Tuesday 10 June 2014

அறு(சு)வையா​னந்தா....2

சில நண்பர்களின் வேண்டுகோள்களுக்கு இணங்க மே மாத ' அருட்குரல்' இதழில் வந்த எனது நகைச்சுவை கட்டுரை -

ஏழாம் சுவை - நகைச்சுவை 

- அறு(சு)வையா​னந்தா

"ஜி, குரங்குகள் பற்றித் தாங்கள் தெரிவித்தவை மிகவும் சுவாரஸ்யமாக இருந்ததாக நிறைய பேர்கள் தெரிவித்திருக்கின்றனர் " என்றதும் ஜி சிரித்துக் கொண்டார்.

" என்ன ஜி, நீங்களே சிரித்துக் கொள்கின்றீர்கள்?" எனக் கேட்டோம்.

" சின்ன வயதில் நான் செய்த குரங்கு சேஷ்டைகளை நினைத்துக் கொண்டேன். யோசித்துப் பார்த்ததில் குரங்குகளிடம் உள்ள குரங்குத்தனத்தைவிட நம்மிடம் அதிக அளவில் குரங்குத்தனம் மிகவும் அதிகமாக இருக்கின்றது. இதை உணர்ந்து நம்மை நாமே திருத்திகொள்வதற்குத்தான் மகரிஷி பயிற்சிகள் அளித்திருக்கின்றார். நம் செயல்களை கண்டு நாமே சிரித்துக் கொள்ள ஆரம்பிப்பது நமது நகைச்சுவை உணர்வை அதிகரிக்கும்." என்றார் ஜி.

உடனே நாம் " ஜி, உங்கள் வாழ்வில் நடந்த நகைச்சுவை சம்பவங்களைக் கூறுங்கள்." என்றோம்.

" நிறைய இருக்கின்றது. ஏதோ சிறப்பாக செய்யப்போகிறோம் என்று ஆரம்பித்து 'பல்பு' வாங்கின நிகழ்சிகள் ஏராளமாக உள்ளன. முதலில் என் நண்பர் சொன்ன உண்மை கதை ஒன்று சொல்கிறேன். இது சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன் நடந்தது.

எனது நண்பர் விவசாயக் கல்லூரி விடுதியில் தங்கி படித்துக் கொண்டிருக்கும்போது ஊதாரியான அவரது அறைத்தோழர் அடிக்கடி தனது தந்தைக்கு பணம் கேட்டு கடிதம் போடுவார். விவசாய படிப்பு சம்பந்தமாக புத்தகங்கள் வாங்கவேண்டும், பல ஊர்களுக்குச் சென்று பயிர் சாகுபடி பற்றி தெரிந்து கொள்ளவேண்டும் என ஏதேனும் காரணங்களைச் சொல்லி பணம் கேட்பார். தந்தையும் அனுப்பி வைப்பார். தந்தை ஊரில் நாட்டாமையாகவும், பெரிய பணக்காரராகவும் இருந்ததால் பணம் பெறுவதில் சிரமமில்லை.

ஒருதடவை இவர்   நண்பர்களுடன் ஊட்டி சென்றுவர திட்டமிட்டு தந்தையிடம் எப்படி பணம் கேட்பது என யோசித்து கடிதம் எழுதினர். அதில் அவர் " அப்பா, கல்லூரியில் ஒவ்வொரு மாணவருக்கும் சிறிதளவு நிலம் கொடுத்து அதில் பயிர் சாகுபடி செய்ய சொல்லியிருக்கிறார்கள். யார் அதிக அளவு சாகுபடி செய்கிறார்களோ அவர்களுக்கு பரிசு கிடைக்கும். எனவே விதை, உரம் மற்றும் நிலம் உழுவதற்கு மாடுகள் வாங்க 5000 ரூபாய் அனுப்பி வைக்கவும்" என எழுதியிருந்தார்.

சிலநாட்கள் கழித்து விடுதி வாசலில் மாணவர்கள் கூட்டத்திற்கு நடுவில் அறைதோழரின் அப்பா நின்று கொண்டிருக்கின்றார். கிராமத்திலிருந்து ஒரு வண்டியில் விதைநெல், உரமூட்டை  மற்றும் இரண்டு மாடுகளை ஒட்டிக்கொண்டு வந்திருக்கின்றார்.  மாடு விஷயத்தில் தன்  பையனை ஏமாற்றி விடுவார்கள் என்று சொந்த மாடுகளையே கொண்டு வந்து விட்டார்.

சக மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு இந்த விஷயம் பெரிய காமெடியாக மாற, தந்தைக்கோ கோபம் அதிகமாகி எல்லோர் முன்னிலையில் பையனை அடிக்க ஆரம்பித்துவிட்டாராம்.

இந்தமாதிரி 'பல்பு' வாங்கி பிரபலமான பையனின்  விஷயம் அந்த  விவசாயக் கல்லூரியில் இன்னும்  பேசப்படுகின்றதாம்."
என்றார் ஜி.

5 comments:

  1. Replies
    1. மஹா மஹா ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீலஸ்ரீ சுவாமி அறுசு)வையானந்தாஜி யை பக்தகோடிகள் 'ஜி' என பரவசத்துடன் அழைத்து வணங்குகிறார்கள்.

      Delete
    2. O'....மஹா மஹா ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீலஸ்ரீ ...."avarthaanaa neenga""...ippo purunchu pochu....

      Delete
    3. ஜூலை மாத 'அருட்குரலுக்கு' என்ன எழுதலாம் என யோசித்த வேளையில் KG யின் comment வந்ததால்,

      அடுத்த கட்டுரை முழுக்க ' KG ' ஜோக்ஸ் !

      Delete
    4. vendaam மஹா மஹா ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீலஸ்ரீ "Aaனந்த சுவாமிஜி !!

      Delete