இந்தியாவின் எந்த இடத்தில் இருக்கிறீர்கள் என்று எப்படி அறிந்து கொள்வது !
காட்சி - 1
ரோட்டில் இருவர் சண்டை போட்டு கொண்டு இருக்கிறார்கள்! மூன்றாவது நபர் அதை பார்த்து கொண்டு கடந்து போகிறான் !
அப்படியென்றால் நீங்கள் மும்பையில் இருக்கிறீர்கள்!
காட்சி - 2
ரோட்டில் இருவர் சண்டை போட்டு கொண்டு இருக்கிறார்கள்! மூன்றாவது நபர் வந்து அவர்களை சமாதானம் செய்ய முற்படுகிறான். சண்டை போட்டு கொண்டு இருந்த இருவரும் சேர்ந்து கொண்டு மூன்றாவது நபரை அடிக்கிறார்கள்!
அப்படியென்றால் நீங்கள் புது டில்லியில் இருக்கீங்க!
காட்சி - 3
இரண்டு பேர் சண்டை போட்டு கொண்டு இருக்க! மூன்றாவது நபர் வந்து! இந்தாப்பா என் வீட்டு முன்னாடி சண்டை போடாதீர்கள்! அந்த பக்கம் போய் சண்டை போடுங்கள்! அப்படின்னா நீங்க இருப்பது பெங்களூர்!
காட்சி - 4
இரண்டு பேர் சண்டை பிடிக்க மூன்றாம் நபர் ஒரு case நிறைய 🍺 பீர் கொண்டு வந்து மூன்று பேரும் குடித்து விட்டு நண்பர்களாக வீட்டுக்கு போனால்! நீங்கள் கோவா வில் இருக்கீங்க என்று பொருள் !
காட்சி — 5
இரண்டு பேர் சண்டை போட, இருவரும் தங்கள் மொபைலை எடுத்து துணைக்கு தங்கள் நண்பர்களை கூப்பிட இப்பொழுது ஐம்பது பேர் சண்டை போட்டு கொண்டு இருக்கிறார்கள்! அப்படி என்றால் நீங்க பஞ்சாபில் இருக்கீங்க!
காட்சி - 6
இரண்டு பேர் சண்டை போட, மூன்றாவது ஆள் துப்பாக்கியுடன் வந்து அந்த இரண்டு பேரையும் சுட்டு விடுகிறான் என்றால் நீங்கள் இப்பொழுது பீஹாரில் இருக்கீங்க என்று பொருள்!
காட்சி - 7
இரண்டு பேர் சண்டை போட்டு கொண்டு இருக்க! மூன்றாவது நபர் வந்து முதல் நபருடன் சேர்ந்து சண்டைக்கான காரணமே தெரியாமல் இரண்டாவது நபரை தாக்குகிறார் என்றால் ஆமாம் நம் தமிழ் நாட்டில் இருக்கிறீர்கள் என்று பொருள்!
காட்சி - 8
இரண்டு பேர் சண்டை போட்டு கொண்டு இருக்க மூன்றாவது ஆள் சண்டையை பார்க்கிறான். கூட்டம் சேர்கிறது! சத்தம் போடாமல் அப்படியே அங்கே ஒரு டீ கடை போட்டு வியாபாரம் செய்கிறான்!
அப்படி என்றால் நீங்கள் ஆமாம் கேரளாவில் இருக்கீங்க!
என்ன நான் சொன்னது எல்லாம் சரிதானே!

No comments:
Post a Comment