Wednesday, 7 October 2026

வாழ்க்கை தத்துவம் -சாப்பாட்டில்!

 

"சோறு பொங்கும் போது தீயை குறைக்கணும், கோபம் பொங்கும் போது வாயை குறைக்கணும்".
"
சுடும்னு தெரிஞ்சும் 'டீ'யை நிதானமா குடிக்கிறோம்ல", அது தான் வாழ்க்கை.
வாழைக்காய் மாதிரி,
பழுக்க காத்திருந்தா பழம், இல்லன்னா பஜ்ஜி தான்.
வாழ்க்கை
ஐஸ்கிரீம் மாதிரி. வேஸ்ட் பண்ணாலும் கரையும், டேஸ்ட் பண்ணாலும் கரையும். அதனால் டேஸ்ட் பண்ணு.
அரிசி
வெந்தாதான் சோறு, வாழ்க்கைல நொந்தாதான் பக்குவம் .
இட்லியின் சுவை இட்லில இல்ல, கூடவே இருக்கற
சட்னில தான் இருக்கு. நம்ம சந்தோஷமும், கூட வாழறவங்களை பொறுத்து தான்.
மரியாதை இல்லாத இடத்து
கறி சோற்றை விட, அன்புள்ள இடத்து கஞ்சி மேல்.
பக்கத்து வீட்டு
பிரியாணி வாசம் பசியை தூண்டும், ஆனா பசியை ஆத்த போறது என்னவோ நம்ம வீட்டு பழைய கஞ்சி தான்!!!.
அடுத்தவன்
சட்டில என்ன வேகுதுன்னு பார்க்காத, உன் சட்டில என்ன கருகுதுன்னு பாரு.
நம்ம வாழ்க்கை
கலரு கலரா மிட்டாய் திங்குற பருவத்துல தொடங்கி, கலரு கலரா மாத்திரை திங்குற பருவத்துல முடியுது.
தூங்கி எந்திரிச்சா
காஃபி, எந்திரிக்கவே இல்லன்னா பால். இது தான் வாழ்க்கை.
இலையை வெட்டி ஆட்டுக்கு போடுவாங்க, ஆட்டை வெட்டி இலைல போடுவாங்க. அவ்வளவு தான் வாழ்க்கை.
பிடிச்சதை செய், பிடிச்சதை சாப்பிடு. நீ செத்ததுக்கு அப்புறம் யாரும் உனக்கு சிலை வைக்க போறதில்ல.

விட்டு போன இரண்டு
1.
உப்புமாவும் ஊழலும் ஒண்ணு!
எல்லாரும் அதுக்கு எதிராக பேசுவாங்க! யாரும் அதை
ஒழிக்கவே முடியாது!.
2.
குழில ஊத்தினாலும் இட்லி மாதிரி 'கும்'ன்னு வரணும்.

No comments:

Post a Comment