Wednesday, 31 December 2014

LAST POST OF THIS YEAR




வாழ்க வளமுடன்!

இந்த 2014ம் ஆண்டு இன்றுடன் நிறைவு பெறுகின்றது...

இந்த ஆண்டில்  செய்த சாதனைகள்,  பெற்ற சோதனைகள், அடைந்த வேதனைகள், இவை மூலம் கிடைத்த போதனைகள் இவற்றை நினைந்து எல்லாவற்றிற்கும் மேலாக என்னுள் உள்ளுணர்வாய் இருந்து வழி நடத்தும் நாதனை  வணங்கி ஞானவயலுக்கு வந்து செல்லும் உங்கள் அனைவரையும் மனமார வாழ்த்தி மகிழ்கின்றேன்.

பணி  ஓய்வு பெற்ற பிறகு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் மிகப் பெரிய வாய்ப்புகள் கிடைத்தன. மீதமுள்ள நாட்களை சமுதாயப் பணிக்கென அர்ப்பணிப்பது என தெளிவாக முடிவெடுக்க காரணாமாயிருந்த அன்பு மனைவி மாலாவுக்கும், அருமை மகன் ஸ்ரீராமுக்கும் மிக்க நன்றி.

 உலக சமுதாய சேவா சங்கத் தலைவர் விருப்பப்படி  கல்விப் பிரிவின் கூடுதல் இயக்குநராக கடந்த மூன்று மாதங்களாக தொண்டாற்றி  வருகின்றேன்.

மனவளக்கலைப் பயிற்சிகள் மக்களிடையே நன்கு சென்று வந்தாலும்
இன்றைய  இளைய சமுதாயம் செல்லும் போக்கினைப் பார்த்தால் மிகவும் அச்சமாயிருக்கின்றது. இளைஞர்கள் சரியான வழிகாட்டுதல் இன்றி, வாழ்வின் நோக்கம் அறியாமல், தன்னம்பிக்கை இல்லாமல், விரக்தி மனோபாவத்தில் வேண்டாத பழக்கங்களில் ஈடுபடுகின்றார்கள்.

தலைவர் அவர்களின் வழிகாட்டுதல் பேரில் இளைஞர்களுக்கென                 ( பள்ளி, கல்லூரி மாணவர்கள் ) " Yoga for Youth Empowerment " பாடத்திட்டம் சிறந்த கல்வி விற்பன்னர்களுடன் கலந்தாலோசித்து வகுக்கப்பட்டுள்ளது. மனவளக்கலை பாடங்களுடன் இன்றைய இளைஞர்களுக்குத் தேவையான ' தன்னம்பிக்கை பெறுதல், ஆளுமைத்திறன், நினைவாற்றல் பயிற்சிகள்,  நவீன சாதனங்களை  ( டிவி, செல் போன், இணையம், etc ) பொ றுப்புடன்  கையாளுதல், தோல்வி மனப்பான்மைத் தவிர்த்தல், உணர்ச்சி மேலாண்மை, பாலுணர்வு பிரச்சனைகள் ( காதல், etc ) தேர்வுக்குத் தயாராகுதல் போன்ற தலைப்புகளில் Diploma மற்றும் Certificate courses நடத்தப் பட உள்ளன.

இந்தத் திட்டத்தினை சிறப்பாக  மாணவர்களிடம் சென்று சேர்க்க  கடந்த இரண்டு மாதங்களாக பல இடங்களுக்குச் சென்று பள்ளி தலைமை ஆசிரியர்கள், தாளாளர்கள், கல்லூரி முதல்வர்கள், மாணவ, மாணவியர் என பலரையும் சந்தித்து பேசுகின்றோம்.  ஆயிரக்கணக்கான மாணவர்களுடன் உரையாடுகிறோம். இந்த YYE  திட்டத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கின்றது.


ஒரு +2 மாணவன் தன் வாழ்வில் கிட்டத்தட்ட 60000 மணி நேரம் டிவி பார்ப்பதில் செலவிடுகின்றான். பார்ப்பது முழுக்க, முழுக்க Vengence, violence & Vulgarity நிறைந்த காட்சிகள்! ஒரு பத்து செகண்ட் விளம்பரம் ஆழ்மனதில் நம்மை அறியாமல் ஏற்படுத்தும் பதிவிற்கே  பலன் இருப்பதாகச் சொல்கிறார்கள். 60000 மணி நேர டிவி காட்சிகள் ஏற்படுத்தும் விளைவுகள் ,,,?
பெரியவர்களும் இதை உணர வேண்டும்.

Yoga for Youth Empowerment Diploma padikka 75 மணி நேரம் மட்டும் ஒரு மாணவன் ஒதிக்கினால் போதும். Certificate  course க்கு 50 மணி நேரம்தான்.  மாணவர்கள் படிக்கும் பள்ளி, கல்லூரிகளுக்கேச் சென்று வகுப்புகள் எடுக்கின்றோம்.

இது தொடர்பான விவரங்கள் அறிய என்னைத் தொடர்பு கொள்ளலாம் ( jpmalajp@gmail.com ). டெல்லி சென்று திரும்பிய பிறகு ( after 12th Jan .) தகவல்கள் தருகிறேன்.

(இந்த Youth Empowerment பற்றி அறிந்து கொள்ள நிறைய படிக்க வேண்டியிருந்தது. உபயோகப்படும் என நினைத்த quotations பலவற்றை  அதிக அளவில் ஞானவயலில் பதிவு செய்தேன். சிலருக்கு overdose ஆகிவிட்டது. மன்னிக்க வேண்டுகின்றேன்).

இந்த பெரிய பதிவினைப் பொறுமையாகப் படித்த முகம் தெரிந்த மற்றும் தெரியாத ஞானவயல் வாசகர்கள் அனைவருக்கும் இனிய 2015ம் ஆண்டின் நல்வாழ்த்துக்கள் உரித்தாகுக.

நீங்களும், உங்கள் அன்பு குடும்பமும் இந்த 2015ம் ஆண்டில் வாழ்வின் எல்லா வளங்களும் நிறைவாகப் பெற்று நீடூழி வாழ்க!

வாழ்க வளமுடன்!

4 comments:

  1. Happy New Year JP and Mala!! Wishing you both success in all your endeavors for the good of this world!! Always proud to be part of your family!! :)

    ReplyDelete
  2. இனிய புத்தாண்டுவாழ்த்துக்கள் !!! Wishing both your love, kindness and service touch more people in 2015.

    ReplyDelete
  3. Happy New Year Aunty & Uncle !! Vazhaga Valamudan!!

    ReplyDelete
  4. Dear JP and Mala, wish you both a happy, healthy and peaceful 2015!!! :)

    ReplyDelete