Showing posts with label god. Show all posts
Showing posts with label god. Show all posts

Tuesday, 22 September 2026

இறைவனுக்கும் மனிதனுக்கும்......

 




இறைவனுக்கும் மனிதனுக்கும் நடந்த சிறு உரையாடல்"*_

_நான் இழந்ததையெல்லாம் திருப்பித்தா எனக் மனிதன் கேட்டேன்...எதையெல்லாம் இழந்தாய் என இறைவன் கேட்டான்....?_

_*பலவும் இழந்திருக்கிறேன் கணக்கில்லை என்றான்...!பரவாயில்லை சொல் என்றான் இறைவன்..!*_

_கால மாற்றத்தால் இளமையை இழந்தேன்....!கோலம் மாறி அழகையும் இழந்தேன்...!_

_*வயது ஆக ஆக உடல்நலம் இழந்தேன்....!எதையெல்லாம் இழந்தேனோ, அதையெல்லாம் திருப்பித்தா என்றான் மனிதன்..!அழகாக சிறித்தான் இறைவன்...!*_

_கல்வி கற்றதனால் அறியாமையை இழந்தாய்....உழைப்பின் பலனாய் வறுமையை இழந்தாய்...._

_*உறவுகள் கிடைத்ததால் தனிமையை இழந்தாய்....நல்ல பண்புகளால் எதிரியை இழந்தாய்....*_

_இதுபோல் சொல்வதற்கு இன்னும் பல உண்டு. அனைத்தையும் திருப்பித்தரவா என்றான் இறைவன்....!_

_*திகைத்தேன் இழைப்பின் மறுபக்கம் எதுவென்று உணர்ந்தேன்....! "வாழ்கை பயணத்தில் இழப்பதும் நன்மைக்குத்தான்"*_

_இழந்ததை அறிந்தேன் இதயம் தெளிந்தேன்....!இறைவனும் புன்னகையோடு மறைந்தான்......._



Saturday, 29 August 2026

கடவுளுக்கு நன்றி சொல்ல பத்து அற்புத காரணங்கள்:


கடவுளுக்கு நன்றி
சொல்ல பத்து அற்புத காரணங்கள்:

1.டயர்கள் ஓட ஓட தேய்ந்து போகும், ஆனால் பாதங்கள் வாழ்நாள் முழுக்க ஓடினாலும் புதுசு போலவே இருக்கும்.

2.உடல் 75% தண்ணீர், ஆனால் லட்சக்கணக்கான ரோம துளைகள் இருந்தும் ஒரு சொட்டு கூட கசியாது.

3.எந்த பொருளும் தாங்கிப் பிடிக்காமல் நிற்காது, ஆனால் இந்த உடல் தன்னைத்தானே சமநிலையில் வைத்துக்கொள்கிறது.

4.எந்த பேட்டரியும் சார்ஜ் இல்லாமல் ஓடாது, ஆனால் இதயம் பிறப்பு முதல் இறப்பு வரை நிற்காமல் துடிக்கிறது.

5.எந்த பம்பும் எப்போதும் ஓடாது, ஆனால் ரத்தம் வாழ்நாள் முழுக்க நிற்காமல் உடலில் ஓடிக்கொண்டே இருக்கிறது.

6.உலகின் விலையுயர்ந்த கேமராவும் எல்லைக்குட்பட்டது, ஆனால் கண்கள் ஆயிரக்கணக்கான மெகாபிக்சல் தரத்தில் ஒவ்வொரு காட்சியையும் பதிவு செய்யும்.

7.எந்த ஆய்வகமும் எல்லா சுவையையும் சோதிக்க முடியாது, ஆனால் நாக்கு எந்த கருவியும் இல்லாமல் எத்தனையோ சுவைகளை அடையாளம் காணும்.

8.மிக நவீன சென்சாரும் எல்லைக்கு உட்பட்டது, ஆனால் தோல் மிகச்சிறிய உணர்வையும் உணர்ந்து கொள்ளும்.

9.எந்த கருவியும் எல்லா ஒலியையும் எழுப்ப முடியாது, ஆனால் குரல்வளையில் இருந்து ஆயிரக்கணக்கான அதிர்வெண் ஒலிகள் வரும்.

10.எந்த சாதனமும் எல்லா ஒலிகளையும் முழுமையாக புரிந்து கொள்ள முடியாது, ஆனால் காதுகள் ஒவ்வொரு ஒலியையும் கேட்டு அர்த்தம் புரிந்து கொள்ளும்.

கடவுள் நமக்கு கொடுத்த இந்த விலைமதிப்பற்ற பொருட்களுக்காக நன்றி சொல்வோம். அவரிடம் புகார் செய்ய நமக்கு எந்த உரிமையும் இல்லை.

தினமும் காலையில் நாம் கண் விழிப்பதே ஒரு அற்புதம்!
எனவே, இவ்வளவும் செய்து விட்டு எதுவுமே நடவாததை போல இருக்கும்,
சர்வ வல்லமை படைத்த இறைவனுக்கு நன்றி கூறுவோம். அது மட்டுமே நம்மால் முடியும்!!

Saturday, 18 July 2026

ருசி

 ருசி' என்றால் என்ன?

வாரியார் சொற்பொழிவு நடந்து கொண்டிருந்தது. பெரிய கூட்டம். முன் வரிசையில் இருந்த நாத்திகர் ஒருவர் எழுந்து "இந்து மதத்தில் மட்டும் ஏன் இத்தனை கடவுள்கள்?" என்ற வினாவை எழுப்பினார். சம்பாஷணைகள் ஆரம்பமானது.

"உங்களது பிரதான உணவு என்ன? அதாவது அரிசியா, கோதுமையா?"

"அரிசி!"

"அரிசியில் என்னென்ன பதார்த்தங்கள் செய்யலாம்?"

"சாதம், பொங்கல், இட்லி, தோசை, ஆப்பம், பணியாரம், பிரியாணி, இன்னும் என்னவெல்லாமோ செய்யலாம். ஏன் இதை கேட்கிறீர்கள்?"

"இல்லை அரிசியை ஊறவைத்து தின்றுவிட்டு போகலாமே, அதையேன் மெனக்கெட்டு நேரத்தையும், பணத்தையும் செலவுசெய்து இத்தனை பதார்த்தங்கள் செய்ய வேண்டும்? அதற்காக கேட்டேன்"

"எப்படி சாமி வெறும் அரிசியை ஊறவைத்து தின்பது?. நாவிற்கென்று ருசி தேவைப்படுகிறதே"

"சாதாரண நாவிற்கே இத்தனை வகை ருசி தேவைப்படுகிறது, ஆனால் மூலப்பொருள் அரிசி ஒன்றுதான். அது போலத்தான் இறைவன் ஒருவனே இந்துக்கள் ஆன்மிக ருசிக்காக பல உருவங்களில் துதித்து வணங்கி மகிழ்கிறார்கள்."

கேள்வி கேட்ட நாத்திகர் மேடையேறி வாரியாரை வணங்கி ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார். அரங்கம் கரகோஷத்தால் அதிர்ந்தது.
ஒரு பிரச்சார கூட்டத்தில் கேட்டது.