Sunday, 24 August 2025

நீ டாக்டரா நான் டாக்டரா...


உங்கள நம்பி வந்திருக்கேன் பாத்து மருந்து மாத்திரைங்கள எழுதிக் கொடுங்க டாக்டர்....

உனக்கு மருந்து மாத்திரை எழுதணும்ன்னாலே எனக்கு கை காலெல்லாம் உதறுதுப்பா...

நரம்புத் தளர்ச்சியா இருக்கும் தினமும் நிரோபியான் போடுங்க டாக்டர்...

இங்க நீ டாக்டரா நான் டாக்டரா...?

நீங்கதான் டாக்டர்...!

அப்ப செத்த சும்மா இரு... உங்கள மாதிரி பேசண்டுகள பாத்து பாத்துதான் எனக்கு நெஞ்சு வலியே வந்துடுச்சி...

நெஞ்சு வலின்னு சும்மா இருந்துடாதீங்க டாக்டர் பையில ரெடியா எக்கோ ஸ்பிரின் மாத்திரையை வச்சுக்குங்க வலி வந்தா டக்குன்னு எடுத்துப் போட்டுக்குங்க...

இப்ப உனக்கு மருந்து மாத்திரை எழுதட்டுமா வேண்டாமா...?

எழுதுங்க... எழுதுங்க...

பாருப்பா... நான் எழுதுறதெல்லாம் நல்லா பவரான மாத்திரைங்க...

அப்படின்னா ஷாக்கடிக்குமா டாக்டர்...?

ப்ச்...

சரிங்க டாக்டர் மொறைக்காதீங்க... மாத்திரையை எடுக்கும் போது ஷாக் அடிக்காம இருக்க செருப்பு போட்டுக்கிறேன்...

உஸ்... முடியலப்பா

என்ன டாக்டர் உங்களுக்கு இப்படி வேர்க்குது பிரசர் போல தினமும் அட்ரோவிட்ஸ்ஷன் எடுத்துக்குங்க டாக்டர்...

யப்பா என்ன கொஞ்சம் எழுத விடுப்பா...

சரி எழுதுங்க டாக்டர்...

அப்புறம் இந்த சிரப்ப கொஞ்சமாதான் தான் எடுத்துக்கணும்...

ஏன் டாக்டர்...?

அதுல ஆல்கஹால் கலந்திருக்கு நிறைய சாப்பிட்டா தள்ளாட்டம் கொடுக்கும்...

ஆல்கஹால்ன்னா சரக்கு தானே டாக்டர்...

ஆமா...

நா வேணும்னா அது கூட சைடு டிஷ் எடுத்துக்கிறேன் டாக்டர் தள்ளாட்டம் வராது...

தொப்...

ஐயோ டாக்டர்... டாக்டர்... என்ன சரிஞ்சிட்டீங்க... நர்ஸ் இங்க வாம்மா உங்க டாக்டர் மயங்கிட்டாரு சுகர் இருக்கும் போல மெட்பின் 10 mg அவரு புட்டத்துல ஏத்திவிடு கூடவே 2 mg வே*** தூக்க மருந்தையும் ஏத்தி விடு டாக்டர் ரெஸ்ட் எடுக்கட்டும் நான் போயிட்டு அப்புறம் வர்றேன்... ப்ச்.. இந்தக் கடவுள் ஏன் டாக்டர் மாதிரியான நல்லவங்கள சோதிக்க்கிறார்ன்னு தெரியல...!

No comments:

Post a Comment