"இனிய மாணவச் செல்வங்களே !இப்போது நாங்கள் செய்ய வேண்டியதென்ன எனக் கேட்டீர்கள். இது பற்றி நம் மகரிஷி அவர்கள் முப்பது ஆண்டுகளுக்கு முன் பல தடவை பள்ளி, கல்வி மாணவர்களிடையே பேசியிருக்கின்றார்கள். இன்று அந்த தொண்டினை நமது முன்னாள் ஜனாதிபதி மேதகு அப்துல் கலாம் அவர்கள் செய்து வருகின்றார்கள் " என அம்மா சொன்னதும்
" எங்கள் பள்ளியிலும் உயர்திரு அப்துல் கலாம் அவர்கள் மாணவர்களுக்கு அறிவுரை சொல்லியிருக்கிறார் " என ஒரு மாணவி கூறுகிறாள்.
" நல்லது. முதலில் மேதகு அப்துல் கலாம் சொன்ன அறிவுரைகள் பற்றி தெரிந்து கொண்டு பிறகு மகரிஷியின் வழிமுறைகள் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.
'அப்துல் கலாம் அவர்கள்:
மாணவர்களே! இன்றைக்கு என் வாழ்வில் கண்ட அனுபவங்கள், என் ஆசிரியர்கள்,
அவர்களிடம் இருந்து நான் கற்றுக்கொண்ட அரிய எண்ணங்கள், சில அருமையான
புத்தகங்கள் எவ்வாறு என் வாழ்வின் சிந்தனையை மாற்றியது. எல்லாவற்றையும் விட
என் வாழ்வில் எனக்கு கிடைத்த ஒரு புனிதமான கருத்து என்னவென்றால், நீ யாராக
இருந்தாலும் பரவாயில்லை உன்னால் வெற்றியடைய முடியும். இது நான் என்னுடைய
வாழ்வில் நான் கற்றுக்கொண்ட பாடம். அதை உங்களுக்கான என்னுடைய உரையில்
இருந்து 8 உறுதிமொழிகளாக உருவாக்கி இருக்கிறேன். அதை உங்களுடன் பகிர்ந்து
கொள்ள விரும்புகிறேன். நீங்கள் எல்லாம் ரெடியா? என்னுடன் திருப்பி
சொல்கிறீர்களா? எங்கே சொல்லுங்கள் பார்ப்போம்.
மாணவர்களுக்கான 8 உறுதிமொழி
1. எனக்குள் ஒர் அரும்பெரும் சக்தி புதைந்துள்ளது. வெற்றி எண்ணத்தை
என்றென்றும் வளர்த்து, என் சக்தியாலேயே, நான் வெற்றி அடைந்தே தீருவேன்.
2. ஒவ்வொருநாள் வகுப்பிலும், ஆசிரியர் சொல்லிக்கொடுக்கும் பாடங்களையும்,
அறிவியல் பாடங்களையும், கணித கணக்குகளையும், சமூகவியல் பாடங்களையும்,
அன்றைய நாளே, அன்றைய இரவே, நானே அந்த அறிவை உள்வாங்கி, புரிந்து, எழுதி
எழுதி படிப்பேன். இந்த முறையான படிப்பின் மூலம் என் உள்ளத்தின் ஆழ் மனதில்
ஒவியம் போல் பதிந்துவிடும் படி நான் கற்று உணர்ந்து, தெளிவேன்.
3. அறிவுப்பெட்டகமாக திகழும் எனது ஆசிரியர்கள் வாழ்வு முறையை அறிந்து,
தெரிந்து, அவர்களை மதித்து அதன்படி நடந்து என் வாழ்வை செம்மைப்படுத்துவேன்.
4. பெற்றோர்களிடம் இருந்து நல்லொழுக்கத்தை கற்பேன், ஆசிரியர்களிடம் இருந்து அறிவார்ந்த லட்சியத்தை அடைவேன்.
5. என்னால் எதைக் கொடுக்க முடியும் என்ற லட்சியத்தை என் உள்ளத்தில்
உருவாக்குவேன். நான் பெற்ற அறிவை அனைவருக்கும் கொடுப்பேன், அன்பை
கொடுப்பேன், பண்பை வளர்ப்பேன், மற்றவர்களை மதிப்பேன் எல்லாவற்றிற்கும் மேல்
அனைவரிடமும் நட்பை வளர்பேன்.
6. நான் வெற்றி பெறுவேன், மற்றவர்கள் வெற்றியையும் கொண்டாடி மகிழ்வேன்.
7. பெற்றோர்கள் உதவியுடன், நான் என் வீட்டில் ஒரு சிறு நூலகம் அமைத்து, தினமும் ஒரு 30 நிமிடமாவது புத்தகங்களைப் படிப்பேன்.
8. இன்றையில் இருந்து என் மனதில் ஒர் உன்னத லட்சியம் உதயமாகிவிட்டது;
அறிவை தேடி, தேடி, சென்றைடைவேன்; கடினமாக உழைப்பேன்; பிரச்சனைகளை கண்டு
பயப்படமாட்டேன்; தோல்வி மனப்பான்மைக்கு தோல்வியை கொடுத்து, விடாமுயற்சி
செய்து எனது உன்னத லட்சியத்தை வென்றடைவேன்.
நல்லொழுக்கம்
உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும். அத்துடன் விடாமுயற்சி இருந்தால், வெற்றி உங்களை வந்து சேரும். வரலாற்றின் பக்கங்களில் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதை உலகம் படிக்க வைப்பது, நமது கையில்தான் உள்ளது. எந்த மாயவலையிலும் விழமாட்டேன் என்ற உறுதி இருந்தால், வரலாற்றுப் பக்கத்தில் நீங்களும் இடம் பிடிப்பீர்கள்.வாழ்வில் வெல்ல 5 விஷயங்கள் அவசியம்.
முதலில் லட்சியம் வேண்டும்.
அதை அடையக் கூடிய அறிவைத் தேடிப்பெற வேண்டும்.
அதற்கு கடும் உழைப்பு வேண்டும்.
பிரச்னைகளைக் கண்டு பயப்படக் கூடாது.
பிரச்னைகளைத் தோல்வியடையச் செய்து, வெற்றியடைய விடாமுயற்சி வேண்டும்;
எல்லாவற்றுக்கும் மேலாக நல்ல ஒழுக்கம் வேண்டும்.
குடும்பத்துக்கும், நாட்டுக்கும், உலகிற்கும் நல்லதொரு அங்கமாக இருப்பேன் என்ற உறுதி உங்களுக்கு இருக்க வேண்டும். நீங்கள் அனைவரும் சமூகத்தில் பொறுப்புள்ள மனிதர்களாக மாற வேண்டும்;'
" மாணவச் செல்வங்களே, கலாம் அவர்கள் சில ஆண்டுகளுக்கு முன் ஆழியார் அறிவுத் திருக்கோயிலில் நடந்த பட்டமளிப்பு விழாவில் பேசியபோது நல்லொழுக்கத்தின் மூலம் எப்படி விழிப்புணர்வு கொண்ட சமுதாயத்தை உருவாக்கலாம் என்பது பற்றியும் மகரிஷி அவர்களின் மனவளக்கலை ஒன்றுதான் மாணவர்களை மிக சிறந்த மனிதர்களாக மாற்றி எதிர்கால இந்தியாவை ஏற்றமிக்கதாக உருவாக்கும் என்றார். இனி மாணவர்களுக்கு மகரிஷி என்ன அறிவுறித்தினார் என பார்க்கலாம்" என ஆரம்பித்தார் அம்மா.
- தொடரும்
No comments:
Post a Comment