🌷எவ்வளவு கொஞ்சனுமோ எவ்வளவு கெஞ்சனுமோ அவ்வளவும் கொஞ்சி கெஞ்சுவாள். ஆனால் கேட்க கூடாதென்று முடிவெடுத்தால் எந்த பேச்சையும் கேட்கமாட்டாள்.
🌷எவ்வளவுக்கெவ்வளவு இலகுவான வார்த்தைகள் வந்ததோ அவ்வளவுக்கவ்வளவு கடினமான வார்த்தைகளும் ஒருத்தியிடமே வரும்.
🌷பார்க்கும் வரை அப்படி பார்த்துக்கொள்வாள்.
பார்க்கக்கூடாது என்று முடிவெடுத்தால் 'எவரையும்' பார்க்கமாட்டாள்.
🌷 அவளால் மீளவே முடியாத இன்னல்களிலிருந்து ஒரே நாளில் உறுத்தலின்றி வெளியேறி இன்னொரு உலகத்திற்கு சென்று வரவும் வாழவும் முடியும். அதிலியே புழுங்கி வெந்து தணிந்து வேறு இடத்திற்கு செல்லாமல் அங்கேயே செத்தொழியவும் முடியும்.
🌷தன்மான திமிரில் எவரையும் சாராமல் தன்னை மட்டுமே நம்பி சுயசிந்தனை உடைய பெண்ணாகவும் அவளால் வாழ முடியும். எல்லாவற்றுக்கும் அடங்கி அத்தனைக்கும் தலையை ஆட்டும் அடங்கிய பெண்ணாகவும் வாழ முடியும்.
🌷கண்ணீர் சிந்தாமல் அழும் வித்தையை அறிமுகபடுத்தியவளும் அவள் தான். ஊர் அறிய கத்தி கதறி அழுது அனைத்து பார்வையும் தன்மீது விழ வைத்தவளும் அவள்தான்.
🌷எல்லா சோகத்தையும் மனதில் ஏற்றிக்கொள்ள முடியாமல் அனைவரிடமும் ஆறுதலுக்காக ஏங்குபவளும் அவள்தான் அதே போல, துயரங்களை எல்லாம் வார்த்தையில் வடிக்க முடியாமல் துயருற்ற போதிலும் தனக்கு தானே ஆற்றி கொள்பவளும் அவள்தான்.
🌷இதுவும் கடந்து போகும் என உணர்த்தியவளும் அவள்தான். எதுவும் மறந்து போகாது என அனத்தியவளும் அவள்தான்.
🌷அடுத்தவரின் பிரச்சனைகளுக்கு உடனடியாக தீர்வு சொல்பவளும் அவள்தான்.அதே விஷயம் தனக்கென்று வரும் போது தீர்வு காணாமல் அழுது புலம்புவளும் அவள்தான்.
🌷தலைவலியை பிரளயம் போலவும் உயிரே போகும் வலியை மிகச் சாதாரணமான எடுத்துக்கொள்ளவும் அவளால் மட்டுமே முடியும்.
🌷ஆண்டியை அரசனாக்கவும் முடியும் அரசனை ஆண்டியாக்கவும் முடியும்.
🌷அவளால் ஆக்கவும் முடியும் அழிக்கவும் முடியும்
🌷அவளால் காதலிக்கவும் முடியும் கதற வைக்கவும் முடியும.
No comments:
Post a Comment