புலவர் ஒருவர் பாட்டிலேயே விடுகதை ஒன்று போட்டார்.
அதற்குவிடை தெரிகிறதா என்று பாருங்கள்.
விடை கண்டு பிடித்து விட்டீர்களா?விடைதான் கவிதையிலேயே இருக்கிறதே!
ஆம், புதையல் என்பதுதான் விடை.எப்படி?
புதையல் என்ற வார்த்தையில் முதல் பாதியை நீக்கிவிட்டால்இருப்பது அல்.அல் என்றால் இருள்.முதல் எழுத்து பு வை நீக்கி விட்டால் மிஞ்சுவது தையல்.தையல் என்றால் பெண்.இச்சொல்லின் பிற்பகுதியை எடுத்துவிட்டால் புதை என்னும் கட்டளைச் சொல் ஆகிவிடும்.பிற்பாதியோடு முதல் எழுத்து சேர்ந்தால் புயல் என்று வரும்.அதன் பொருள் மேகம்.முதல் எழுத்தும் கடைசி எழுத்தும் சேர்ந்தால் புல்.புதையலில் இரண்டாம் எழுத்து தை என்பது ஒரு மாதமாகும்.
புதையல் என்ற ஒரு சொல்லிலே எத்தனை பொருள் உள்ள வார்த்தைகள் உள்ளன என்ற அழகை அழகாகப் பாடியுள்ளார் புலவர்.
அதற்குவிடை தெரிகிறதா என்று பாருங்கள்.
முற்பாதி போய்விட்டால் இருட்டே ஆகும்.
முன் எழுத்து இல்லாவிட்டால்,பெண்ணே ஆகும்.
பிற்பாதி போய்விட்டால் ஏவல் சொல்லாம்.
பிற்பாதியுடன் முன் எழுத்து இருந்தால் மேகம்.'
சொற்பாகக் கடைதலைசின் மிருகத்தீனி.
தொடர் இரண்டாம் எழுத்து மாதத்தில் ஒன்றாம்.
பொற்பார் திண்புய முத்து சாமி மன்னா!
புகலுவாய் இக்கதையின் புதையல் கண்டே!
விடை கண்டு பிடித்து விட்டீர்களா?விடைதான் கவிதையிலேயே இருக்கிறதே!
ஆம், புதையல் என்பதுதான் விடை.எப்படி?
புதையல் என்ற வார்த்தையில் முதல் பாதியை நீக்கிவிட்டால்இருப்பது அல்.அல் என்றால் இருள்.முதல் எழுத்து பு வை நீக்கி விட்டால் மிஞ்சுவது தையல்.தையல் என்றால் பெண்.இச்சொல்லின் பிற்பகுதியை எடுத்துவிட்டால் புதை என்னும் கட்டளைச் சொல் ஆகிவிடும்.பிற்பாதியோடு முதல் எழுத்து சேர்ந்தால் புயல் என்று வரும்.அதன் பொருள் மேகம்.முதல் எழுத்தும் கடைசி எழுத்தும் சேர்ந்தால் புல்.புதையலில் இரண்டாம் எழுத்து தை என்பது ஒரு மாதமாகும்.
புதையல் என்ற ஒரு சொல்லிலே எத்தனை பொருள் உள்ள வார்த்தைகள் உள்ளன என்ற அழகை அழகாகப் பாடியுள்ளார் புலவர்.
No comments:
Post a Comment