Wednesday 27 December 2023

சின்ன. சின்ன உத்திகள்

கடலை வியாபாரியை பாத்திருக்கீங்களா? வழக்கமா மடிக்குற மாதிரி பொட்டலம் மடிக்காம நீட்டா மடிப்பாங்க. பாக்குற நமக்கு அதுல நிறைய கடலை இருக்குற மாதிரி தெரியும். ஆனால் வழக்கத்தை விட கம்மியாயிருக்கும்.

  • டீ கடைக்கு போனீங்கன்னா, சூடா வடை போடுவாங்க. அந்த கடையில மட்டும் நிறைய கூட்டம் இருக்கும் சாதாரண டீ கடையை விடவும்.
  • சாப்பிங் மால்ல பில் போடுற இடத்துல நிறைய சாக்லேட்ஸ் வைச்சிருப்பாங்க. அப்ப தான் குழந்தைகள் அதை கேட்க்கும்னு. சில்லறை இல்லனாலும் இருந்தாலும் நமக்கும் சாக்லேட் குடுத்து காதுல பூ சுத்திடுவாங்க.
  • காய்கறி வாங்கும் போது நாம கேக்காமலேயே சில கடைகளில் கருவேப்பில்லை, கொத்தமல்லி தருவாங்க. நம்மளும் அடுத்த முறை அதே கடைக்கு தான் போய் வாங்குவோம்.
  • ஜுஸ் குடிக்க போகும் போது ஐஸ் கம்மியா போட சொல்லுங்க. இல்லைன்னா ஐஸ் அதிகமா போட்டு ஜுஸ்ஸை குறைச்சிடுவாங்க.
  • சில கடைகள்ல சில்லறை கேட்டோம்னா தர மாட்டாங்க. ஏதாவது வாங்கிட்டு கேட்டோம்னா தருவாங்க.
  • இதை கேள்விபட்டிருக்கேன். பூ விக்குறப்ப சில பேர் அதை தலையில் வைச்சி விட்டுடுவாங்க. நாம தலையில வைச்சதை எடுத்து திருப்பி தர மாட்டோம்ல. சென்டிமென்ட் பாப்போமில்லையா.
  • அட்சய திரிதியை அன்னைக்கு தங்கம் வாங்கணும்னு சொல்றவங்க. வருஷா வருஷம் தங்கம் சேருலன்னாலும் வாங்கிட்டு தான் இருக்காங்க. மக்களோட நம்பிக்கையை பயன்படுத்துவது. சாதாரணமா நகை கடைகளில் வருஷம் பூரா கூட்டம் இருக்காது. அதுக்கெல்லாம் சேர்த்து இந்த ஒரு நாள்ல கலைக்ஷன் பாத்துடுவாங்க.
  • சில கடைக்கோ இல்லை ஹோட்டல்க்கோ போனோம்னா அவங்க வாங்க தம்பி, வாங்க அம்மா அப்படின்னு உறவுமுறை வைச்சி கூப்பிடுவாங்க. அப்படி பேசும் போது மக்கள் அவங்களோட எமோஷனலா கனெக்ட் ஆயிடுவாங்க. திரும்ப திரும்ப அவங்க கடைக்கே போவாங்க.
  • எந்த கடைக்கு போனாலும் நீங்க அவங்ககிட்டயே போயி இந்த டிரெஸ் நல்லாயிருக்கா, இந்த போன் நல்லாயிருக்குமா போன்ற கேள்விகளை கேட்கவே கூடாது. நல்லாயில்லைன்னாலும் நல்லாயிருக்குன்னு தான் சொல்லுவாங்க.
  • சில விஷயங்களை டிரெண்ட் ஆக்குவதன் மூலம் வியாபாரம் பண்ணுவது. காதல் தோல்வின்னா லடாக் போகணும், காதலர் தினத்துக்கு சாக்லேட் வாங்கி தரணும். தாடி வளக்குறது டிரெண்டாச்சு பாத்தா பியர்டுக்கு ஆயில்ன்னு வந்துடுச்சு. தேங்காய் எண்ணையை கூட தலைக்கு தடவாத பசங்கல பியர்டுக்கு ஆயில் வாங்க வைச்சிட்டாங்க.

No comments:

Post a Comment