Monday 9 June 2014

இந்தியா - 3

முன்னாள் ஜனாதிபதி
 அப்துல் கலாம் :

மனஎழுச்சி பெற்ற 54 கோடி இளைஞர்கள் இந்தியாவின் சொத்து. சவால்களை சமாளிக்க இளைய தலைமுறை எழுச்சியுற வேண்டும். கல்வி நிறுவனங்கள் மாணவர்களின் ஆராயும் திறனை வளர்க்க வேண்டும். 90 சதவீதம் பேர் படிப்பின் பல நிலைகளில் கல்வி கற்க இயலாமல் வேலைகளுக்கு செல்கின்றனர்.

பிணியின்மை என்ற குறளில் திருவள்ளுவர் வளமான நாட்டை படம் பிடித்து காட்டுகிறார். எல்லாரும் உழைத்து தான் நாட்டை வளமானதாக மாற்ற வேண்டும். இளைஞர்களை பக்குவப்படுத்தி, தயார் செய்தால், லட்சியமான, வளமான இந்தியாவாக 2020க்குள் மாற்ற முடியும்.

சிந்தனை, செயல் ஒன்றுபட்டால் லட்சியம் நிறைவேறும். விவேகானந்தரின், "கனவு இளைஞனை' உருவாக்க வேண்டும். இளைய சமுதாயத்தை அறிவார்ந்த சமுதாயத்திற்கு இட்டு செல்வது பெரிய பணி.

தாய், தந்தை மற்றும் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களிடமிருந்து மனத்தூய்மை வரும். உள்ளத்தில் உறுதி என்பது நல்ல மனிதர்கள், ஆசிரியர்கள், புத்தகங்களிடமிருந்து வரும். மனதில் உறுதி இருந்தால் வெற்றி அடைவீர்கள்.

அனைத்து துறையிலும், இந்தியாவை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்ல அறிவார்ந்த இளைஞர்களை தயார்படுத்த வேண்டும். இளைஞர்களின் நேரம், திறமை, அறிவை, ஆற்றலை அதிகரிப்பதாக இருக்க வேண்டும். .

No comments:

Post a Comment