Friday, 28 November 2025

என்ன டாக்டர் இப்படி என்ன சுற்றலில் விட்டு விட்டீங்க

 


நோயாளி டாக்டர் கொடுத்த மருந்து சீட்டை தூக்கிகிட்டு மருந்தைத் தேடி கடை கடையா ஏறி இறங்கி இருக்கார்.

ஒரு கடைல, நாளைக்கு வாங்க தாரேன்னு சொன்னாங்க!

இரண்டாவது கடையில் - இந்த மருந்துக் கம்பனிய இப்போ மூடிட்டாங்க, வேறு கம்பனி தயாரிப்பு இதே மாதிரி மருந்தை தரட்டுமான்னு கேட்டாங்க

மூணாவதா போன மருந்துக் கடைக்காரர் - இந்த மருந்துக்கு மிகப்பெரிய டிமாண்ட் இருக்கு அதனால கிடைக்காது, 10,000 ரூபாயாகும் பிளாக்ல வேணும்னா வாங்கித் தரவா என்று சொல்ல.

நாலாவது கடைக்காரர் - சொன்னதை கேட்டு அவருக்கு மயக்கமே வந்துருச்சி, சார்! இந்த மருந்து புற்றுநோய்க்கானது, உங்க வீட்டுல யாருக்கு புற்றுநோய் இருக்குன்னு கேட்டாரு பாருங்க ?

சரி எதற்கு குழப்பம் என்று மருந்து எழுதி கொடுத்த டாக்டர் கிட்டயே வந்து பிரச்சினையை சொன்னார்!

நோயாளி : "டாக்டர், எனது மருந்துச் சீட்டில் இடது ஓரத்தில் நீங்கள் எழுதிய மருந்து மட்டும் மதுரையில எந்த மருந்துக் கடையிலும் கிடைக்கலையே.."

டாக்டர் : "அய்யோ அது மருந்து இல்லைங்க, என் பேனா ஒழுங்கா எழுதுதா இல்லையான்னு கிறுக்கிப் பார்த்தேனுங்க.

No comments:

Post a Comment