Saturday, 8 September 2012

WEEKEND WISDOM

வாழ்க்கை  பற்றி வைரமுத்து.... 


ஒவ்வொரு மனிதனும் நான்கு வகை பந்துகளோடு                   பயணமாகிறான் .
                 வலக்கரத்தில் ஒரு பந்து ;இடக்கரத்தில் ஒரு பந்து
                 வலகக்கர த்தில் ஒரு பந்து;  இடக்கரத்தில் ஒரு பந்து ;

                 ஒரு பந்துக்கு பெயர் தொழில் ;இன்னொரு பந்துக்கு பெயர்
                 குடும்பம் ;வேறொரு பந்துக்கு பெயர் நட்பு;
                 மற்றொரு பந்துக்கு பெயர் உடல்நலம் ;
                 இந்த நான்கு பந்துகளும் விழுந்து விடாமல் கடைசி வரை
                 கரை சேர்பவனே கடமை வீரன் .
                 நான்கு பந்துகளில் ஒன்று தான் ரப்பர் பந்து.
                அது தொழில் எனும் பந்து கீழே விழுந்தாலும் உடையாது ;
                கைக்கு திரும்பிவிடும் .
                 மற்ற மூன்று பந்துகளும் கண்ணாடி பந்துகள் கீழே
                 விழுந்தால் உடைந்து விடும்.




  இன்னும் கொஞ்சம் பசியுள்ளபோதே நிறுத்திவிட
                 வேண்டும் உணவை;
                 இன்னும் கொஞ்சம் சக்தியுள்ளபோதே அடக்கிவிட
                 வேண்டும் கலவியை;
                 இன்னும் கொஞ்சம் ஈட்ட முடியும் போதே துரத்திவிட
                 வேண்டும் பணத்தை.
                 இன்னும் கொஞ்சம் வாழமுடியும் போதே விட்டுவிட
                 வேண்டும் மூச்சை.
                 இந்த முயற்சிகளுக்கும் - முடியாமைகளுக்கும்
                 இடைவெளியில் பாசியாய் மிதந்து கொண்டிருக்கிறது
                 பாவப்பட்ட மனித வாழ்க்கை.




செருப்பு தைத்தாலும் செயற்கைகொள் செய்தாலும் அதில்
                முதலிடத்தில் இருங்கள்!
                 எந்தப் போர்க்களத்திலும் உங்கள் முதல் ஆயுதம் சத்தியமாக
                 இருக்கட்டும். சத்தியம் உங்கள் பகைவரின் வலிமை
                 பாதியாகி விடும்.
                 உங்கள் வெற்றி தனிமனித வெற்றியாக குறுகி விடாமல்
                 சமூக வெற்றியாக நீளட்டும்.
                 எந்த வெற்றியும் மனித நேயத்தில் நீளட்டும்.





சேமிப்பு  மூன்றாக இருக்க வேண்டும்
                   சோறு
                   அரிசி
                   விதைநெல் என்பதை போல
                   சோறு - இன்றையத்தேவை
                   அரிசி - நாளையத்தேவை
                   விதைநெல் - எதிர்காலத்தேவை 

2 comments:

  1. வைரவரிகள்.. இவர் எழுதும் வரிகள் வைரம் போல் ஜொலிப்பதால் தான் இவருக்கு வைரமுத்து என்று பெயர்வைத்தார்களோ?

    ReplyDelete
  2. so so so true JP, வைரமுத்து has explained beautiful philosophy simply but powerfully

    ReplyDelete