அந்த பென்குவினுக்கு என்ன ஆச்சு?
கடந்த சில தினங்களாக சோஷியல் மீடியாவில் பென்குவின் ஒன்று தனது கூட்டத்தை விட்டு விலகிச் சென்று ஒரு மலையை நோக்கி கிட்ட தட்ட 70 km தூரம் தன் மரணத்தை நோக்கி நடந்து செல்வதை பார்த்து இருப்போம். அது அப்படி நடந்து கொள்ள நிஜ காரணம் என்ன?
2007 இல் ஒரு டாக்குமெண்டரி யில் (Encounters at the End of the World, ) எடுக்க பட்டு U.S. இல் 2008 இல் வெளியிட பட்ட அந்த காணொளி இப்பொது பிரபலம் ஆக காரணம் உண்டு.
ஒரு விரக்தியான வாழ்க்கையில் இருந்து தன்னை எப்பொழுதாவது விலக்கிக் கொள்ள நினைக்கும் மனிதனின் மனம் தன்னை இந்த பென்குவினின் நடத்தை யுடன் ஒப்பிட்டு கொள்வதே இதற்கு காரணம் (கூடவே பென்குவினின் நடை வேறு மனிதனின் நடையுடன் ஒத்து இருப்பதால் ) இந்த காட்சி மக்களுக்கு அதீத தாக்கத்தை உண்டு பண்ணி பலர் பக்கம் பக்கமாக ரைட் அப் மற்றும் சிலர் சோக கவிதை கூட எழுதி விட்டார்கள்.
சரி இயற்கை நிகழ்வுகளில் தன் உணர்வுகளை ஏற்றி பார்ப்பது தவறு ஒன்றுமில்லை என்றாலும் அத்துடன் நிறுத்திக் கொள்ளாமல் உண்மை காரணத்தை தெரிந்து கொள்வது இன்னும் சிறப்பானது...சரியானது.
அது என்னன்னு பார்ப்போம் வாருங்கள்.
நிபுணர்கள் கொடுத்த விளக்கம் (அந்த காணொளியில் வரும் விஞ்ஞானி Dr. David Ainley உட்பட ) சொன்ன காரணம் : "Disorientation."
பறவைகள் எங்கே ஊர் சுற்றினாலும் தங்கள் இருப்பிடத்திற்கு திரும்புவதற்கு அதற்கு இயற்கையாக அதன் உடலில் வடிவமைக்க பட்ட gps சிஸ்டம் ஒன்று உண்டு. அது கொடுக்கும் உள்ளுணர்வின் உந்துதலில் மட்டுமே பறவைகள் செயல்படுகின்றன. (இது சூரிய உணர்வு, பூமியின் காந்த உணர்வு மற்றும் பறவை தன் கண்களால் காணும் காட்சி இவை மூன்றும் கலந்து செயல்படும் )
எப்பொழுதாவது நோய்வாய்ப்பட்டோ, அடி பட்டோ...நரம்பியல் பிரச்னை காரணமாகவோ அந்த சிஸ்டம் செயலிழந்து போனால். உள்ளே இருந்து வரும் குழப்பமான உத்தரவு காரணமாக பறவைகள் இப்படி திசை மாறி விடுகின்றன
.
ஒரு பெரிய கண்ணாடி கட்டிடத்தில் பிரதிபளிக்கும் வானத்தை பார்த்து ஏமாந்து பறவைகள் தவறாக பறந்து சென்று மோதி கீழே விழுவது போல தான் இதுவும்.
அதன் உடலுக்குள் வடிவமைக்கப்பட்டிருக்கும் ஜிபிஎஸ் சிஸ்டம் தவறுதலாக அதற்கு வழி காட்ட அது திசை மாறி சென்று கொண்டிருக்கிறது அவ்வளவுதான்.
அது மரணத்தை தேடி செல்வது ஒரு சோகமான் காட்சி தான் என்றாலும் அது முழுக்க முழுக்க அதன் உடலியல் பிரச்சனை தான். மற்ற படி வாழ்வில் விரக்தி.. தனிமை தேடி போறது.., துறவு மனப்பான்மை..,போர் அடிப்பது.. எல்லாம் விலங்கு /பறவை உலகத்தில் இல்லை.



No comments:
Post a Comment