தமிழ்நாட்டில் 15 ரூபாய் நோட்டு புழக்கத்தில் இருந்தது தெரியுமா?
1843 ஜூலை மாதம் முதல் தேதியில் அன்றைய சென்னை மாகாண அரசு சென்னை வங்கி யைத்
தொடங்கியது. அதே போல் வங்காள வங்கி கல்கத்தாவிலும், பம்பாய் வங்கி பம்பாய்
நகரத்-திலும் தொடங்கப்பட்டன. மூன்று வங்கிகளுக்கும் அன்றைய முதலீடு 30 லட்சம்
ரூபாக்கள் மட்டுமே! பிரிட்டிஷ் அரசு வங்கிகள் 1806 ஆம் ஆண்டிலிருந்துதான்
இந்தியாவில் செயல்-பட்டன. இதற்கு மாற்றாகத்தான் மூன்று வங்கி-களும் தொடங்கப்பட்டன.
இவை தொடங்கப்-பட்டதும் முந்தைய வங்கிகள் மூடப்பட்டு-விட்டன. அந்தக் காலத்தில் நாள்
ஒன்றுக்கு, இந்த வங்கிகளில் 23 லட்சம் ரூபா வரை வணிகம் (TRANSACTIONS) நடந்துள்ளன.
.
சென்னை வங்கியின் சார்பாக வெளியிடப்-பட்டதுதான் 15 ரூபா நோட்டு. 1817 இல்
இருந்து 1827 வரை சென்னை மாகாண ஆளுநராக இருந்தவர் சர். தாமஸ் மன்றோ. சேணமே இல்லாத
குதிரையில் ஏறி அவர் அமர்ந்-திருக்-கும் தோற்றச் சிலை. சென்னை, தீவுத்-திடலில்
இன்றும் நாம் பார்க்கிறோம். சென்னை நகரின் சின்னம் என்றே கூறத்தக்க வகையில் உள்ள
சிலை அது. அவரைப் பெருமைப்படுத்தும் வகையில் அவரது குதிரை மேல் அமர்ந்த நிலை படம்
பொறித்து 15 ரூபா நோட்டுகளை வங்கி வெளி-யிட்டது. தமிழ், தெலுகு, உருது மற்றும்
இங்கி-லீஷ் ஆகிய மொழிகளில் 15 எண் நான்கு மூலைகளிலும் அச்சிடப்பட்டுள்ளது.
|
15 ரூபாய் நோட்டு
|
|
Bank of Madras 1843 |
|
Now |
JP,
ReplyDeleteIt's really "one-of-a-kind-Madras-news". First time hearing about 15 Rs. note.
TFS :)
what does "சேணமே" mean??
ReplyDeleteLeather seat - saddle - சேணம்
Delete