பொன்னென்ன பூவென்ன கண்ணே - உன்
கண்ணாடி உள்ளத்தின் முன்னே
ஒரு கல்யாணப் பெண்ணாக உன்னைப்
புவி காணாமல் போகாது பெண்ணே
( பொன்னென்ன பூவென்ன )
மார்கழியில் மாலையிலே
மலர்ந்ததொரு மல்லிகைப்பூ
யார் வருவார் யார் பறிப்பார்
யார் அறிவார் இப்போது
( பொன்னென்ன பூவென்ன )
ஊர்கோலம் போகின்ற பூந்தென்றலும்
ஒலியோடு நடை போடும் நீரோடையும்
சுகமானது சுவையானது
உன் வாழ்வும் அது போல உயர்வானது
( பொன் )
செவ்வான மேகங்கள் குழலாகுமா
செந்தூரம் விளையாடும் முகமாகுமா
நடை போடுமா இசை பாடுமா
நடந்தாலும் அவை யாவும் நீயாகுமா.....
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடல்: கண்ணதாசன்
பாடியவர்: ஜெயச்சந்திரன்
இந்த பாடலைக் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று கேட்டேன். ஸ்ரீதர் இயக்கிய ' அலைகள் ' படத்தில் வரும் இரு பாடல்களில் ஒன்று. மிக இனிமையான பாடல். படம் தோல்வி அடைந்ததால் பாடல் பிரபலமாகவில்லை. நெய்வேலியில் வேலை பார்த்தபோது கிராமபோன் வைத்திருந்த என் நண்பனுக்காக மிகவும் சிரமப்பட்டு இப்பாடலின் இசைத்தட்டு வாங்கியதும், நண்பனின் ஞாபகமும் இப்பாடலைக் கேட்கும்போது மலரும் நினைவுகளாக வந்து இன்னும் வந்துகொண்டே இருக்கின்றது. இந்த படத்தில் வரும் இன்னொரு பாடல் மிகவும் புரட்சிகரமான, சிந்திக்கத் தூண்டும் பாடல். அதைப் பற்றி பிறகு எழுதுகிறேன்.
www.youtube.com/watch?v=kHojLd7jyeE

No comments:
Post a Comment