மனைவி சொல்வதுதான் சரி ! என்பதற்கு மூன்று ஆதாரங்களுடன் விளக்க முடியுமா ?
ஆதாரம் - !
கணவன் : " கூட்டுல உப்பு அதிகமா இருக்கு..."
மனைவி : "உப்பு சரியாதான் இருக்கு... காய் கொறஞ்சு போச்சு, காய் நெறய வாங்க சொன்னா எங்க கேக்றீங்க....."
முடிவு - அப்ப மனைவி சொல்வது சரி !!!!
கணவன் - வெங்காய பஜ்ஜில வெங்காயத்தை தேடித்தான் பார்க்க வேண்டியிருக்கு,"
மனைவி - "இருக்றத சாப்பிடுங்க!!
இனி மைசூர்பாக் ல மைசூரை தேடுவீங்களாக்கும்....???"
முடிவு - அப்ப மனைவி சொல்வதுதான் சரி !!!!
கணவன் : "3நாளா தொடர்ந்து பீன்ஸ் பொரியல் பண்ணுறீயே, இனி ஒரு மாசம் நான் பீன்ஸ் சாப்பிட மாட்டேன்!!!!"
மனைவி "இதையே, தினம் பீர் குடிக்கும்போதும் நினைக்கலாமே..????"
கணவன் "நாளைக்கும் பீன்ஸ் பொரியல் பண்ணும்மா" 😁
முடிவு - அப்ப மனைவி சொல்வது மட்டும்தான் தான் சரி !!!!
No comments:
Post a Comment