் போனபடி மட்டம் தட்டும் உரிமை உங்களுக்கு கிடையாது. கணவன் மனைவியை மற்றவர்கள் முன்னால் மட்டம் தட்டினால், அந்த அவமானம் அவருக்கு தான். அதே மாதிரி, மனைவி மற்றவர்கள் முன்னால் கணவரை அவமான படுத்தினால் அவப்பெயர் அவளுக்கு தான்.

4. உங்கள் வாழ்க்கைத்துணையின் லட்சியங்களை மறுக்கும் உரிமை உங்களுக்கு கிடையாது

உங்கள் வாழ்க்கைத்துணைக்கு வாழ்க்கையில் பல பல கனவுகள் இருக்கலாம். அதை நிறைவேற்றும் முழு உரிமை அவருக்கு உண்டு. அவர் கனவுகளை அழிக்கும் உரிமையை ஒரு போதும் கையில் எடுக்காதீர்கள்.

5. எல்லா பொறுப்புகளையும் உங்கள் வாழ்க்கைத்துணை மேல் செலுத்தும் உரிமை உங்களுக்கு கிடையாது

குடும்ப வாழ்க்கை தான் எத்தனை பொறுப்புகள் நிறைந்தது. குடும்ப பொறுப்புகளில் இருவருக்கும் சரி பங்கு உண்டு. மனைவி மட்டும் தான் பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும் என்று கணவர் நினைக்க உரிமை கிடையாது. அதே மாதிரி கணவன் தான் குடும்பத்தை சுமக்க வேண்டும் என்று மனைவி நினைக்க உரிமை கிடையாது . அப்படி அவள் நினைத்தால், அவரால் அந்த பாரத்தை சுமக்க முடியாது.

உங்கள் வாழ்க்கைத்துணையை திருமணம் செய்வதால், அவர் மேல் உங்களுக்கு எல்லா உரிமைகளும் இருக்கிறது என்று தப்பு கணக்கு போடாதீர்கள். அவர் மேல் உங்களுக்கு உள்ள உரிமைகளில் எல்லைக்கோடுகள் கண்டிப்பாக இருக்கிறது. அதை நீங்கள் உணர்ந்து கொண்டாலே போதும். உங்கள் திருமண வாழ்க்கை சுமுகமாக நடக்கும்

No comments:

Post a Comment