Sunday, 12 April 2026

ஊழ்வினை



ஊழ்வினை என்பதை விதி அல்லது கர்மா என்கிறோம்.நம்மால் தடுக்கமுடியாத சில அசம்பாவிதங்கள், கெடுதல்கள் நம் வாழ்வில் திடீரென்று நமக்கு நடப்பதை ஊழ்வினை என்கிறோம்.முன்னர் நாம் செய்த சில பாவங்களே இதற்கு காரணம் என்று கருதப்படுவதால் ்ஊழ்' என்ற அடைமொழி உருவாயிற்று. கோவலன் மதுரையில் கொல்லப்பட்டதும், கண்ணகி கைம்பெண் ஆனதும் ஊழ்வினை.இதையே இளங்கோ அடிகள்" ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்" என்று குறிப்பிடுகிறார்.

திருவள்ளுவர் திருக்குறளில் "ஊழ்வினை" என்று ஒரு அதிகாரமே எழுதியுள்ளார்.

"ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினும் தான் முந்துறும்".

இதன் பொருள் என்னவென்றால், ஊழ்வினையிலிருந்து தப்ப நாம் மாற்று வழியில் சென்றாலும் அது எப்படியாவது நம் முன்னேவந்து நிற்கும் என்பதாகும்.

இந்துமதத்தில் மூன்றுவகை ஊழ்வினைகள் கூறப்பட்டுள்ளன:-

அ) நுகர்வினை எனப்படும் பிராரப்த கர்மா. முற்பிறவிகளில் நாம் செய்த, செய்ய நினைத்த பாவங்களின் மூட்டை இது. இப்பாவங்களில் இருந்து நாம் தப்பமுடியாது. 18ஆம் நூற்றாண்டில் நாராயண தீர்த்தர் என்ற கிருஷ்ண பக்தர் ஒருவர் இருந்தார். அவர் ஏழு ஆண்டுகள் கடுமையான வயிற்றுவலியால் அவதிப்பட்டார். ஒருசமயம் அவர் கிருஷ்ணரிடம் முறையிட்டார். தனக்கு ஏன் இப்படி நடக்கிறது என்று கேட்டார். அதற்கு கிருஷ்ணர்," நீ முற்பிறவியில் சிறிது காலம் வணிகம் செய்தாய். அதிக இலாபம் பெறுவதற்காக, தானியங்களில் கல்லையும், மண்ணையும் கலந்து விற்றாய். அதன் பலனையே இப்போது அனுபவிக்கிறாய் ! " என்று கூறினார்.

ஆ) தொல்வினை எனப்படும் சஞ்சித கர்மா. முற்பிறப்பில செய்த சில பாவங்கள் இனி வரப்போகும் பிறவியிலும் நமக்கு விளைவுகளை ஏற்படுத்தும். இப்பிறவியில் இறைவழிபாடு செய்வதன் மூலம் இதை மாற்றலாம். " சஞ்சித பாப வினாசக லிங்கம்" என்று லிங்காஷ்டகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இ) வரும் வினை எனப்படும் ஆகாமய கர்மா. இது முழுவதும் மனிதன் கையிலேயே உள்ளது. நாம் இப்பிறவியில் நல்ல செயல்களைச் செய்தால், இப்பிறவியிலேயே நமக்கு நன்மைகள் கிட்டும். நன்கு படித்தால், நல்ல வேலை கிடைக்கும், நல்ல சம்பளம் கிடைக்கும் என்பது ஓர் உதாரணமாகும்.

விதியை நொந்து நாம் சும்மா இருக்கக்கூடாது. நம் கடமைகளை நாம் செய்துகொண்டே இருக்கவேண்டும். இதை மனதில் வைத்துத்தான் ஶ்ரீகிருஷ்ணர் பகவத்கீதையில் " கடமையைச் செய் ! பலனை எதிர்பார்க்காதே ! " என்று கூறினார்.

மேலைநாடுகளிலும் ஊழ்வினை அல்லது விதி என்கிற சித்தாந்தம் உண்டு

No comments:

Post a Comment