இந்த ஏழு இடத்தில் வாயை திறக்காதீர்கள்...
1, நீங்கள் கோபமாக இருக்கும்போது வாயை திறக்காதீர்கள் ஒரு மனிதன் கோபத்தில் இருக்கும் போது மிருகமாக நடந்து கொள்வான் .அந்த நேரத்தில் நண்பன் யார் எதிரி யார் என்று அவனுக்கு தெரியாது... அந்த நேரத்தில் அவன் எதை வேண்டுமானாலும் செய்வான்..
2, நீங்கள் அழும் போது அமைதியாக இருங்கள்.. அழுது கொண்டே இருக்கும் போது உங்கள் பலவீனத்தை சொல்லி விடுவீர்கள்.. உங்களுடைய பலவீனம் தெரிந்து விட்டால் உங்களை யார் வேண்டுமானாலும் ஈசியாக கண்ட்ரோல் பண்ண முடியும்..
3, எல்லோரும் சத்தம் போட்டு கத்தும் போது நீங்கள் வாயை திறக்காதீர்கள் வாயை மூடிக்கொண்டு இருந்தால் மீன் கூட தூண்டிலிருந்து தப்பித்துக்கொள்ளும்..
4, நீங்கள் எந்த இடத்தில் ஏமாற்றப்பட்டீர்களோ அந்த இடத்தில் அமைதியாக இருங்கள்.. ஏன் எதற்கு என்று விளக்கம் கேட்டால் அதற்கு பல காரணம் சொல்வார்கள் அதை உங்களால் தாங்கிக் கொள்ள முடியாது...
5, பொது இடத்தில் இரண்டு பேர் சண்டை போட்டுக் கொண்டிருந்தால் அந்த இடத்தில் வாய் திறக்காதீர்கள் அப்படி வாயைத் திறந்தீர்கள் என்றால் சண்டையை உங்கள் பக்கம் திருப்பி விடுவார்கள் நீங்க மன உளைச்சலுக்கு ஆளாக்கப்படுவீர்கள்...
6, #கணவன் மனைவிக்குள் சண்டை வரும் போது யாராவது ஒருவர் வாயை மூடிக்கொள்ளுங்கள் சண்டை தானாக நின்று விடும்.....
7, சோசியல் மீடியாவில் உங்களுடைய சொந்த கதை சோக கதை கருத்து சொல்கிறேன் என்று சொல்லாதீர்கள்.
உங்களுடைய கருத்துக்கு எதிர் கருத்து உங்க மனசு புண்படும்படியாக இருக்கும்... ✍️
No comments:
Post a Comment