Thursday, 20 September 2012

இன்று (கேட்டு) ரசித்த பாடல் வரிகள் - 8

ஆண்டவனின்  ஆறு கட்டளைகள் 

ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
தேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு 

தெய்வத்தின் கட்டளை ஆறு
தெய்வத்தின் கட்டளை ஆறு
ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு


ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார் உள்ளத்தில் உள்ளது அமைதி
இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நியதி
ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார் உள்ளத்தில் உள்ளது அமைதி
இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நியதி
சொல்லுக்குச் செய்கை பொன்னாகும் 

வரும் துன்பத்தில் இன்பம் பட்டாகும்
சொல்லுக்குச் செய்கை பொன்னாகும் 

வரும் துன்பத்தில் இன்பம் பட்டாகும் - இந்த
இரண்டு கட்டளை அறிந்த மனதில் 

எல்லா நன்மையும் உண்டாகும்
எல்லா நன்மையும் உண்டாகும்

ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு


உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால் 
உலகம் உன்னிடம் மயங்கும் - 
நிலை உயரும் போது பணிவு கொண்டால் 
உயிர்கள் உன்னை வணங்கும்
உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால்

 உலகம் உன்னிடம் மயங்கும் -
 நிலை உயரும் போது பணிவு கொண்டால் 
உயிர்கள் உன்னை வணங்கும்
உண்மை என்பது அன்பாகும்

 பெரும் பணிவு என்பதும் பண்பாகும்
உண்மை என்பது அன்பாகும் 

பெரும் பணிவு என்பது பண்பாகும் - இந்த
நான்கு கட்டளை அறிந்த மனதில் 

எல்லா நன்மையும் உண்டாகும்
எல்லா நன்மையும் உண்டாகும்

ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு


ஆசை கோபம் களவு கொள்பவன் பேசத் தெரிந்த மிருகம்
அன்பு நன்றி கருணை கொண்டபவன் மனித வடிவில் தெய்வம் - 

இதில் மிருகம் என்பது கள்ளமனம் 
உயர் தெய்வம் என்பது பிள்ளை மனம் - இந்த
ஆறு கட்டளை அறிந்த மனது 

ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்
ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
தேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு
தெய்வத்தின் கட்டளை ஆறு


ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு




உலகம் சுற்றும் விநாயகன்  

5 comments:

  1. luv உலகம் சுற்றும் விநாயகன்...too cute!! :)

    ReplyDelete
  2. நல்ல பாடல்..எனக்கும் மிகவும் பிடிக்கும்! விநாயகரின் வாகனம் எத்தனை CC..எவ்வளவு மைலேஜ் கொடுக்கும்? :) :)

    ReplyDelete
    Replies
    1. கண்ணுக்குத் தெரியாத மூஞ்சூறு, பெரிய உருவம் கொண்ட விநாயகருக்கு வாகனமாவது போல், நம் கண்ணுக்கு புலப்படாத மூச்சுகாற்று நம் வினையாகிய உடலைத் தூக்கிச் செல்ல வாகனமாக இருக்கிறது. அந்த மூச்சு, நம் உடலில் இல்லையெனில், இந்த உடலைச் சுமந்து செல்ல நான்கு பேரின் உதவி தேவைப்படுகிறது.

      ஆகவே, இந்த மூச்சுக்காற்றே பெருத்த உடலைத் தூக்கிச் செல்ல வாகனமாகி வருகிறது என்கிற பேருண்மையைச் சொல்கிறது இந்த வாகன அமைப்பு.

      எனவே CC கணக்கு இந்த வாகனத்துக்கு சரியா வராது..
      "மயிலே"ஜ் பத்தி முருகன்கிட்டதான் கேக்கணும்!

      Delete
    2. Love "மயிலே"ஜ் reply

      Delete
  3. Lov thumbikei aatufying :)

    ReplyDelete