Sunday, 27 July 2025

பெண்களும் Penகளும் ஒன்று தான்...!

எழுதியவர் யாரென்ற தெரியவில்லை. பாராட்டுகள்!

பெண்களும்

Penகளும்

ஒன்று தான்...!!!

இருவரும்

மை

வைத்துக்கொள்ளும்

மேனியர்கள்

ஆண்கள்

தம்

இதயத்தின் அருகில்

வைத்திருக்க விரும்பும்

ராணியர்கள்

பெண்ணுக்கு

குழல் (கூந்தல்) அழகு

பேனாக்கும்

குழல் (குழாய்) அழகு

தம் முன்னழகை

மூடி வைத்திருப்பது

பெண்களுக்கே உரித்தான

குணம் அல்லவா ?

இப்படித் தானே

பேனாக்களும்

மூடி

வைத்திருக்கின்றன !

எழுதியவனின்

கருச் சுமந்து

பிரசுவிப்பது

அவர்களுக்கே கிடைத்த

வரம் அல்லவா ?

அப்படித் தானே

அவைகளும்

எழுதுபவரின்

கருவைச் சுமந்து

பிரசுவிக்கின்றன !

பெண் என்றாலும்

Pen என்றாலும்

கோடு போட்டு

வட்டமிட்டு

வாழும் வாழ்க்கை ;

இல்லையா ?!

வாய்மூடி

வாய் மூடி

இருக்க வேண்டும் என

விரும்புவோர்

பலர் ;

உண்மை தானே ?!

புதிதாய் உரித்தாக்கி

பல நாட்களாகியும்

எழுதவில்லையேல்

பேனாவும்

மலடி

பிடிக்குள் நிற்காது

வழுக்கி

வழுக்கிப் போனால்

பேனாவும்

அடங்காப் பிடாரி

எப்போதும்

கசிந்து கசிந்து

கிறுக்கும் பேனா ;

வாழாவெட்டி

வளைந்து வளைந்து

வரையும் பேனா ;

காரியக்காரி

பச்சை பச்சையாய்

மொழியும் பேனா ;

வாயாடி

ஊதி ஊதி

படைக்கும் பேனா ;

விசனக்காரி

சீராய்

எழுத மறுக்கும் பேனா ;

முதிர்கன்னி

மை கக்கிய பேனா ;

தீட்டுக்காரி !

இந்த மாதிரி பெண்களுக்கே இருக்கும் பட்ட பெயர்கள் pen க்கும் பொருந்தும்.

"ஆவதும் பெண்ணால்

அழிவதும் பெண்ணால்"

என்றோர்

பழமொழி

உண்டல்லவா ?

கையொப்பம் இடுகையில்

இது

பேனாக்கும் பொருந்தும்

"ஆணின் வெற்றிக்குப்

பின்னால்

பெண் இருக்கின்றாள்"

என்றோர்

பொதுமொழி

உண்டல்லவா ?

காகிதங்களைக் கேளுங்கள்

Pen இருப்பதாய்

செல்லும் !

பெண்களும்

Penகளும்

ஒன்று தான் ;

இருவருமே

புரட்சி செய்யப் பிறந்தவர்கள்

வானம் தாண்டி

விண்வெளி சென்று

வரலாறு படைத்த

ஸ்பேஸ் ஃபிஷர் பேனா ;

கல்பனா சாவ்லா

நீருக்கு அடியிலும்

சாதிக்க முடியும் என

நிரூபித்துக் காட்டிய

பால் பாயின்ட் பேனா ;

அம்பெர் ஃபிலாரி

ஓவிய உலகில்

ஒப்பற்ற பணி செய்யும்

ஸ்கெட்ச் பேனா ;

பிரிடா காலே

கல்வித் துறையில்

தனித்துவம் உணர்த்தும்

ஹைலைட்டர் பேனா ;

மலாலா யூசப்சையி

படைப்புக்கள்

அனைத்திற்கும்

அடிக்கோடிட பயன்படும்

ஸ்டிக் பேனா ;

ஔவைப்பிராட்டி

பார்ப்பவர்கள்

அனைவரையும்

கவர்ந்திழுத்துவிடும்

ஜெல் பேனா ;

கிளியோபட்ரா

வெள்ளைத் தாள்களின்

முகத்தில்

கருப்பாய் எழுத்துகையில்

பேனா ;

வெள்ளையரை அடக்கிய

வேலுநாச்சியார்

காகிதம் முழுக்க

தன் தலையால் நடக்கையில்

பேனா ;

கயிலாய மலை ஏறிய

காரைக்கால் அம்மையார்

நீலம் நீலமாய்

எழுதுகையில்

பேனா ;

தலித்களின் உரிமைகளுக்காய்

குரல் கொடுக்கும்

குமுத் பாவ்டே

குண்டு குண்டாய்

எழுதுகையில்

பேனா ;

ஈழ விடுதலைக்காய்

களமாடிய

பெண் புலிகள் !

பெண்களும்

Penகளும்

ஒன்று தான்....

அருகில் இருக்கும் வரை

அருமை

தெரிவதே இல்லை

தொலைத்த பின்னர் தானே

தேடுகின்றோம்

இருவரையும் !


No comments:

Post a Comment