மகரிஷி அவர்களை சந்தித்து இப்பகுதியினைக் காட்டி விளக்கம் கேட்டேன். அதற்கு அவர்கள் " இதனை நானே இப்போதுதான் பார்க்கின்றேன். இதனை பழையபடி மாற்ற வேண்டும் " எனக் கூறிவிட்டு " ஒரு பேராசிரியர் என் பாடல்களை சீர்திருத்தம் செய்கின்றேன் என இப்படி செய்துள்ளார். என் அனுமதியும் பெறாமல் பதிப்பகத்திற்கு கொடுத்துள்ளார். என் கவனத்திற்கு இதனைக் கொண்டு வந்ததற்கு மிக்க நன்றி " என சொல்லிவிட்டு
" எட்டினிலே கை, எண்ணம் அகண்டாகாரம்
இயற்கை ரகசியம் மலர்ந்து, எழுத்தாய் மாறும்
- பெரும்பாலான பாடல்கள் இப்படித்தான் எழுதப்பட்டன " என்றார்கள்.
" மேலும் ஏதேனும் தவறுகள் உங்கள் கண்களில் பட்டனவா ? " எனவும் கேட்டார்கள்.
" சில வார்த்தைகள் மாற்றப்பட்டுள்ளனவே என விளக்கம் கேட்டுத்தான் உங்களிடம் வந்தேன். தாங்கள் எழுதியவற்றில் குறை இருக்கமுடியுமா " என பணிவுடன் பதிலளித்தேன்.
அதற்கு " இருக்கலாம். 'வளமுடன்' என்ற வார்த்தையினை 'வளத்துடன்' என்றுதான் உச்சரிக்க வேண்டும் என இன்னும் சொல்லிக்கொண்டிருக்கின்றார்கள். நம் பயிற்சிகளில் மாற்றம் தேவைப்படின் கலந்தாலோசித்து முடிவெடுத்து செயல் படுத்த வேண்டும். இப்படித்தான் நம் உடற்பயிற்சியில் எல்லா நிலைகளிலும் ஐந்து முறைகள் செய்ய வேண்டும் என்பதினை சில நிலைகளில் மூன்றாய் குறைத்தோம். பஞ்சபூத தவம், நவகிரக தவம் இவற்றைத் தனித்தனியாக செய்தோம். பிறகு இரண்டையும் இணைத்தோம். தவறுகளைத் திருத்தித்தான் ஆகவேண்டும் " என முடித்தார்கள்.
மறுபடியும் கேட்டார்கள் : " எதிலாவது மாற்றம் தேவையா? "
நான் தயங்கியபடி " நவகிரக தவத்தில் சூரியன் பூமியைப்போல் 19 லட்சம் மடங்கு பெரிது என சொல்கின்றோம். இன்றைக்கு விஞ்ஞானம் 13 லட்சம் மடங்கு என சொல்கின்றது " என்றேன்.
" இதுபற்றி வரும் ஆலோசனைக்குழு கூட்டத்தில் பேசி முடிவெடுப்போம் " என்றார்கள் மகரிஷி அவர்கள்.
எங்கள் வீட்டில் நடந்த துக்க நிகழ்வு காரணமாக என்னால் அந்த கூட்டத்திற்கு செல்ல இயலவில்லை.
( This post is 16850th post of this blog and this blog has now more than 615000 views )



No comments:
Post a Comment