Showing posts with label wife. Show all posts
Showing posts with label wife. Show all posts

Wednesday, 9 September 2026

மாமியார்- மருமகள்

 

உங்க பிள்ளை கிட்டே,நான் எதை சொன்னாலும் அவபேச்சைகேட்காதேடான்னு தினமும்,மந்திரம் போல ஓதி சொல்லி அனுப்புறீங்களே…உங்களுக்கு வெக்கமாஇல்லை….

அவன் என் பிள்ளை…. என் பேச்சை தான் கேப்பான்….இதிலே என்ன வெக்கம்

சரியான அம்மா…நீங்க. வெட்கம்…மானம் ..சூடு…. சொரணை எதுவும் இல்லை உங்களுக்கு…. நான் எதை சொல்ல வாயை தொறந்தாலும் ரெண்டு காதையும் பொத்திக்கிறாரு….. எதையும் பேச முடியலே…

அடியே ரொம்ப ஓவாரா பேசறே….. ஒரு மாமியாரை பேசும் பேச்சா இது….

மாமியார்…….பெரியமாமியார்கொஞ்சம் கூட இங்கிதம்இல்லை…. படிப்பறிவு இருந்தா தானே……

அப்ப……என்னை அறிவுகெட்டவள் ன்னுசொல்றியா…. எல்லாம் நீ வேலைக்கு போற திமிரு…. இப்படி எல்லாம் பேச சொல்லுது உன்னை…..

பொண்டாட்டி சொல்லறதை கொஞ்சமாவது ஒரு ஆம்பிளை கேக்கணும்…. அது தான் குடும்பத்துக்கு அழகு…..

ஒரு நாளைக்கு கொஞ்சம் பேசுவே….. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா… பேசி தலையணை மந்திரம் ஓதி….அவனை எங்களிடமிருந்து பிரிப்பே…. இந்த காலாத்துபொட்ட புள்ளைங்க பத்தி தெரியாதா எனக்கு….

பாவி….. பாதகி மாமியார்…நீ…..இந்த குடும்பம் உருபடவே படாது….. ஒரு பொம்பளைக்கு இவ்வளவுஆணவம் இருக்க கூடாது…

நீ தாண்டி ஆணவகாரி…. அகந்தை எல்லாம் கலந்து வளர்த்தாங்க உங்க வீட்டுலே….

நீங்கமட்டும் உங்க பிள்ளை யை எப்படி வளர்த்தீங்கலாம்…. பொண்டாடடிஎன்ன சொல்ல வறா….. நல்லதா…. கெட்டதா…ன்னு காதை கொடுத்து கேக்கணும்…

என்னடி பெருசா நல்லது சொல்ல போறே……அந்த எண்ணம் கூட இருக்கா உனக்கு……

இந்தபாழடைந்தவீட்டுலேஇருபதாயிரம் வாடகை கொடுத்துக்கினேஇருங்க காலத்துக்கும்…. அதுவும் நீங்க படுக்குற கூடத்திலே இன்னைக்கோ நாளைக்கோ சுவர் இடிஞ்சி உங்க தலையிலே விழுற மாதிரி இருக்கு….

ஆமா.. நீ ஆபத்பாண்டாவ….நீ தான் காப்பாத்தபோறீயா…. அதான் நல்லவீடா பாக்கறேனே…. கிடைக்கலயே…

ஏன் வாடகை வீட்டுக்கு இனி போகணும்….. குடும்பத்தோடநாம எல்லாம் சொந்த வீட்டுக்கு போலாம் ன்னு பார்த்தா….. அவர் கிட்ட பேச விடாமே செஞ்சிட்டியே…

என்னடி சொல்றே….. சொந்த வீடா…..

ஆமா…நான் வேலை செய்யுற பாங்க்குலேஹௌசிங் மேளாநடந்தது.,. எழுபதுலட்சம்ரூபாய் வட்டியி ல்லாகடன் கொடுப்பாங்க…அதை வாங்கி சொந்தமாஒரு வீடுவாங்கலாமுன்னுஅவர் கிட்ட…..டிஸ்கசன்பண்ணலாமுன்னு., பத்து நாளா ட்ரை பண்றேன்….. அவர் என்னடான்னா.. காதை மூடிக்கிறாரு…

அய்யோ ராமா…இதை என் கிட்ட மொதலில் சொல்லியிருக்ககூடாதா செல்லம்…அவனை ஏன் கேக்குறே…. நீ வாங்கு…மருமகளே…..

இப்ப முடியாது…. டைம் பார் ஆயிடிச்சி…. இனி அடுத்த வருஷ ஹௌசிங் மேளா தான்….

நான்.. பாவிடி,தங்கமே….. உன் நல்ல எண்ணத்தை புரிஞ்சிக்காமே….. என்னென்னமோ செய்துட்டேன்…. பேசிட்டேன்…..

அட விடுங்க அத்தை…. அடுத்த வருஷம் லோன் வாங்கி வீடு வாங்கினா போகுது

Saturday, 18 July 2026

பொண்டாட்டியின் ஒன்பது அவதாரங்கள்

 பொண்டாட்டியின்*

ஒன்பது அவதாரங்கள்

1) காலை rush hour, Office Work.. *அஷ்ட லஷ்மி*

2) குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் போது.... *சரஸ்வதி*

3) பணத்தை வீட்டுச் செலவுகளிலிருந்து மிச்சப்படுத்தும் போது... *மஹாலக்ஷ்மி*

4) உணவு தயாரிக்கும் போது...

*அன்னபூரணி*

5) தேவையான நேரத்தில் குடும்பத்திற்காக உறுதியாக நிற்கும் போது....

*பார்வதி*

6.) உபயோகப்படுத்திய ஈர டவலை கணவன் bed மேலே போடும் போது....

*துர்கா*

7) கணவன் தரமற்ற காய்கறிகளை வாங்கி வரும் போது... *பத்ரகாளி*

8) சிரமப்பட்டு செய்த தன் அலங்காரத்தை,கணவன் கவனிக்காமல் அலட்சியம் செய்யும்போது.... *மகிஷாசுரமர்தினி*

9) கணவன் மற்றொரு பெண்ணை புகழும் போது.... *சொர்ணாக்கா

Wednesday, 3 September 2025

மனமகிழ வைத்து கொள்ளுங்கள் உங்க மனைவியை..

ஒரு பெண்ணிற்கு இந்த உலகில் எவ்வளவு சந்தோஷங்கள் கிடைத்தாலும் அவள் தேடும் ஒரே சந்தோஷம் அவள் கணவனின் அன்பு மட்டுமே..!

ஒரு பெண்ணுக்கு மூன்று வேளை உணவும், உடுத்த உடையும் கொடுத்தால் போதும் அவள் வாழ்க்கைக்கு என்று சில கணவன்மார்கள் எண்ணம்.

இவை அனைத்தையும் இல்லாமல் ஒரு பெண் வாழ்ந்துவிடுவாள். ஆனால் கணவனின் அன்பு இல்லாமல் வாழமாட்டாள்..

உங்கள் மனைவியின் ஒரு சில தவறுகளை அடிக்கடி குத்தி காட்டாமல் அவளின் பல நல்ல செயல்களில் ஒன்றையாவது சில முறையாவது சொல்லி காட்டுங்கள்...

அப்போது தான் அவள் வாழும் வாழ்க்கைக்கு ஓர் அர்த்தம் கிடைக்கும்..

தனது அனைத்து சொந்த பந்தங்களையும் விட்டு வந்து தன் கணவனையே உலகமாக நினைக்கிறாள்....

நீங்கள் அவளை உலகமாக நினைக்க வேண்டாம். ஒரு உயிராக மதித்தாலே போதும் ஆண்களே......

அவள் உலகமே தன் காலடியில் இருப்பது போல எண்ணிக் கொள்வாள்.

மனைவியிடம் உன் கவுரவத்தைக் காட்டாதே. அவள் உன்னை மட்டுமே நம்பிவந்தவள் உன் உறவுகளை அல்ல

""என் சொத்து., என் சம்பாத்தியம்.,என் இஷ்டம் என்றால் அவள் யார்.? உன்னுடன் வாழும் வாழ்க்கைக்கு அர்த்தம் என்ன.?

அவளுக்கென்று சிறு சிறு ஆசைகள் சந்தோசத்தை உன்னிடம் எதிர் பார்க்கக் கூடாதா.? நான் நீ அல்ல நாம்.. மனைவி என்பவள் நம் வாழ்வின் பொக்கிஷம்

இதை புரிந்து கொண்டு வாழ்க்கை நடத்துபவர் களால் மட்டுமே மனைவியின் மகத்துவத்தை உணர முடியும்..

யாராலும் மறுக்க முடியாத உண்மை கணவன் இல்லை என்றால் மனைவி விதவைதான்

ஆனால் மனைவி இல்லை என்றால் கணவன் ஒரு அனாதை தான்..

மனைவியை தன் பெற்றோர், உறவுகள் வீடுகளுக்கு செல்ல விடாமல் தடுத்து வைத்து ஒரு அடிமையைப் போல் நடத்துபவர்களே!

அவளும் இரத்த பாசம் உள்ள ஒரு உயிர் என்பதை மறக்காதீர்கள்!

திருமணம் செய்து கொண்ட ஒரே காரணத்திற்காக அவளது உறவுகளை பிரிக்கும் முயற்சி உரிமை கணவனுக்கு கிடையாது?.

ஒரு பெண் கணவனிடம் எதிர்ப்பார்பது காசு பணம் காரு பங்களா இல்லீங்க...எவ்வளவு சண்டை சச்சரவுகள் குடும்பத்தில் வந்தாலும் யாரிடமும் தன் மனைவியை விட்டு கொடுக்காமல் உனக்காக நான் இருக்கேன் கவலைபடாதே என்று ஆறுதலோடு அரவணைக்கும் கணவன் கிடைத்தாலே போதும்

அவள் வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சியாக மனநிறை வோடு வாழ்வாள்...

உங்கள் மனைவியை ஒருபோதும் வெறுத்து விடாதீர்கள்..!!

ஏனென்றால் உங்களுடன் எவ்வளவு சண்டை போட்டாலும் உங்களை அதிகமாக நினைத்து கொண்டிருப் பவள் அவள் மட்டும் தான்..!!

பிரசவ வலியை விட கொடுமை யானது கணவன் தன்னை புரிந்து கொள்ளாமல் இருப்பது தான் ஒரு பெண்ணுக்கு மிகவும் வலியை தரும்..

மனைவியை அடிக்கும் கணவன்மார்களே..! உங்கள் உயிரை சுமந்து தன்னுயிரை பணயம் வைத்து அவள் பட்ட பிரசவ வலியை நினைத்துப் பாருங்கள்..

அடிக்கவரும கை அந்த நிமிடமே அணைக்கமட்டுமே துடிக்கும்..

பெண்களின்...!! அன்பை போலவே அவளின் வெறுப்பும் மிக ஆழமானது.. அன்பு காட்டியவர்கள் அவளை எட்டி உதைத்தாலும் ஏற்று கொள்வாள்..

ஆனால்.. அவள் வெறுத்தவிட்டவர்கள் கோடி கொட்டி கொடுத்தாலும் ஏற்றுக்கொள்ள மாட்டாள்..

மனமகிழ்ழ வைத்து கொள்ளுங்கள் உங்க மனைவியை...

#படித்ததில் பிடித்தது

Saturday, 30 August 2025

மனைவி சொல்வதுதான் சரி

மனைவி சொல்வதுதான் சரி ! என்பதற்கு மூன்று ஆதாரங்களுடன் விளக்க முடியுமா ?

ஆதாரம் - !

கணவன் : " கூட்டுல உப்பு அதிகமா இருக்கு..."

மனைவி : "உப்பு சரியாதான் இருக்கு... காய் கொறஞ்சு போச்சு, காய் நெறய வாங்க சொன்னா எங்க கேக்றீங்க....."

முடிவு - அப்ப மனைவி சொல்வது சரி !!!!


கணவன் - வெங்காய பஜ்ஜில வெங்காயத்தை தேடித்தான் பார்க்க வேண்டியிருக்கு," 

மனைவி - "இருக்றத சாப்பிடுங்க!!

இனி மைசூர்பாக் ல மைசூரை தேடுவீங்களாக்கும்....???"

முடிவு - அப்ப மனைவி சொல்வதுதான் சரி !!!!



கணவன் : "3நாளா தொடர்ந்து பீன்ஸ் பொரியல் பண்ணுறீயே, இனி ஒரு மாசம் நான் பீன்ஸ் சாப்பிட மாட்டேன்!!!!"

மனைவி "இதையே, தினம் பீர் குடிக்கும்போதும் நினைக்கலாமே..????"

கணவன் "நாளைக்கும் பீன்ஸ் பொரியல் பண்ணும்மா" 😁

முடிவு - அப்ப மனைவி சொல்வது மட்டும்தான் தான் சரி !!!!

உங்கள் வாழ்க்கைத்துணை மேல் உங்களுக்கு இல்லாத 5 உரிமைகள்

 

திருமணத்திற்கு பிறகு, உங்களில் பலர் உங்கள் வாழ்க்கைத்துணை மேல் உங்களுக்கு சகல விதமான உரிமைகள் இருப்பதாக நினைக்கிறீர்கள்.

கிடையவே கிடையாது. உங்கள் வாழ்க்கைதுணை மேல் உங்களுக்கு உரிமை இருப்பது உண்மை தான். ஆனால், உங்கள் உரிமைக்கு ஒரு எல்லை கோடு கண்டிப்பாகக உண்டு.

உங்கள் வாழ்க்கைத்துணை மேல் நீங்கள் எடுக்க முடியாத 5 உரிமைகளை பார்க்கலாமா?

1. உங்கள் வாழ்க்கைத்துணையை உங்களுக்கு ஏற்றபடி மாற்றும் உரிமை உங்களுக்கு கிடையாது

உங்கள் வாழ்க்கைத்துணையை உங்கள் இஷ்டப்படி மற்றும் அதிகாரம் உங்களுக்கு இல்லை.

உங்களை மாற்றி கொள்ள சொன்னால் உங்களுக்கு பிடிக்குமா?

உங்களுக்கு பிடிக்காது அல்லவா?

உங்களுக்கு எப்படியோ, அதே மாதிரி தான் உங்கள் வாழ்க்கைத்துணைக்கும். உங்கள் வாழ்க்கைத்துணையின் நிறை குறைகளோடு நீங்கள் என்று கொண்டால் தான் உங்கள் திருமண வாழ்க்கை இனிக்கும்.

2. உங்கள் பெற்றோரை பார்த்து கொள்ளும் பொறுப்பை உங்கள் வாழ்க்கைத்துணை மேல் திணிக்கும் உரிமை உங்களுக்கு கிடையாது

ஒன்றை நன்றாக புரிந்து கொள்ளுங்கள். உங்கள் பெற்றோரை பார்த்து கொள்ளும் கடமை உங்களுடையது மட்டும் தான். உங்களை தான் உங்கள் பெற்றோர் பேணி வளர்த்தார்கள். அவர்கள் உங்கள் வாழ்க்கைத்துணைக்கு எதுவும் செய்தது கிடையாது. உங்களை பேணி வளர்த்த பெற்றோரை, அவர்கள் வயதான காலத்தில் பேணி பாதுகாப்பது உங்களுடைய கடமை. அது உங்கள் வாழ்க்கைத்துணையின் கடமையாக திணிக்கும் உரிமை உங்களுக்கு எந்நாளும் கிடையாது.

3. உங்கள் வாழ்க்கைத்துணையை மட்டம் தட்டும் உரிமை உங்களுக்கு கிடையாது

உங்கள் வாழ்க்கைத்துணையை உங்கள் மனம் போனபடி மட்டம் தட்டும் உரிமை உங்களுக்கு கிடையாது. கணவன் மனைவியை மற்றவர்கள் முன்னால் மட்டம் தட்டினால், அந்த அவமானம் அவருக்கு தான். அதே மாதிரி, மனைவி மற்றவர்கள் முன்னால் கணவரை அவமான படுத்தினால் அவப்பெயர் அவளுக்கு தான்.

4. உங்கள் வாழ்க்கைத்துணையின் லட்சியங்களை மறுக்கும் உரிமை உங்களுக்கு கிடையாது

உங்கள் வாழ்க்கைத்துணைக்கு வாழ்க்கையில் பல பல கனவுகள் இருக்கலாம். அதை நிறைவேற்றும் முழு உரிமை அவருக்கு உண்டு. அவர் கனவுகளை அழிக்கும் உரிமையை ஒரு போதும் கையில் எடுக்காதீர்கள்.

5. எல்லா பொறுப்புகளையும் உங்கள் வாழ்க்கைத்துணை மேல் செலுத்தும் உரிமை உங்களுக்கு கிடையாது

குடும்ப வாழ்க்கை தான் எத்தனை பொறுப்புகள் நிறைந்தது. குடும்ப பொறுப்புகளில் இருவருக்கும் சரி பங்கு உண்டு. மனைவி மட்டும் தான் பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும் என்று கணவர் நினைக்க உரிமை கிடையாது. அதே மாதிரி கணவன் தான் குடும்பத்தை சுமக்க வேண்டும் என்று மனைவி நினைக்க உரிமை கிடையாது . அப்படி அவள் நினைத்தால், அவரால் அந்த பாரத்தை சுமக்க முடியாது.

உங்கள் வாழ்க்கைத்துணையை திருமணம் செய்வதால், அவர் மேல் உங்களுக்கு எல்லா உரிமைகளும் இருக்கிறது என்று தப்பு கணக்கு போடாதீர்கள். அவர் மேல் உங்களுக்கு உள்ள உரிமைகளில் எல்லைக்கோடுகள் கண்டிப்பாக இருக்கிறது. அதை நீங்கள் உணர்ந்து கொண்டாலே போதும். உங்கள் திருமண வாழ்க்கை சுமுகமாக நடக்கும்

Monday, 25 August 2025

சந்தேக மனைவி


புருஷனை சந்தேகப்பட்டு மனைவி ஒரு நாள் அவனோட மொபைல் போனை பரிசோதிச்சா...

புருஷனோட contact லிஸ்ட் ல...

Super women

Sweet heart

Dream girl

Princess

Lovely lady

இந்த பேர் எல்லாம் பார்த்து கொலை வெறி ஆகிட்டா...

இன்னைக்கு இவனை உண்டு இல்லைனு பண்ணிடலாம்ன்னு...

ஒவ்வொரு நம்பருக்கா கால் பண்ண ஆரம்பிச்சா...

முதல் நம்பருக்கு கால் பண்ணா அவனோட அம்மா அட்டெண்ட் பண்ணாங்க...

ரெண்டாவது நம்பருக்கு கால் பண்ணா அவன் தங்கச்சி அட்டெண்ட் பண்ணிச்சு...

மூணாவது நம்பருக்கு கால் பண்ணா அது (மனைவி) அவளோட நம்பரு...

நாலாவது நம்பருக்கு கால் பண்ணா அது மகளோட நம்பரு...

கடைசி நம்பருக்கு கால் பண்ணா மாமியார் நம்பரு....

மனம் நெகிழ்ந்து போன பொண்டாட்டி

அப்பாவி புருஷனை சந்தேகப்பட்டுடோமேன்னு ரொம்ப வருத்தப்பட்டு புருஷனை கூப்பிட்டு மன்னிப்பு கேட்டு 5000 டாலர் பணத்தையும் கொடுத்து போன மாசம் பிரெண்ட்ஸ் கூட அவுட்டிங் போறேன்னு சொன்னீங்க நான் வேண்டாம்ன்னு சொல்லிட்டேன்...

இந்த வாரம் போய்ட்டு வாங்கன்னு வழி அனுப்பி வச்சா...

வெளிய வந்த நம்மாளு Mechanic ன்னு save பண்ணி வச்சிருந்த அவன் ஆளுக்கு கால் பண்ணி அவுட்டிங் போய்ட்டு வந்தான்...