நான்கு நாட்களுக்கு முன் ஒரு போன் கால் வந்தது..
" டேய் JP நல்லா இருக்கியாடா? நான் இளங்கோ பேசுறேன்.."
" யாருன்னு தெரியிலியே..எந்த இளங்கோ?" - நான்
( என்னோடு படித்த சிவில் இளங்கோண்மணிதான் போனமாதம் வந்திருந்தானே .....எலெக். இளங்கோவை நெய்வேலியில் பார்த்தேனே....
Dr இளங்கோ ...? அவர்கள் குரல் போல் இல்லையே..)
( என்னோடு படித்த சிவில் இளங்கோண்மணிதான் போனமாதம் வந்திருந்தானே .....எலெக். இளங்கோவை நெய்வேலியில் பார்த்தேனே....
Dr இளங்கோ ...? அவர்கள் குரல் போல் இல்லையே..)
" நாந்தாண்டா மாடிவீட்டு ஏழை இளங்கோ.. !"
உடனே எனக்கு ஞாபகம் வந்துவிட்டது... 38 ஆண்டுகளுக்குப் பிறகு
தொடர்பு..!
" எங்கேயிருந்து பேசுறே?" - நான்
" ஊர்லதான் இருக்கேன்.. என் பேத்திக்கு அங்க BHEL
ல்ல
project பண்ணனுமாம்..நீ அங்க இருக்கிறதா கேள்விப் பட்டேன்.
ஹெல்ப் பண்ணுடா.."
"ட்ரை பண்ணுவோம்" ன்னு சொல்லிவிட்டு மலரும் நினைவுகளில்
ஆழ்ந்தேன்.
இளங்கோ என்னோட சீனியர். சிவில் இன்ஜினியரிங் முடித்திருந்தாலும் இரண்டாம் ஆண்டு இன்ஜினீரிங்க்கில் நிறைய அரியர்ஸ் வைத்திருந்ததால் டிகிரி வாங்க முடியவில்லை.
மேத்ஸ் லெக்சரர் C J தங்கராஜ் என்னிடமிருந்து நான் வைத்திருந்த இரண்டாம் ஆண்டு மேத்ஸ் நோட்டுகளை அவனுக்கு கொடுத்து மேத்ஸ் சொல்லித்தர சொல்லியிருந்தார். இப்படித்தான் இளங்கோவுடன் பழக்கம்.
மேத்ஸ் லெக்சரர் C J தங்கராஜ் என்னிடமிருந்து நான் வைத்திருந்த இரண்டாம் ஆண்டு மேத்ஸ் நோட்டுகளை அவனுக்கு கொடுத்து மேத்ஸ் சொல்லித்தர சொல்லியிருந்தார். இப்படித்தான் இளங்கோவுடன் பழக்கம்.
அண்ணாமலைப் பல்கலைக் கழக இஞ்சனீரிங் காலேஜ்ல எங்க பாட்ச்தான் மூணு டெர்ம் படிச்ச கடைசி பாட்ச்..அப்புறம் செமஸ்டர் சிஸ்டம் வந்துடிச்சி..
கால் பரீட்சை, அரை பரீட்சை மாதிரி டெர்ம் எக்ஸாம்ஸ் நடத்தி மார்க் ஸீட் கொடுப்பாங்க. அதுல அப்பா அல்லது கார்டியன் கையெழுத்து வாங்கிட்டு வந்து தரணும். ஒவ்வொரு டெர்ம் முடிஞ்சப்பறம் லீவு உண்டு.
இளங்கோ கும்பகோணத்துக்கு பக்கத்துல இருக்குற கிராமத்திலிருந்து வந்து படிச்சான். அவனோட அப்பா பெரிய மிராசு, பணக்காரர். அந்த குடும்பத்திலிருந்து,அந்த கிராமத்திலிருந்து இளங்கோதான் முதல்முறையா காலேஜுக்கு வந்தவன். இங்க்லீஸ் படிச்சவன்.
முதல் டெர்ம் பரிட்சைகள் முடிஞ்சு மார்க் சீட்டைக் கொடுத்தப்ப இளங்கோவுக்கு எல்லா சப்ஜெக்ட்லேயும் Very very poor ன்னு போட்டிருந்தது. ரிப்போர்ட்ல அப்பாகிட்ட கையெழுத்து கேட்டான். அப்பாவுக்கு இங்கலீஸ் தெரியாது. எனவே கணக்குப் பிள்ளை கிட்ட கொடுத்து அர்த்தம் கேட்க அவரு " உங்க பையன் ரொம்ப, ரொம்ப ஏழை"ன்னு எழுதியிருக்குன்னு சொல்லிட்டாரு. இளங்கோவோட அப்பாவுக்கு கோபம் வந்து கத்த ஆரம்பிச்சுட்டாராம். " ஊருலயே பெரிய பணக்காரன் நானு, எம்பையனைப் போய் எப்படி ஏழைன்னு சொல்லலாம்?" அப்படீன்னு சத்தம் போட நம்ம இளங்கோ
சொன்னானாம் -
" அப்பா, நான் வேணும்ன்னுதான் எங்க புரோபசருக்கிட்ட இப்படி எழுதச் சொன்னேன். ஏழைன்னு போட்டா வருசத்துக்கு ஆயிரம் ரூபாய் ஸ்காலர்ஷிப் கிடைக்கும். நமக்கும் காசு மிச்சம்"
இதக் கேட்டதும் அப்பாவுக்கு ஒரே சந்தோசமாம். உடனே கையெழுத்து போட்டு கொடுத்தாராம். வர்றவங்கிட்ட தன் பையனோட புத்திசாலித்தனத்தை சொல்லி சொல்லி மகிழ்வாராம்.
கல்லூரி இறுதிநாள் அன்று ஒவ்வொரு மாணவனுக்கும், லெக்சரர், புரொபாசர் என
எல்லோருக்கும் "பட்டப்" பெயர் கொடுப்போம். அது பெரும்பாலும் சினிமா படப் பெயராகத்தான் இருக்கும்.
இளங்கோவுக்கு " மாடி வீட்டு ஏழை " பட்டம் தரப் பட்டது!
Congrats on triple century!!! :)
ReplyDeletewait a minute...
ReplyDelete"மாடி வீட்டு ஏழை" is your classmate and he already has a பேத்தி in college???
அவனுக்கு 74 ம் வருஷம் கல்யாணமாகி அவன் பொண்ணுக்கு 96 ம் வருஷம் கல்யாணமாகி அந்த பொண்ணோட பொண்ணு இப்ப இஞ்சனீரிங் படிக்குது..
Deleteதலை சுத்துது...!!!
Deleteஎன்னோட இன்னொரு கிளாஸ் மேட்டுக்கு கொள்ளுபேரன் பொறந்திருக்கிறான்!
Deleteஇப்ப தலை சுத்தி கீழே விழுந்துட்டேன்...!!!
DeleteHellloooo Sri... you are too tooo toooo late...you should've been a தாத்தா by now...!!! :)