ஊழ் என்றால் விதி, தலை விதி. நாம் முற்பிறவியில் செய்த கருமத்தின் பலனை (நல்லதோ கெடுதலோ) இந்தப் பிறவியில் தீர்க்கிறோம் என்கிறார்கள்.
குறள் 380
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினும் தான் முந்துறும்.
மு.வரதராசன் விளக்கம்:
ஊழை விட மிக்க வலிமையுள்ளவை வேறு எவை உள்ளன, ஊழை விலக்கும் பொருட்டு மற்றோரு வழியை ஆராய்ந்தாலும் அங்கும் தானே முன் வந்து நிற்கும்.
சாலமன் பாப்பையா விளக்கம்:
விதியை வெல்ல வேறொரு வழியை எண்ணி நாம் செயற்பட்டாலும், அந்த வழியிலேயோ வேறு ஒரு வழியிலேயோ அது நம்முன் வந்து நிற்கும்; ஆகவே விதியை விட வேறு எவை வலிமையானவை?.
No comments:
Post a Comment