Monday 30 June 2014

முனைவர் பட்டத்திற்கான எனது ஆய்வின் கருதுகோள்

தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கான எனது ஆய்வின் கருதுகோள் கீழே -

( Synopsis  for my Ph.D degree )

நம்மையெல்லாம் இயக்கும்
பிரபஞ்ச ஆற்றல்
எது?


"ஞாலத்திலிருந்து மூலத்தை அறிவது விஞ்ஞானம்
மூலத்திலிருந்து ஞாலத்தை அறிவது மெய்ஞ்ஞானம் "

இயற்கையில் நடைபெறும் எந்த நிகழ்ச்சிக்கும் மூன்று தன்மைகள் உண்டு. அவை உருவமைப்பு, குணங்கள் மற்றும் காலம் எனப்படும். பிரபஞ்சத்தில் உள்ள எல்லாமே சிறு அணுத்துகள் முதல் பெரிய, பெரிய நட்சத்திரங்கள் வரை எல்லாமே  இந்த மூன்று தன்மைகள் கொண்டு ஒரு இணைப்பில் நடைபெற்று வருகின்றன.

இந்த பிரபஞ்ச ஆற்றலைப் பற்றி உலகம் முழுதும் பல, பல ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. தத்துவஞானி சுவாமி வேதாத்திரி மகரிஷி அவர்கள் பிரபஞ்சத்தின் தோற்றம், இயக்கம் மற்றும் விளைவுகள் பற்றி சிறப்பாக விளக்கி இவை அனைத்துமே இறைநிலையின் தன்மாற்றமே என தெளிவு படுத்தியுள்ளார்.

இந்த ஆய்வு மகரிஷி அவர்களின் பிரபஞ்ச ஒருங்கிணைப்பு தத்துவம் எப்படி உலகில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வு முடிவுகளைவிட சிறந்து விளங்குகின்றது என்பது பற்றியும், மகரிஷி அவர்களின் காந்த தத்துவம் எப்படி புதுமையானதாகவும், உலக விஞ்ஞானிகளுக்கு ஆர்வம் தரக்கூடியதாகவும் அமையும் என்பது உறுதி.

இயற்கையில் நடைபெறும் எந்த நிகழ்ச்சிகளிலும் சிறிது கூட பிழை ஏற்படுவது இல்லை. மனிதனும் இந்த பிரபஞ்ச ஆற்றலை உணர்ந்துகொண்து தன் ஆற்றலையும் இணைத்து செயலாற்றி வெற்றியும், மனநிறைவும் பெறமுடியும். வாழ்வில் சிக்கலோ, மனக்கவலைகளோ ஏற்படாது. இதை எனது இந்த ஆய்வின் மூலம் உலகமக்களுக்கு எளிதாக எடுத்துச் சென்று உலக அமைதி ஏற்பட துணை நிற்க ஆவல்.

மேலும் பிரபஞ்ச ஆற்றலை மக்கள் எளிதில் சக்தியாக பயன்படுத்தக்கூடிய வழிமுறைகளை கண்டுபிடிக்க எனது இந்த ஆய்வு பயன்படும் என நம்புகின்றேன்.

நிறைவாக

" வற்றாயிருப்பு, பேராற்றல், பேரறிவு, காலம் எனும்
வளம் நான்கும் ஒன்றிணைந்த பெருவெளியே தெய்வமாம் " 

 என்ற மகரிஷியின் சத்திய வாக்கினை


' இருப்பதெல்லாம் இறைநிலையே ' 

என என் ஆய்வு உறுதி செய்யும்.

3 comments: