ரஜினிகாந்த் சொற்பொழிவு -
கடவுள் இருக்கிறாரா...?
கடவுள் இருக்கிறாரா...?
ஆண்டவன் இருக்கான்... இல்லேன்னு யுகம் யுகமா பேசிக்கிட்டிருக்காங்க. வசிஷ்டருக்கும்
விஸ்வாமித்திரருக்கும் சண்டை வருது. வசிஷ்டர் வாயால நான் பிரம்ம ரிஷி பட்டம்
வாங்கறேன்னு. விஸ்வாமித்திரர் ஒரு அகோரி. கடவுள் நம்பிக்ககை இல்லாதவர். வசிஷ்டர்
சாஸ்துவோக்தமா... கடவுள், கைலாசம், வைகுந்தம், வேதம் அப்டி போறவரு. விஸ்வாமித்திரர்
கடவுளை நம்பாதவர், பஞ்ச பூதங்களை நம்புறவர். அப்படிப்பட்ட விஸ்வாமித்திரர்
வசிஷ்டரிடமிருந்து பிரம்ம ரிஷி பட்டம் வாங்கினார். ஆக அந்த காலத்திலேருந்தே கடவுள்
இருக்கானா இல்லையான்னு விவாதம் நடந்துகிட்டுதானிருக்கு.
இப்ப ரீசன்டா, டிடி ரங்கராஜனோட டிஸ்கோர்ஸ் பார்த்தேன். அவர் ஒரு சம்பவம் சொல்றார். அவர் அமெரிக்காவில் ஒரு ட்ரெயின்ல ஒரு சயின்டிஸ்ட். அவருக்கு முன்னால கொஞ்சம் சின்ன வயசு... பைபிள் படிச்சிக்கிட்டிருக்கார்.
உடனே சயின்டிஸ்ட் அந்த இளைஞரிடம், 'என்ன பண்றீங்க'ன்னு கேக்கறார். உடனே பைபிள் படிச்சிக்கிட்டிருக்கேன்னு சொல்றார்.
'இல்ல, என்ன வேலை செய்யறீங்கன்னு' கேக்கறார்.
உடனே 'சயின்டிஸ்ட்' என்கிறார் இளைஞர்...
'ஓ.. சயின்டிஸ்டா, சரி என்ன படிச்சிக்கிட்டிருக்கே'...
'பைபிள்'.. அப்படீன்னு இளைஞர் சொல்றார்.
உடனே, 'ஏம்பா, அறிவிருக்கா... இது சயின்டிபிக் யுகம், சயின்டிபிக் காலம், எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறோம்... நீயும் சயின்டிஸ்ட் என்கிறாய். இன்னும் நீ மதம், கடவுள், பைபிள், கிறைஸ்ட்டுனு படிச்சிக்கிட்டு உட்காந்திருக்கியே, நாமளே இப்படி உட்கார்ந்துட்டா, எப்படி நாடு முன்னேறும். மக்கள் என்ன ஆவறது. கொஞ்சமாவது அறிவை வளத்துக்க வேண்டாமா.. இனிமேலாவது இந்த புக்கு, பைபிளையெல்லாம் தூக்கி போடு, கடவுளு, மண்ணாங்கட்டின்னு' சொல்லிட்டார்.
'சரி'..ன்னு கேட்டுக்கிட்டார்.
'நீ ப்ரீயா இருக்கும்போது என்னை வந்து பார். இந்தா என் கார்டு... பேசலாம்ட-னு சொல்றார் சயின்டிஸ்ட்.
ஸ்டேஷன் வந்ததும், இறங்குறாங்க. கிளம்பும்போது, 'சரி, நான் என்னை உன்கிட்ட அறிமுகப்படுத்திக்கிட்டேன். நீ உன்னை என்கிட்ட அறிமுகப்படுத்திக்கவே இல்லையே'ன்னு கேட்டார் சயின்டிஸ்ட்.
உடனே, அந்த இளைஞர் தன் கார்டை கொடுக்கிறாங்க. அதை திருப்பி பார்த்தா, அது தாமஸ் ஆல்வா எடிசன்!
உடனே அந்த சயின்டிஸ்ட், 'சார் மன்னிக்கணும்... நீங்க எனக்கு அப்பாயின்ட்மெண்ட் கொடுக்கணும். உங்களைப் பார்க்கணும்னு', கேட்கிறார்.
'சரி வாங்கன்னு' சொல்லி டைம் கொடுத்தார் எடிசன். அந்த டைமுக்கு தாமஸ் ஆல்வா எடிசன் லேபுக்கு இந்த சயின்டிஸ்ட் போறாங்க.
அந்த லேபுல, ஒரு பெரிய சோலார் சிஸ்டம் மாடல் ஒன்றை தாமஸ் ஆல்வா எடிசன் செஞ்சு வச்சிருக்கார்.
அதைப் பார்த்துவிட்ட சயின்டிஸ்ட், 'என்ன சார்.. இவ்வளவு அருமையா இருக்கு, இதை யார் செஞ்சாங்க, எத்தனை பேர் செஞ்சாங்க, பார்ட்ஸ் எங்கே கிடைச்சது'.. ன்னு கேட்டார்.
அதற்கு தாமஸ் ஆல்வா எடிசன், 'திடீர்னு ஒரு நாள் கதவைத் திறந்து பார்த்தேன். இந்த மிஷின் இருந்துச்சி'ன்னு சொல்றார்.
'சார், தமாஷ் பண்ணாதீங்க. நான் சீரியஸா கேக்கறேன். இதை எப்படி செஞ்சீங்க'ன்னு கேக்கறார் சயின்டிஸ்ட்.
'இல்லப்பா.. உண்மையிலேயே நான் ஒண்ணும் பண்ணல. திடீர்னு கதவை திறந்து பார்த்தேன். இது இங்கே இருந்தது'...ன்னு எடிசன் சொன்னாங்க.
'சார்... சீரியஸாவே நான் கேக்கறேன்.. நான் தெரிஞ்சிக்க ஆசைப்படறேன்... சொல்லுங்க'ன்னு கேட்டார் சயின்டிஸ்ட்.
'ஏம்ப்பா... நீங்க சயின்டிஸ்ட்டுங்க.. திடீர்னு ஒரு நாள் காஸ்மோஸ் (பிரபஞ்சவெளி) உருவாச்சின்னு சொல்றீங்க. திடீர்னு காஸ்மோஸ் உருவாகும்போது, இது உருவாகக் கூடாதா? கிரியேஷன்... Where there is a creation there should be a creator... படைப்பு இருந்தா, படைப்பாளி இருந்துதான் ஆகணும். Without the creator there is no creation. So கடவுள் இருக்கார்!', சயின்டிஸ்ட் சைலன்ட் ஆகிட்டார்.
இதை ஏன் சொல்றேன்னா... இது வந்து நடந்ததா இல்லையா என்பது வேறு.. தாமஸ் ஆல்வா எடிசன் அங்கே இருந்தாரா இல்லையான்றது டிஃப்ரன்ட்... சொன்னவர் இதை எங்கேயாவது படிச்சிருப்பார் டெபனிட்டா...
ஆனா, இதை எழுதினவர் என்ன சொல்ல விரும்பினார்... கடவுள் இருக்கார்னு சொல்றதுக்கு, இவர் இந்த சப்ஜெக்டை எடுத்துக்கிட்டார். இதுக்கு இந்த சிச்சுவேஷன் கிரியேட் பண்ணார். இதுக்கு ரெண்டு சயின்டிஸ்டை உருவாக்கினார். தாமஸ் ஆல்வா எடிசனை கொண்டு வந்தார். அவர் வாயால சொல்ல வச்சதாலதான், இது இந்த அளவு ஆழமா இது போகுது. இதான் ரைட்டருடைய வேலை. அந்த எழுத்தோட்டம் இருக்கு பாருங்க... அது ப்யூட்டிபுல்.
கம்ப ராமாயணத்தை கொளுத்த முயன்ற கண்ணதாசன்
கவிஞர் கண்ணதாசன் கொஞ்சகாலம் நாத்திகராக இருந்தார். அப்போ, கம்பராமாயணத்தை எரிக்க முயன்றார். கெரசின், தீப்பெட்டி, கையில் கம்பராமாயணம்... கொளுத்த வேண்டியதுதான் பாக்கி. ஒரு நிமிஷம் யோசிச்ச கண்ணதாசன், சரி... அப்படி என்னதான் இருக்கு இதுல. ஒருவாட்டி படிச்சுட்டு எரிச்சிடலாம்னு, படிக்க முயன்றார். பின்னர் அவர் அந்த புத்தகத்தை வைக்கவே இல்லை. முழுவதுமாக படித்து முடித்த பிறகு, அந்தப் புத்தகத்தை வைத்து அதன் முன் விழுந்து வணங்கினார். நாத்திகராக இருந்த கண்ணதாசன் ஆத்திகராக மாறிட்டார்!
JP,
ReplyDeleteWhat's your take?
இறைவன் என்ற "படைப்பாளியை" நம்புவதில்லை!
Deleteஆனால் எங்கும் நிறைந்துள்ள, எல்லாம் வல்ல, எல்லாம் அறிந்த
இறைநிலையை உணர்ந்தவன்!
what is இறைநிலை?
Deleteஇறைநிலை என்பது எங்கும் நீக்கமற நிறைந்திருப்பது; 'இறை'ந்து கிடப்பது!
Deleteகீழ்கண்டவற்றை சிந்தித்தால் இறைநிலைக்கு உருவம் உண்டா என்பதில் தெளிவு கிடைக்கும் -
1 தூணிலும் இருப்பான்; துரும்பிலும் இருப்பான்
2 நீ இல்லாத இடமே இல்லை, நீதானே அன்பின் எல்லை
அல்லா அல்லா!
3 The kingdom of God is within you!
why u r suddenly calling அல்லா அல்லா?
Deleteவிஸ்வநாதன் பாடிய ரொம்ப பேமஸ் பாட்டு..
Deleteஎல்லா இடத்திலும் நிறைந்தவர் அல்லா என்பதை யோசிக்கச் சொன்னால்
அதைவிட்டு விட்டு ...
JP,
DeleteOne more clarification,
When you said "The kingdom of God is within you"
does it mean,
"ulle kadavul, Veliye mirugam
Vilanga mudiya kavithai naan"...
சீக்கிரம் விளங்கவைத்து
Deleteவிலங்கை
விலக்குகிறேன்!
dhool solil selvanae :)
DeleteEVERYTHING is based on a belief system!!
ReplyDeleteநம்பிக்கைதான் ஆரம்பம்.
Deleteசரியான விளக்கங்கள் பெற்று
நம்பிக்கைகளை ஆராய்ந்து
தேவையற்ற நம்பிக்கைகளை விடவேண்டும்.
நல்லவற்றை பிடித்துக் கொள்ளவேண்டும்!
JP
ReplyDeletelooks like you need to start classes from KG level.. :)
Hope to start the classes soon...
DeleteGood Luck to you!!!! :)
DeleteThalaivar sonna Elam serial than irrukkum.
ReplyDeleteஇப்படி இவர் சொன்னால் எல்லாம் சரியாக இருக்கும் என்று ஏற்றுக்கொள்வதால்தான் மக்களிடம் சிந்தனை செய்வது என்பது இல்லாமல் போய் விட்டது.
Deleteகுறிப்பாக ஆன்மீகத்தில் இன்று ஒருவருடைய அறிவு இன்னொருவரின் அறிவுக்கு அடிமைப் பட்டு ஆன்மிகம் என்ற பெயரில் அநியாயங்கள் நடைபெறுகின்றன.
சிந்தனை செய்யுங்கள், கேள்விகள் கேளுங்கள், தெளிவடையுங்கள்
பிறகு தலைவர் சொன்னதை ஆராய்ந்து சரியென்றால் ஏற்றுக்கொள்ளுங்கள்.
JP, Remember what Sujatha told
ReplyDelete1. ஒன்றின் மேல் நம்பிக்கை வேண்டும், எதாவது ஒன்று. உதாரணம் கடவுள், இயற்கை, உழைப்பு, வெற்றி இப்படி எதாவது… நம்பிக்கை நங்கூரம் போல. கேள்வி கேட்காத நம்பிக்கை. கேள்வி கேட்பது சிலவேளை ரொம்ப இம்சை. நவின விஞ்ஞானம் அதிகப்படியாகக் கேள்வி கேட்டு இப்போது தவித்துக் கொண்டிருக்கிறது.
Athu than ithu !!!! :)
எதையும் ஏன், எப்படி, எதற்கு என்று கேள்வி கேளுங்கள்.
Deleteஅவர் சொன்னார்; இவர் சொன்னாரென அப்படியே ஏற்றுக் கொள்ளாமல் பகுத்தறிவால் பகுத்து பார்.
உன்னையே நீ அறிவாய்
- சாக்ரெடிஸ்