குரு ஒருவரைத் தேடி வந்த இளைஞன் ஒருவன் “ சுவாமி ஞானம் பெற வேண்டும் என்பதுதான் என் குறிக்கோள் உங்களிடம் சீடனாகச் சேர்ந்தால் ஞானம் வரும் என்றார்கள் உங்களால் முடியாவிட்டாலும் பரவாயில்லை எங்கு சென்றால் கிடைக்குமென கூறுங்கள் அங்கு சென்று ஞானம் பெற்றுக்கொள்கிறேன்” என்றான். புன்னகைத்த குரு நாதர் “எனது ருத்திராட்சமாலை ஒன்று தொலைந்து விட்டது முதலில் அதனைக் கண்டுபிடிப்போம் பிறகு நீ ஞானம் பெறும் வழியைக் கூறுகிறேன்” என்றார். இளைஞனும் குருவும் ஆசிரமம் முழுவதும் தேடினார்கள். எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை. சலிப்படைந்த இளைஞன் “குருவே கடைசியாக ருத்திராட்ச மாலையை எங்கு வைத்தீர்கள்? “ எனக் கேட்டான். “ காலை ஆற்றிற்கு நீராடச் சென்றபோது கையிலே வைத்திருந்தேன் அப்போது கை தவறி தண்ணீரில் விழுந்து விட்டது” என்றார் குரு.
“அங்கே தொலத்துவிட்டு இங்கே தேடினால் எப்படிக் கிடைக்கும் சுவாமி ‘
ஞானத்தை உனக்குள்ளேயே வைத்துக்கொண்டு வெளியில் எங்கெல்லாமோ தேடி அலைந்து கொண்டிருந்தால் எப்படிக் கிடைக்கும்? என குரு எதிர்கேள்வி கேட்க ஞானம் பெற்றவனாய் சீடன் குருவின் காலில் விழுந்தான்.
No comments:
Post a Comment