17-1-14 தொடங்கி 26-1-14 முடிய நடந்த நிகழ்ச்சிகள் என்றுமே மறக்க முடியாத, மகிழ்ச்சியானவைகளாக அமைந்துவிட்டன. 17ம் தேதியும் 19ம் தேதியும் பிறந்தநாள் கொண்டாட்டங்களாக சிறப்பாக கழிந்தன.
22-1-14 அன்று ஞானியார் இல்ல கிரஹபிரவேசம் சிறப்பாக நடைபெற்றது. ஆயிரத்திற்கு மேற்பட்ட நண்பர்களும், அன்பர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். தவத்திரு ராமதாஸ் அண்ணா சுவாமிகள் தன்னுடைய 98வது வயதிலும் விடிகாலை 4 மணிக்கே வந்திருந்து சுமார் ஐந்து மணி நேரம் ஞானியார் இல்லத்தில் தங்கியிருந்து ஆசிகள் வழங்கியது நாங்கள் பெற்ற பேறு! பிறகு நடைபெற்ற தனாஹார்ஷன சங்கல்ப நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட அன்பர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். எல்லோருமே எங்களை தங்கள் அன்பினால் நெகிழ வைத்துவிட்டனர். அத்துணை பேருக்குமே எங்கள் நன்றி ..நன்றி ,,,நன்றி!
24-1-14 அன்று பணிஓய்வு தினம். மாலை நடந்த நிகழ்ச்சியில் அலுவலக அன்பர்களும், மன்ற அன்பர்களும் அன்புமழை பொழிந்து எங்களை நெக்குருக வைத்துவிட்டனர்.
26-1-14 குடியரசு தின விழாவில் தங்கப்பதக்கம் கிடைத்ததில் மிகவும் நிறைவு பெற்றேன்.
இந்த நன்றிக்கடன்களை எல்லாம் எப்படித்தான் தீர்க்கப்போகின்றேனோ?

Vaazhga Valamudan Mrs&Mr JP
ReplyDeleteஉங்கள் இருவரையும் பார்த்தத்தில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
அருட்பேறாற்றல் கருணையினால் நீங்களும் உங்கள் குடும்ப அன்பர்கள் அனைவரும் உடல் நலம், நீல் ஆயுள், நிறை செல்வம், உயர் புகழ், மெய்ஞானம் பெற்று பல்லாண்டு வாழவேண்டும்.
மஹரிஷி அவர்கள் பாடல்
http://youtu.be/Nr9rLpA89W8
மஹரிஷி அவர்கள் வாழ்த்து
http://www.youtube.com/watch?v=nzmjTkYDxhU
என்றும் அன்புடன்
சுப்ரமணியன்