Monday, 30 June 2025

MEMES OF THE DAY ( 30-06-2025 )











 

குலதெய்வங்கள்

 குலதெய்வங்கள்_என்பவர்கள்_யார்

#அவர்களின்_பெருமை_என்ன.

#குலதெய்வம்_விஞ்ஞானத்தோடு_எப்படி_ஒத்துபோகின்றது.

#என்பவைகளை_பற்றி_சற்று_விரிவாக_ஆராயலாம்_வாருங்கள்



* நம் முன்னோர்கள் அதாவது நம் தந்தை வழி பாட்டன்
பாட்டிமார்கள் வணங்கி வந்த தெய்வம் தான் நம்குல
தெய்வமாகும். இந்த தந்தை வழி பாட்டன்மார் வரிசையில், மிகப்பெரிய ஒழுங்கு ஒன்று இருப்பதை கூர்ந்துகவனித்தால் உணரலாம். 

அதுதான்‘ கோத்திரம்’ என்னும் ஒரு ரிஷியின் வழிவழிப் பாதை....

* பிற கோத்திரத்தில் இருந்து பெண்கள் வந்து இந்த
வழிவழி பாதையில் நம் தாத்தாக்களின் வாழ்க்கை துணையாக கை பிடித்திருப்பார்கள்.

எக்காரணம் கொண்டும் ஒரே கோத்திரத்தில் பெண்
சம்பந்தம் ஏற்பட்டிருக்காது. இதனால், ரிஷி பரம்பரையானது சங்கிலியை  போல அறுடாமல், ஒரே சகோதரத்துவத்தோடு வந்த வண்ணம் இருக்கும். இது ஒரு முக்கியமான ஒழுங்கு சார்ந்த விஷயமாகும்.

* இந்த உலகத்தில் ஆயிரம் கோயில்கள் இருக்கின்றன.அந்த கோயில்களுக்கு அவர்கள் போயிருக்கலாம் போகாமலும் இருக்கலாம். அதற்கு உத்தரவாதமில்லை.

ஆனால், குலதெய்வ கோயிலுக்கு, நாம் பக்தி என்கிற
ஒன்றை அறிவதற்கு முன்பே, நம் தாய் தந்தையரால்
அங்கு கொண்டு செல்லப்பட்டு, முடி காணிக்கை என்ற முதல் மொட்டை மற்றும் காதுகுத்து என்று தொடர்ந்து வணங்க வைக்கவும் படுகிறோம். இதன்படி பார்த்தால், குலதெய்வ சன்னிதியில் சென்று நாம் நிற்கும் போது, நம் பரம்பரை வரிசையில் போய் நிற்கிறோம்.

* இந்த வரிசை தொடர்பை வேறு எங்காவது, எந்த விதத்திலாவது உருவாக்க முடியுமா?????

அது மட்டுமல்ல. ஒரு மனிதனின் பிறப்புக்கு பின்னே இப்படியொரு பரம்பரை வரிசை இருப்பதை நினைக்க கூட தெரியாமல், அதிகபட்சம் இரு பாட்டன் பாட்டி பேருக்கு மேல் தெரியாமல் அல்லவா நம்வாழ்க்கை போக்கு உள்ளது?

* இந்த வழி வழி போக்கில் ஒருவர் மூட்டை மூட்டையாக
புண்ணியத்தை கட்டியிருக்கலாம். இன்னொருவர்
பாவமே கூட பண்ணியிருக்கட்டுமே!

* நாம் அங்கே போய் நின்று நம் பொருட்டு பிரத்யேகமாக வெளிப்படும் அந்த சக்தியை தொழும் போது, நம் முன்னோர்களும் பித்ருக்களாக இருந்து நம்மை ஆசிர்வாதிக்கிறார்கள்.

இது எத்தனை தூரப்பார்வையோடு, வடிவமைக்கப்பட்ட ஒரு விஷயம்?”

#குலதெய்வம்::

*  குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம் ஆகும்.
தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம்
குலதெய்வம் ஆகும். குலதெய்வமே நமக்கு எளிதில்
அருளினை தரும். மேலும் மற்ற தெய்வவழிபாடுகளின் பலன்களையும் பெற்று தரும்.

* குலதெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாகவே காணப்படும். ஆனால் அதன் சக்தியை அளவிட முடியாது. சிறு தெய்வம் என்று அலட்சியப் படுத்தக்கூடாது.

* எமன் கூடஒருவரின் குலதெய்வத்தின் அனுமதி பெற்று தான் உயிரை எடுக்கமுடியும்!!!!!!!

* குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில்
தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் ஆகும்.
அந்த புனித ஆத்மாக்கள் தங்களின்குலத்தினை
சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக்
காக்கும் வல்லமை படைத்தவை.

எனவே தான் அந்த தெய்வங்கள் குலதெய்வங்கள் என்று சிறப்புடன் அழைக்கப்படுகின்றன.

* குலதெய்வங்களும் கர்மவினைகளை நீக்க வல்லவை.யாருக்கு கர்மவினைகள் மிக அதிகமாக இருக்கிறதோ அவருக்கு குலதெய்வமே தெரியாமல் போவதும் உண்டு.

* நம் குடும்பத்தை பற்றி அறிய யாரிடம் குறிகேட்க
சென்றாலும் குறிசொல்பவர் நம்குல தெய்வத்தை அழைத்து அதனிடம் கேட்டே நம்மை பற்றிய விபரத்தை சொல்ல முடியுமே தவிர அவரால் தன்னிச்சையாக
எதையும் சொல்ல முடியாது.

இதை உணர்ந்த மந்திரவாதிகள் ஒருவருக்கு செய்வினை செய்யும்காலத்தில் யாருக்கு செய்வினை செய்ய இருக்கிறாரோ அவரது குல தெய்வத்தினை மந்திர கட்டு மூலம் கட்டுப்படுத்தி விட்ட பின்பே தான்
செய்வினை செய்வார்.

* மந்திரவாதிகள் தாங்கள் வசப்படுத்திய தேவதைகளின் மூலம்மற்றவர்களின்குலதெய்வத்தின் விபரங்களை எளிதில் பெற்று விடுகிறார்கள்.

* மந்திர கட்டுகளுக்கு கட்டுப்படாத குலதெய்வங்களும்
உண்டு. அவை அந்த மந்திரவாதிகளை அழித்த வரலாறும் உண்டு.

* குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில் தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் ஆகும்.

* அந்த புனித ஆத்மாக்கள் தங்களின்குலத்தினை
சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக் காக்கும் வல்லமை படைத்தவை.

எனவே தான் அந்த தெய்வங்கள் குலதெய்வங்கள் என்று சிறப்புடன் அழைக்கப்படுகின்றன.

* குலதெய்வங்களும் கர்மவினைகளை நீக்க வல்லவை.

யாருக்கு கர்மவினைகள் மிக அதிகமாக
இருக்கிறதோ அவருக்கு குலதெய்வமே தெரியாமல்
போவதும் உண்டு.

* பொதுவாக பெண்கள் மட்டும் இரண்டு குல தெய்வங்களை வணங்குபவர்களாக இறைவன் படைத்திருக்கிறான்.

* பிறந்த வீட்டில் ஒரு தெய்வம் புகுந்த வீட்டில் ஒரு தெய்வம். திருமணத்திற்கு முன் பிறந்த வீட்டின்
குலதெய்வத்தை வணங்குபவர்கள் திருமணம்
முடிந்தவுடன் கணவனின் வீட்டில் உள்ள குல தெய்வத்தை வணங்க ஆரம்பிக்கிறார்கள்.

* பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குவது கிடையாது.பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு வருடத்திற்கு ஒரு முறை செய்யும் வழிபாடு அவர்களை ஆண்டு முழுவதும் காப்பாற்றும். புகுந்த வீட்டில் எந்த பிரச்சினையும் சமாளிக்ககூடிய ஒரு ஆற்றலை தரும்.

* இதுவரை யாரும் பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு வழிபாடு செய்யாமல் இருந்தால் பிறந்த வீட்டின்
குலதெய்வத்திற்கு திரு விழாகாலங்களில் வழிப்பாட்டை மேற்கொள்ளுங்கள்.

* ஒருவரது குலம் ஆல்போல் தழைத்து அருகுபோல
வேரூன்ற வேண்டுமனால் குலதெய்வ வழிபாடு மிக, மிக முக்கியம். குலதெய்வதோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது.

குலதெய்வத்தின் அனுமதி அல்லது அனுகிரகம்
இல்லை என்றால் ஒருவர் என்னதான் சக்தி வாய்ந்த
ஹோமம், யாகம் செய்தாலும், ஆலயங்களுக்கு சென்றாலும் எதிர்பார்த்த பலன் தருமா என்பது சந்தேகம்தான்.

எனவே உங்கள் குலதெய்வத்தின் கோவிலுக்கு அடிக்கடி (குறைந்தது வருடம் ஒரு முறையாவது) செல்லுங்கள். அபிஷேக ஆராதனைகள் செய்யுங்கள்.
அக்கோவிலுக்கு உதவுங்கள்.

* பூஜைகள் நடைபெற ஏற்பாடு செய்யுங்கள். பிறகு பாருங்கள் உங்கள் வாழ்க்கைபோகும் போக்கை…

* அடிப்படையில் இந்துமதம் பற்றற்ற தன்மையை போதிக்கிறது, அதாவது அனைத்தையும் துறந்து தியானம், தவம் மூலம் இறை நிலையை அடைவது. ஆனால் இந்த குலதெய்வம் மனிதன் லௌகீக
வாழ்க்கைக்கு தேவையான பலன்களை அளிக்கிறது
எந்த ஒரு வம்சத்திலுமே 13 வம்சாவளியினருக்கு மேல் அவர்கள் தொடர்ந்து வணங்கும் குல தெய்வம் இருக்க
முடியாது என்பது தெய்வக்கணக்கு.

ஏதாவது ஒரு கட்டத்தில் வழி வழியாக வந்தவர்களின்
வம்சத்தினருக்கு குழந்தை பேறு இல்லாமலோ,அகால மரணங்களினாலோ, ஆண் வம்ச விருத்தி அடையாமலோ அல்லது ஏதாவது காரணத்தினால் வம்சம் அழிந்து விடும்.

* ஆகவே ஒரு வம்சத்தின் குலதெய்வம் என்பது 13
வம்சாவளிகளுக்கு மட்டுமே தொடர்ந்து கொண்டு
இருக்கும்.

விஞ்ஞான ரீதியிலேயே இதற்கான பதிலைக்
காண்போமா.....?

* விஞ்ஞான முறையில் யோசித்தால்
ஒரு குழந்தை ஆணா,பெண்ணா என்பதை முடிவு செய்வது ஆணே.

ஒவ்வொரு குழந்தைக்கும் 23+23 க்ரொமொசோம்கள்
உள்ளன என்பதை அறிவோம். இது தாய் மூலம் 23 தந்தை மூலம் 23 என்பதையும் அறிவோம்!!!!!!

* இதிலே பிறக்கப் போகும் குழந்தை ஆணா,பெண்ணா என்பதைத் தந்தையின் குரொமொசோமே முடிவு செய்கிறது. தாயிடம் xx குரோமோசோம்கள் மட்டுமே இருக்கின்றன. தந்தைக்கோ, xy என இருவிதமான மாறுபட்ட குரோமோசோம்கள் உள்ளன.

* ஆணின் y யுடன் பெண்ணின் x சேர்ந்தால் ஆண் குழந்தையும் இருவரின் x+x சேர்ந்தால் பெண் குழந்தையும் பிறக்கின்றது என்பதை விஞ்ஞானம் அறுதியிட்டுக் கூறி உள்ளது.

* ஒரே கோத்திரத்தில் திருமணம் செய்யக்
கூடாது என்பதன் காரணமும் இதை ஒட்டியே.
ஒரே கோத்திரத்தில் பிறந்த பெண்ணோ, ஆணோ ஒருவரை ஒருவர் அறியாதவர்களாகவே இருந்தாலும் அவர்கள் சகோதர, சகோதரியாகவே கருதப் படுகிறார்கள் என்பதை நம் சமூகம் திட்டவட்டமாய்க் கூறும்.

ஏனெனில் பெண் குழந்தையை உருவாக்கும் x குரோமோசோம் இருவரிடமும் இருக்கையில் ஆண்
குழந்தையை உருவாக்கும் y க்ரோமோசோம் மட்டும்
ஆணிடம் தான் உள்ளது. பெண்ணிற்கு y குரோமோசோம்கள் தந்தை வழி வருவதில்லை.

ஆனால் அதே ஆண் குழந்தைக்குத் தந்தையிடம் இருந்து y க்ரோமோசோம்கள் வருகின்றன. ஏனெனில்
அவன் மூலம் தான் வம்சம் மீண்டும்வளரப் போகின்றது வழி வழியாக.

* வழிவழியாக என்பதில் இருந்தே புரிந்திருக்க வேண்டுமே, முப்பாட்டனார், பாட்டனார், மகன், பேரன்,
கொள்ளுப் பேரன், எள்ளுப் பேரன் எனத் தொடர்ந்து இது ஒவ்வொருவரிடமும் விதைக்கப்பட்டுத் தொடர்ந்து காப்பாற்றப்பட்டு வருகின்றது.

இதன் முக்கியத்துவம் குறித்து அறிந்தே நம் முன்னோர்கள் ஆண் குழந்தைகளுக்கு முக்கியத்துவம்
அளித்திருக்கின்றனர்.

* இதே முப்பாட்டி, பாட்டி, மகள், பேத்தி, கொள்ளுப்பேத்தி, எள்ளுப்பேத்தி என x குரோமோசோம்கள் வழி வழியாக வருவதில்லை. தன் தாயிடம் இருந்தும், தந்தையிடம் இருந்தும் x க்ரோமோசோம்கள் மகளுக்குக் கிடைக்கின்றது.

ஆனால் இயற்கையின் மாபெரும் அதிசயமாக y
க்ரோமோசோம்கள் பெண்களுக்குக் கடத்தப்படுவதில்லை என்பதோடு தந்தையிடம்
இருந்து மகன் பெறுவதும் அவன் பரம்பரையின் y
க்ரோமோசொம்கள் மட்டுமே.

* ஒரு ஆணால் மட்டுமே இந்த y க்ரோமோசோம்களைத்
தன் மகனுக்கு அளிக்க முடிகிறது.பெண்ணிற்கோ எனில் ஆணின் yக்ரோமோசோம்கள் கிடைப்பதில்லை.

ஆணின் y க்ரோமோசோம்கள் ரொம்பவே பலவீனமான ஒன்று.

மேலும் தொடர்ந்து காலம் காலமாக இந்த y க்ரோமோசோம்கள் அவரவர் பரம்பரை ஆண் மக்களுக்குச் சென்று கொண்டிருப்பதால் இன்னமும் பலவீனம் ஆகிக் கொண்டிருக்கிறதாம்.

* 13 தலைமுறைக்கு மேல் அது வலுவிழந்து பயனற்று போய்விடும். அதனால் ஆண் வாரிசு ஏற்பட வாய்ப்பு இல்லை. மேலும் ஏற்கெனவே பலவீனமான y க்ரோமோசோம்கள் மேலும் பலவீனம் அடைய கூடாது என்பதாலும், பரம்பரை நோய்கள் தொடரகூடாது என்பதாலுமே சொந்த ரத்தஉறவுகளுக்கிடையே திருமணம் தவிர்க்கப்படுகிறது.

ஜோதிடம் ஒரு பொய்யான விஞ்ஞானம் - சுஜாதா

 

Astrology may be interesting but not real science...

சுஜாதா அவர்கள் கேள்வியையும் கேட்டு பதிலையும் தருகிறார்... கொஞ்சம் விஞ்ஞானம்...புரிந்து கொள்ள கொஞ்சம் முயற்சிக்கத்தான் வேண்டும்...

கேள்வி : அஸ்ட்ரானமி அறிவியல் தான். ஆனால், அஸ்ட்ராலஜி? ஜோஸ்யம்? அதிலும் அஸ்ட்ரானமி போலவே பல விஷயங்கள் சொல்லுகிறார்கள். கிரகங்களின் பேரையெல்லாம் சரியாகச் சொல்லி, அவை நம் வாழ்க்கையின் சம்பவங்களைப் பாதிக்கின்றன என்று சொல்லுகிறார்கள். கிரகணங்களைக் கரெக்டாகச் சொல்கிறார்கள். அது அறிவியலா?

ஜோஸ்யம், வாரபலன் என்பது எல்லாம் அறிவியல் இல்லை. ஏன் என்று கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். கலிலியோ சூரியன் பூமியைச் சுற்றவில்லை;பூமி தான் சூரியனைச் சுற்றுகிறது என்று அவர் வாழ்நாளில் சொன்ன சித்தாந்தம் அறிவியலின்படி உண்மை. ஆனால், கலிலியோ சொன்ன மற்ற பல விஷயங்கள் இன்றைய ஜோஸ்யத்தைவிடப் பொய்யானவை. இன்றைய ஜோஸ்யத்திலாவது கொஞ்சமேனும் பலிக்கிறது. அரைகுறையான சில உண்மைகள், அவர்கள் சொன்னபடி ஸ்டாடிஸ்டிக்ஸ் விதிகளின்படி பலிக்கிறது. கலிலியோ சொன்னதில் அபத்தங்களே அதிகம் இருந்தன. கடல் அலைகள் பூமி அசைவதால், ஜலம் தளும்புவதால் ஏற்படுவது என்று கலிலியோ சொன்னார். அபத்தம். இருந்தும் விஞ்ஞானி என்கிறோம். கடலங்குடி சாஸ்திரிகளை விஞ்ஞானி என்று சொல்லவில்லை.

காரணம் குறிக்கோள் வித்தியாசம். கலிலியோ அவர் காலத்தில் கருவிகள் இல்லாததால் பல விஷயங்களைத் தப்பாகச் சொன்னார். ஆனால் அவர் உத்தேசத்தில் அறிவியல் இருந்தது.

இன்றைய ஜோதிடக்கலை, 'சனி வக்ரமாக அமையும்போது காரியத்தடை, தோல்விகள், தொழிலில் இழப்பு போன்ற அனுகூலமற்ற காரியங்கள் உண்டாகும்; நாட்டுக்குச் சோதனை ஏற்படும்' என்று சொல்வது எல்லா நாடுகளுக்கும், எல்லாக் காலத்திலும் பொருந்துமாயின் ஜோதிடத்தை விஞ்ஞானம் என்று ஒப்புக் கொள்ள முடியும். சிலருக்கு மட்டும் பலித்து, சிலருக்குப் பலிக்காமல், அப்படிப் பலிக்காததற்குக் காரணம் சொல்ல விதி விலக்குகள் என்று சப்பைக்கட்டு கட்டி, 'குரு கொஞ்சம் இந்தப் பக்கம் பார்த்து விட்டான்;அதனால் கான்ஸல்' என்று சமாதானம் சொல்லும்போது, விரும்பியதை நோக்கி விஞ்ஞானத்தை வளைக்கும்போது, அது விஞ்ஞான முறையிலிருந்து வழுவுகிறது. இவ்வளவு தான் வித்தியாசம்.

விஞ்ஞானத்தில் விதிகளுக்கு ஒரு விதமான பிரபஞ்சத்தனம் உண்டு. யுனிவர்ஸாலிட்டி. அப்படி இல்லை எனில் இன்னும் விஞ்ஞானம் செய்ய வேண்டும். இந்த பிரபஞ்சத்தனம் வரும் வரையில் தேடிக்கொண்டே இருக்க வேண்டும். பரிசோதனை செய்வதுதான் விஞ்ஞானம் என்று அவசியமில்லை.

இன்றைய க்வாண்டம் இயற்பியல், காஸ்மாலஜியில் பிரபஞ்ச சக்திகளைப் பற்றி புதிதாக ஒன்று சொல்கிறது. பிரபஞ்சம் முழுவதும் அத்தனை கோடான கோடி துகள்களையும் ஒரு மெல்லிய சரடு - மிக மிக மெல்லிய சரடு இணைக்கிறது என்று ஒரு தியரி சொல்கிறது. அந்த சூப்பர் சரடு கண்கூடாகப் பார்த்து அறிந்து கொள்ள முடியாத அத்தனை நுட்பமான சரடு. அதன் நுட்பம் எப்படி? பூமியைவிட ஓர் அணு எத்தனை சின்னதோ அந்த அளவுக்கு அந்தச் சரடு அணுவைவிடச் சின்னது. நம்மால் பார்க்கவே முடியாது. நிஜமாகவே சரடு விட்டிருந்தாலும் அதைச் சோதித்துப் பார்க்க இயலாத நுட்பம். இதுமட்டும் ஜோஸ்யம் போல் ரீல் இல்லையா என்று கேட்கலாம்.

இந்தச் சரடு எதற்காக அமைத்தார்கள்? வாரபலன் எழுதுவதற்கு அல்ல. பிரபஞ்சத்தின் நான்கு ஆதார சக்திகளை ஒருங்கிணைத்து பார்க்க. ஐன்ஸ்டீன் முதல் பலர் முயன்று தோற்ற யுனிபைடு பீல்டு தியரி இப்போது இந்தச் சரடு சித்தாந்தத்தின் மூலம் கைவசமாகும் போலத்தோன்றுகிறது. வெளிப்படையாக நாம் காணும் சில க்வாண்டம் விளைவுகளை ஒருமித்து விளக்குவதற்கு இந்த மாதிரி ஒரு சரடைக் கற்பனை பண்ணிக் கொண்டால் எல்லாக் கணக்கும் சரியாக வருகிறது. அதனால் ஒரு சரடு இருக்கலாம் என்று சித்தாந்தம் அமைக்கிறார்கள். சரிப்பட்டு வரவில்லையெனில் தூக்கி எறிந்து விடுவார்கள். எப்போதும் மறுக்கப்படத் தயாராக இருக்கும் சித்தாந்தங்கள் கொண்டதுதான் உண்மை அறிவியல். அதனால் கற்பனையும் விஞ்ஞானம் தான்.

எலக்ட்ரானைப் பார்க்க முடியாது. ஆனால், ஒரு எலக்ட்ரான் டெலிவிஷன் திரையின் மீது மோதும்போது ஏற்படும் ஒளி வித்தியாசங்கள் தான் டெலிவிஷன். விளைவை நோக்க முடியும். அந்த விளைவு எப்போதும் -நாம் இருந்தாலும் இறந்தாலும்- ஒன்று தான். ஜோதிடத்தின் விளைவுகள் ஜோதிடருக்கு ஜோதிடர் மாறுகிறது.

அதனால் அது பொய்யான விஞ்ஞானம்.

உன்னை கவனி... பிறரை விட்டுவிடு - ஓஷோ

இந்தக் கேள்வியை

மாதேவ் ஆனந்தோ கேட்கிறார்:

"நான் சில பேர்களை கவனிக்கும் பொழுது...அவர்கள் அதே பழைய செயல்களையே செய்வதுபோல் எனக்குத் தோன்றுகிறது...அவர்களிடம் எந்த மாற்றமும் தெரியவில்லை...

அப்பொழுது என் கண்களும், என் இதயமும் மிகவும் சோர்வடைந்து...மிகவும் கீழான நிலைக்குச்

சென்றுவிடுகிறது...

ஓஷோ:  இந்தக் கேள்வி அநேகமாக,இங்கே அமர்ந்திருக்கும் அனைவரின்

உள்ளத்திலும் கிளம்பியிருக்கலாம்...

இந்தக் கேள்வியை முதலில் ஆழமாகப் புரிந்து கொள்ளுங்கள்...

"ஆன்மீகத் தேடலில் ஈடுபட்டிருக்கும்
அனைவரும்...

இந்தக் கேள்வியைத் தாண்டித்தான் செல்லவேண்டும்...

🌸முதலில் நீங்கள் ஒன்றை நன்றாக
ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்...

அதாவது, பிறரை தீவிரமாகக் கவனிப்பதைத் தவிருங்கள்...

அது உங்கள் வேலையில்லை..
தேவையும் இல்லை...

🌸அடுத்தவர்கள் அப்படி அதே செயல்களைச்
செய்து மகிழ்ச்சி அடைந்து கொண்டிருந்தால்...

அதைத் தடுப்பதற்கு நீங்கள் யார்?

🌸அந்தத் தீர்ப்புக் கூறுவதற்கு உங்களுக்கு
யார் அதிகாரம் கொடுத்தது?

இப்படி அடுத்தவர்களைப் பற்றி
எப்பொழுதும் எடைபோடுவதை...

முதலில் நிறுத்துங்கள்.

🌸இதனால் அடுத்தவர்களுக்கு,
எந்த பிரயோஜனமும் இல்லை...

அதற்குமாறாக...
உங்களுக்கு, நீங்களே தீமையைத்
தேடிக் கொள்கிறீர்கள்...

நன்றாக ஞாபகம் இருக்கட்டும்.

🌸நீங்கள் ஏன் அடுத்தவர்களைப் பற்றிக் கவலைப்படுகிறீர்கள்?

அவர்களுக்கும், உங்களுக்கும்
என்ன சம்மந்தம்?

ஒருவன் தன் இஷ்டப்படி வாழ
சகல சுதந்திரமும் உண்டு...

🌸ஒருவனுடைய செயல்...
'உங்களுக்குத்' தவறாகத் தெரியலாம்...

அதைப் பற்றி அவனுக்கு என்ன கவலை?
"அவன் இயல்பில்,
அவன் சந்தோஷமாகவே இருக்கிறான்...

அது நல்லதுதான்.

🌻ஆனால், நாம், ஒருவனை...
அவன் எண்ணப்படி வாழ
அனுமதிப்பதே இல்லை...

"மற்றவர்களைப் பொருத்தவரையில்...

நாம் எப்பொழுதும் ஒரு நீதிபதியாகவே
இருக்க விரும்புகிறோம்..."

🌻சில சமயம், அவர்களை பாவிகள் என்றும்,
பல சமயம்
'அவன் நரகத்துக்குத்தான் செல்வான்' என்றும்...

மற்றும் அவன் இப்படி, இவன் இப்படி என்று விமர்ச்சித்துக் கொண்டே இருக்கிறோம்...

🌻இப்படி செய்து...
இந்தப் பழைய அற்ப விளையாட்டில்,
நீங்கள் களைப்படைகிறீர்கள்...

இது தேவைதானா?

அதற்குப் பதில், அவர்கள் அல்லவா
களைப்படைய வேண்டும் !
சலிப்படைய வேண்டும் !

🌻ஆகவே, தயவு செய்து
பிறரைக் கவனித்தலை நிறுத்தவும்.

🌸உங்களுடைய சகல சக்திகளையும்,
நீங்கள் உங்களைக் கவனிப்பதிலேயே
செலவழிக்க வேண்டும்...

🌸"ஒருவன், எவைகளையெல்லாம்
தன்னுள்ளே பார்க்க விரும்பவில்லையோ...

அதையெல்லாம் பிறர்மேல்
பார்க்கவே விரும்புகிறான்..."

🌸நாம் காலம் காலமாக...
ஏன், பல பிறவிகளாக...
இதைச் செய்து வருகிறோம்...

ஒரு கட்டத்தில் களைப்பும் அடைகிறோம்...

"அடுத்தவர்களை ஒப்பிடும்போது,
நாம் எவ்வளவோ பரவாயில்லை"

என்ற பொய்யான உணர்வு
உங்களிடம் ஏற்படுகிறது...

🌸நீங்கள் காலையில் எழுந்ததும்,
பத்திரிக்கையைப் படிப்பதன்
காரணம் தெரியுமா?

அவைகள் அந்த உணர்வை உங்களிடம் ஏற்படுத்துகிறது...

🌸காலையில் டீயோ, காபியோ அருந்துவதற்கு முன், அதைப் படிக்கவே ஆசைப்படுகிறீர்கள்...

ஆனால், அவைகளில்
எந்தப் புதுமையும் இல்லை...

🌸பத்திரிக்கைளைக் கூர்ந்து கவனித்தால்...

பழைய செயல்கள்தான்...
இடம் மாறி, ஆள் மாறி
வந்து கொண்டிருப்பதை அறிவீர்கள்!

ஆனால், அது உங்களுக்கு
ஒருவித திருப்தியைக் கொடுக்கிறது.

🌸படித்த விஷயங்களையே...
மீண்டும், மீண்டும் காலையில் எழுந்ததும் தினந்தோறும் படிக்கிறீர்கள்...

ஆகவே, அடுத்தவர்களை கவனிப்பதை
ஒரு கட்டத்தில் விட்டு விடுங்கள்,
அது தேவையற்றது....

மன முதிர்ச்சி


மன முதிர்ச்சி என்றால் என்ன?*

*What is Maturity of Mind ? *

1. மற்றவர்களை திருத்துவதை விட்டுவிட்டு
    நம்மை திருத்திக்கொள்வது.
1. Correcting ourselves without trying to correct others.

2. அனைவரையும் அப்படியே (குறைகளுடன்)
    ஏற்றுக்கொள்வது.
2. Accepting others with their short comings.

3. மற்றவர்களின் கருத்துக்களை அவர்கள்
கோணத்திலிருந்து புரிந்துகொள்ளுதல்.
3. Understanding the opinions of others from their perspectives.

4. எதை விட வேண்டுமோ அதை விட பழகிகொள்தல்.
4. Learning to leave what are to be avoided.

5. மற்றவர்களிடமிருந்து எதிர்பார்ப்பதை விடுதல்.
5. Leaving the expectations from others.

6. செய்வதை மன அமைதியுடன் செய்வது.
6. Doing whatever we do with peace of mind.

7. நம் புத்திசாலித்தனத்தை மற்றவர்களிடம்
    நிரூபிப்பதை விடுவது.
7. Avoiding to prove our intelligence on others.

8. நம் செயல்களை மற்றவர் ஏற்க வேண்டும்
என்ற நிலையை விடுதல்.
8. Avoiding the status that others should accept our actions.

9. மற்றவர்களுடன் நம்மை ஒப்பிடுவதை விடுதல்.
9. Avoiding the comparisons of ourselves with others.

10. எதற்குமே சஞ்சலப்படாமல் மனதை அமைதியாக வைத்துக்கொள்ள முயற்சித்தல்..
10. Trying to keep our peace in our mind
      without worrying for anything.

11. நம் அடிப்படை தேவைக்கும், நாம் அடைய
    விரும்புவற்றிற்கும் உள்ள வேறுபாட்டினை உணர்தல்.
11. Understanding the difference between the basic needs
      and what we want.

12. சந்தோசம் என்பது பொருள் சம்பந்தப்பட்டது அல்ல
     என்ற நிலையை அடைதல்.
12. Reaching the status that happiness is not connected
      with material things.

*இந்த 12 ல் குறைந்தது ஒரு ஏழெட்டையாவது கடைபிடிக்க முயற்சித்தால் வாழ்க்கை எளிதாகிவிடும்*

*Our life will be simple if only we practice 7 or 8 of the above 12* 

முன்னோர்கள் முட்டாள்களில்லை

 

🌝 தவளை கத்தினால் மழை.

🌝 அந்தி ஈசல் பூத்தால்

அடை மழைக்கு அச்சாராம்.

🌝 தும்பி பறந்தால் தூரத்தில் மழை.

🌝 எறும்பு ஏறில் பெரும் புயல்.

🌝 மார்கழி மழை மண்ணுக்கு உதவாது.

🌝 தை மழை நெய் மழை.

🌝 மாசிப் பனி மச்சையும் துளைக்கும்.

🌝 தையும் மாசியும் வீடு மேய்த்து உறங்கு.

🌝 புற்று கண்டு கிணறு வெட்டு.

🌝 வெள்ளமே ஆனாலும்

பள்ளத்தே பயிர் செய்.

🌝 காணி தேடினும் கரிசல் மண் தேடு.

🌝 களர் கெட பிரண்டையைப் புதை.

🌝 கெட்ட நிலத்துக்கு எட்டு வன்னி

கெட்ட குடும்பத்துக்கு எட்டு வெள்ளாடு.

🌝 நன்னிலம் கொழுஞ்சி

நடுநிலம் கரந்தை

கடை நிலம் எருக்கு.

🌝 நீரும் நிலமும் இருந்தாலும்

பருவம் பார்த்து பயிர் செய்.

🌝 ஆடிப்பட்டம் பயிர் செய்.

🌝 விண் பொய்த்தால் மண் பொய்க்கும்.

🌝 மழையடி புஞ்சை

மதகடி நஞ்சை.

🌝 களரை நம்பி கெட்டவனும் இல்லை மணலை நம்பி வாழ்ந்தவனும் இல்லை.

🌝 உழவில்லாத நிலமும்

மிளகில்லாத கறியும் வழ வழ.

🌝 அகல உழவதை விட

ஆழ உழுவது மேல் .

🌝 புஞ்சைக்கு நாலு உழவு

நஞ்சைக்கு ஏழு உழவு.

🌝 குப்பை இல்லாத வெள்ளாமை சப்பை.

🌝 ஆடு பயிர் காட்டும்

ஆவாரை கதிர் கட்டும்.

🌝 கூளம் பரப்பி கோமியம் சேர் .

🌝 ஆற்று வண்டல் தேற்றும் பயிரை.

🌝 நிலத்தில் எடுத்த பூண்டு

நிலத்தில் மடிய வேண்டும்.

🌝 காய்ச்சலும் பாய்ச்சலும் வேண்டும்.

🌝 தேங்கி கெட்டது நிலம்

தேங்காமல் கெட்டது குளம்.

🌝 கோரையை கொல்ல கொள்ளுப் பயிர் விதை.

🌝 சொத்தைப் போல்

விதையை பேண வேண்டும்.

🌝 விதை பாதி வேலை பாதி.

🌝 காய்த்த வித்திற்கு பழுது இல்லை.

🌝 பாரில் போட்டாலும் பட்டத்தில் போடு.

🌝 கோப்பு தப்பினால்

குப்பையும் பயிராகாது.

🌝 ஆடி ஐந்தில் விதைத்த விதையும் புரட்டாசி பதினைந்தில் நட்ட நடவும் பெரியோர்கள் வைத்த தனம்.

🌝 கலக்க விதைத்தால்

களஞ்சியம் நிறையும்.

அடர விதைத்தால் போர் உயரும்.

வாழ்க வையகம்!

வாழ்க வளமுடன்!

எல்லா உயிர்களும் இன்பமாக வாழ்ந்தால் மட்டுமே நாம் நலமோடு வாழ இயலும்.

#உழவே_தலை.

தனி மனித மாற்றமே நம் சமுதாயத்தின் மாற்றம்.

நீர் இன்றி அமையாது உலகு.

"என் மக்கள்"

கடல் மலை மேகம்தான் எங்கள் கூட்டம்.

கடைசி மரமும் வெட்டி உண்டு

கடைசி மரமும் விஷம் ஏறிக்

கடைசி மீனும் பிடி பட

அப்போதுதான் உறைக்கும்.

இனி பணத்தைச் சாப்பிட

முடியாது என்பது!!

ஆறும் குளமும் மாசு அடைந்தால்

சோறும் நீறும் எப்படி கிடைக்கும்!.

நீர் நிலைகளை காப்போம்.

இணைவோம்.

நம் மூத்த முன்னோர் சொல்மிக்க மந்திரமில்லை.

மேழிச் செல்வம் கோழை படாது...

#முன்னோர்கள் சொன்ன ஒவ்வொரு பழமொழி வார்த்தைகளிலும் அர்த்தங்கள் உள்ளது..


காசேதான் கடவுளடா


 

ஊன் உடம்பே ஆலயம்

ஊன் உடம்பே ஆலயம்..!

மூலாதார சக்தியானது உடலின் செயல்பாடுகளை செம்மையாக செயல் படுத்தவும், உடலில் உள்ள அனைத்து சக்திகளையும் ஒருங் கிணைத்து செயல்பட வைக்கவும் முக்கிய காரணமாகிறது.

பிராண வாயுவை மூலாதாரத்தில் நிறுத்தி மூலாதார சக்தியை வலுவடையச் செய்ய வேண்டும். அதற்கு சிறந்த வழி ஆழ்நிலை தியானமேயாகும்.

இந்த ஆழ்நிலை தியானத்தில் ஈடுபடும்போதுதான் பிராண வாயு மூலாதாரத்தையடைந்து மூலாதார சக்தியைத் தூண்டி உடலெங்கும் செயல்பட வைக்கிறது.

ஆழ்நிலை தியானம் செய்வது எப்படி?

ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட அமைதியான காற்றோட்டம் மிகுந்த இடம் வேண்டும். நன்கு சுத்தமான சிறிய அறை கூட போதுமானது. அல்லது கடற்கரை, பூங்கா, மலைவாசஸ் தலங்களில் உள்ள இடங்களில் தனித்து தியானம் செய்யலாம்.

பொதுவாக தியானம் காலை மற்றும் மாலை நேரங்களில் செய்வது நல்லது.

இப்படி ஆழ்ந்த தியான நிலையில் சுவாசம் மூலம் பிராணன் உட்சென்று மூலாதாரத்தை அடையும். அங்கே மூலாதார சக்தியானது வலுவடையும். இதனால் உடலானது பிரபஞ்ச சக்தியோடு இணைந்துகொள்ளும்.

பிரபஞ்ச சக்தியோடு இணைந்து கொண்ட உடல், ஆன்ம சக்திக்கு கட்டுப்படும். இப்படி கட்டுப்பட்ட உடலை ஆன்ம சக்தி பரிபூரணமாக ஆட்கொண்டு முதன்மையான சக்தியாக விளங்கும்.

ஆன்ம சக்தி ஆட்கொண்டதால் உடலும் மனமும் ஒரே நிலையில் ஒருங்கிணையும். இந்த நிலையே ஒருவரை சாந்த சொரூபியாக மாற்றும். இதைத்தான் ஆன்மீக சக்தி என்றும் அழைக்கின்றனர்.

இப்படிப்பட்ட ஆன்மீக சக்தியை அடைந்தவர்கள் எப்போதும் புன்முறுவலோடும் நிதானத்தோடும் காணப்படுவார்கள். இவர்கள் முக்காலத்தையும் உணரும் சக்தி பெறுவார்கள்.

இவர்கள் எண்ணிய எண்ணங்கள் எளிதில் ஈடேறும். மேலும் இவர்கள் விருப்பு, வெறுப்பின்றி அனைவரிடமும் அன்பை மட்டுமே செலுத்துவார்கள்.

இந்த ஆன்மீக சக்தியை பெற்றவர்கள் தான் தவயோகிகளாகவும், ஞானிகளாகவும், சித்தர்களாகவும் போற்றப் படுகிறார்கள்.

இப்படிப்பட்ட ஆன்ம சக்தி கிடைக்காதவர்கள் உடல் என்ற சக்திக்கு மட்டுமே கட்டுப்படுவார்கள்.

இவர்களிடம் ஆன்மீக சக்தி பலமிழந்தே காணப்படும். இதனால் இவர்கள் அடிக்கடி தங்களின் எண்ணங்களையும், செயல்களையும் மாற்றிக் கொண்டே இருப்பார்கள்.

எதிலும் நிதானமின்றி காணப்படுவார்கள். எத்தகைய முடிவையும் இவர்களால் எடுக்க முடியாது.

ஒருசில நேரங்களில் ஆன்மீக சக்தி இழந்தும் காணப்படுவதுண்டு. உலக சஞ்சாரங்களில் எளிதில் சிக்கிக் கொள்வார்கள்.

இவர்களுக்கு எப்போதும் ஞானம் கிடைக்காது. இவர்களின் மனம் ஒருநிலைப் படாது. இவர்களால் மூலாதார சக்தியையும் பிரபஞ்ச சக்தியையும் ஒருங்கிணைக்க முடியாது. ஆன்மிக சக்தியை பெற்றவர்கள்தான் சித்தர்கள்.

ஆன்மீக சக்தியை ஆட்கொண்டவர்களின் உடலும் உள்ளமும் ஒருங்கிணைந்து இருக்கும். மனம், புத்தி, காமம், குரோதம், அகங்காரம் இவற்றிலிருந்து முற்றிலும் விடுபட்டவர்களாக வலம் வருவார்கள்.

இப்படிப்பட்டவர்களை கண்டறிந்து அவர்கள் பெற்ற ஆன்ம சக்தியின் பலத்தையும், ஆசியையும் பெறுவதுதான் ஞானத்திற்கு சிறந்த வழி.

பிராணவாயுவை உள்வாங்கி மூலாதார சக்தியை தூண்ட தவம் செய்வதே சிறந்த வழியாகும். தவநிலையில்தான் சரசுவாசம் நடைபெறும்.

இந்நிலையில் தான் ஆன்மீக சக்தியைப் பெற முடியும்.
இதைத்தான் இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம்தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞான தங்கமே என்றும்,
ஊன் உடம்பே ஆலயம், என்று திருமூலரும் கூறுகிறார்கள்.

உள்ளத்தை கோவிலாக எண்ணி வழிபட்ட மகான்கள்தான் சித்தர்கள்.

அமைதியாக சில நிமிடங்கள் தனியாக அமர்ந்து பிராண வாயுவை உள் வாங்கி வெளியிட்டாலே இவர்கள் ஆன்மீக சக்தியை பெறலாம்.

சரசுவாசத்தின் மூலம் பிராணன் உட்சென்று மூலத்தில் முழு நிலையடையும்.

இந்நிலைதான் ஆன்மீக சக்தியை பெற்றுத்தரும்.

இந்நிலையை அடைந்தவர்களே சித்தர்கள்...

"நவகோடி சித்தர்கள் திருவடிகளே சரணம்"

"ஆன்ம ஞானத்தை அடைய சித்தர்கள் வழிகாட்டுதல் அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்குவோம்"