Wednesday 27 December 2023

அறிவியல் தகவல்கள

கருவில் முதன் முதலில் உருவாகும் உறுப்பு - இதயம்.மனிதன் இறந்து போனதும் முதலில் செயலிழக்கும் உறுப்பு - இதயம்.

அதனால் தான் அன்பின் வெளிப்பாடாக பயன்படுத்தப்படும் ஒரு உன்னதமான காதல் சின்னம் - இதயம்❤️❤️

***விண்வெளி வீரர்கள் விண்ணிற்குள் இருக்கும் போது அவர்கள் தங்களுக்கு ஏதேனும் சோகமான செய்தியைக் கேட்டோ அல்லது ஆனந்தத்திலோ கண்ணீர் விட முடியாது. விண்வெளியில் புவி ஈர்ப்பு சக்தி இல்லாததால் கண்ணீர் பொங்கி வரும் கண்ணீர் வடியவே வடியாது.

"அவனை பார்த்து பேச முடியாத

தருணங்களில்..

நான் அனுபவிக்கும் வேதனைகளை,

என் விழியோரம் உண்டாகும்

கண்ணீர்த்துளிகள் சொல்லும்!"

(விண்வெளியில் இருந்தால் எப்படி சொல்லும்?🤔)

***பூமியின் துணைக்கோள் நிலா இது நம் எல்லோருக்கும் தெரியும். பூமியிலிருந்து நிலவு 3,84,400 கி.மீ .,தொலைவில் உள்ளது. இது எல்லாம் நமக்குத் தெரிந்த ஒரு கதைதான். ஆனால் இந்த தூரம் ஒவ்வொரு ஆண்டும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக்கொண்டே இருக்கிறது தெரியுமா உங்களுக்கு? சுமார் 85 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியிலிருந்து வெறும் 35 கி.மீ தொலைவில்தான் நிலவு பூமியைச் சுற்றி வந்திருக்க வேண்டும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். இதை கேட்கவே விசித்திரமாக இருக்கிறது அல்லவா?

நிலாவே போ போ…👋

***உலகப்புகழ் பெற்ற மோனாலிசா ஓவியம் பற்றி எல்லோருக்கும் தெரியும். அதை வரைந்தவர் லியோனார்டோ டாவின்சி. இவர் பல துறைகளில் திறமை வாய்ந்தவராக விளங்கினார். இவர் தான் நாம் இன்று பயன்படுத்தும் கத்தரிக்கோலையும் கண்டுபிடித்தார் என சில வரலாற்றாசிரியர்கள் நம்புகின்றனர்.

"நன்றாக புரிந்து கொண்ட ,

கணவனும் மனைவியும்

கத்தரிக்கோல் மாதிரி😊

பார்வைக்கு எதிரெதிரே இருப்பார்கள்,

நடுவில் யார் வந்தாலும ..…காலி!"

***கடல் குதிரை மற்றும் பைப்பிஷ் (Pipe Fish) இவை கடல் வாழ் உயிரினங்களில் கருத்தரிக்கும் ஆண் உயிரினங்கள் ஆகும். இதை ஆங்கிலத்தில் Male Pregnancy என கூறுகிறார்கள்.

"சுமையை சுகமாய்

பாவிப்பது…

தாய்மை மட்டுமே"

***ஒரு வாயுவாக, ஆக்சிஜனுக்கு மனமும் கிடையாது, நிறமும் கிடையாது. ஆனால் அதன் திரவ மற்றும் திட வடிவங்களில், இது வெளிர் நீல நிறமாக இருக்கிறது.

"சுவாசிக்காமல் கூட வாழ்வேன்,

உன்னை நேசிக்காமல்..

வாழ்வது கடினம்"

No comments:

Post a Comment