Sunday, 27 July 2025

படிச்சு அறிவா இருக்கிற பொண்ணு

தன் புது மனைவியை பார்த்து அன்போடு சிரித்தான் நம்ம குமாரு!!.

அவளிடம் மெல்லிய குரலில் சொல்ல தொடங்கினான்...

"எத்தனையோ இடங்களில் இருந்து எனக்கு பொண்ணு தர்றேன்னு சொல்லி வந்தாங்க. ஆனா அவங்களையெல்லாம் விட்டுட்டு உன்னை ஏன் செலக்ட் பண்ணி கல்யாணம் பண்ணினேன் தெரியுமா?"

மெதுவாய் இளம் மனைவியிடம்

கேட்டான் குமாரு. பதில் ஏதும் சொல்லாமல் ஆள்காட்டி விரலால் கட்டிலில் போடப்பட்டிருந்த மெத்தை நுனியை நெருடிக் கொண்டிருந்தாள் லலிதா.

"எனக்கு பணம் காசு முக்கியமில்லை. என்னை விட அதிகமா படிச்சு அறிவா இருக்கிற பொண்ணு தான் வேணும்னு தேடினேன். அப்போதான் என்னுடைய சொந்தக்காரங்க உன்னை பத்தி சொன்னாங்க. உன்னுடைய படிப்பை பத்தியும் அறிவைப் பத்தியும் வியந்து சொன்னாங்க. பொது அறிவு விஷயங்கள்ல நீ புலின்னு கேள்விப்பட்டதும் எனக்கு உன்னை பிடிச்சு போச்சு. அதனால தான் உன்னை கல்யாணம் பண்ணினேன்.

நீ அறிவாளியா இருந்தாதான் நமக்கு பிறக்கப் போற குழந்தைகளும் அறிவாளியா இருக்கும். சமுதாயத்தில் நிறைய சாதனைகள் படைக்கும். நான் சொல்றது சரிதான?"

லலிதாவின் கரங்களை தன்னுடைய கரங்களோடு சேர்த்துக் கொண்டு கிசுகிசுப்பாய் கேட்டான் குமாரு.

'நீங்கள் சொல்வது எல்லாம் சரிதான்' என்பது போல தலையை ஆட்டினாள்.

தொடர்ந்து பல்வேறு விஷயங்களை பேசினான். எதற்கும் பதில் சொல்லாமல் புன்னகை ஒன்றையே பரிசாக தந்து கொண்டிருந்தாள்.

அவளை எப்படி பேச வைப்பது என்று அவனுக்கு புரியவில்லை. அதனால் அவளிடம் கேட்டான்,

"நான் வேலைக்கு சேர்ந்தப்போ இன்டர்வியூல என்கிட்டே ஒரு கேள்வி கேட்டாங்க. அந்த கேள்வியை என்னால மறக்க முடியல. அதே கேள்வியை உன்கிட்டே கேட்கிறேன். நீ பதில் சொல்றியா? ரொம்ப சிம்பிளான கேள்வி தான்"

'சொல்கிறேன்' என்பது போல தலையை ஆட்டினாள்.

அவளிடம் கேட்டான், "நியூட்டன்ஸ் லா பத்தி சொல்லு..."

அதுவரையிலும் அமைதியாக இருந்த லலிதா அவன் கேள்வி கேட்டு முடிந்ததும் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தாள்.

ஏன் சிரிக்கிறாள் என்பது புரியாமல் தவித்தவன் அவளிடம் குழப்பமாய் கேட்டான்,

"எதுக்கு டார்லிங் சிரிக்கிற?"

கண்களில் நீர் கொப்பளிக்க சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்துக் கொண்டிருந்த லலிதா பதில் சொன்னாள்,

"பின்னே... இப்படி ஒரு கேனத்தனமான கேள்வியை கேட்டால் சிரிக்காம என்ன பண்றதாம்? யார்கிட்ட என்ன கேள்வி கேட்கணும்ன்ற ஜெனரல் நாலேஜ் உங்களுக்கு கொஞ்சம் கூட இல்லையே. சயின்ஸ்ல மாஸ்டர் டிகிரி வாங்கி இருக்கிற என்கிட்டே போயி சட்டத்தில் இருந்து கேள்வி கேட்டால் எனக்கு என்ன தெரியும்.. லா பத்தி பேசுறதுக்கு நான் என்ன லாயரா?"

சாச்சுபுட்டா மச்சான் !!

No comments:

Post a Comment