நட்பு
இருவர்க்கு இடையே ஏற்படும் தொடர்புகளில்
மிகவும்
பெருமை உடையதாகக் கருதப்படுவது நட்பு ஆகும். நட்பின்
பெருமையைச் சங்க காலத்திலிருந்தே நாம் காணமுடிகிறது.
பாரிக்கும் கபிலருக்கும் இடையே இருந்த
நட்பும்,
அதியமானுக்கும் ஒளவையாருக்கும் இடையே இருந்த நட்பும்,
கோப்பெருஞ்சோழனுக்கும் பிசிராந்தையாருக்கும் இடையே
இருந்த நட்பும் அனைவரும் அறிந்த நட்பு ஆகும். நட்பின்
பெருமையைத் திருக்குறள்,
செயற்குஅரிய
யாவுள நட்பின் அதுபோல்
வினைக்குஅரிய யாவுள காப்பு (781) |
என்று கூறியுள்ளது. திருக்குறள் நல்ல நட்புக் கிடைப்பதை மிகவும்
அரியது என்று குறிப்பிட்டுள்ளது. அந்த நல்ல நட்புக் கிடைத்துவிட்டால் அந்த
நட்பே ஒருவனுடைய செயலுக்குச் சிறந்த பாதுகாப்பாக அமையும் என்றும் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment