ஒரு நாள் ஒருவன் ஒரு பறவைகள் விற்பனை நிலையம் சென்றான்!
அங்கிருந்த கிளி என்ன விலை என்று கேட்க அதற்கு!! அவன் 500₹ என்று சொல்ல !!
ஆச்சரியம் அடைந்தவனாய் எதற்கு அவ்வளவு விலை என்று கேட்க !!
கடைக்காரர் அந்த கிளிக்கு கணிப்பொறி தெரியும்! அது வேர்டு, எக்ஸெல் எக்ஸ்பர்ட் அதான் அந்த விலை என்று சொல்ல!!
சரி அதன் அருகில் இன்னொரு கிளி இருக்க அதன் விலை என்ன என்று கேட்க !!
கடைக்காரர் அதன் விலை 1000₹ என்று சொல்ல மறுபடியும் என்ன காரணம் என்று கேட்க அதற்கு கடைக்காரர்!!
கிளிக்கு புரோகிராமிங், கோடிங் தெரியும்! என்றான் !!
ரொம்ப ஆவல் மிகுந்தவனாய் !! கூண்டில் ஒரு ஓரமாக ஒரு கிளி உறங்கி கொண்டு இருக்க அதன் விலை என்ன என்று கேட்க!!
அதற்கு அந்த கடைக்காரர்! அதன் விலை 5000₹ என்று சொல்ல அதிர்ச்சி அடைந்தவனாய் சரி அப்படி என்ன அந்த கிளி ஸ்பெஷலான வேலை செய்யும் என்று கேட்க!!
அதற்கு அந்த கடைக்காரர்!!
அது என்ன வேலை தெரியும் என்று எனக்கு தெரியாது!! ஆனால் மற்ற இரண்டு கிளிகளும் அந்த மூணாவது கிளியை " பாஸ் !! பாஸ் !! " என்று கூப்பிடும் அவ்வளவுதான்!!

No comments:
Post a Comment