![]() |
| SWAMI VINAYAGANANDHA MAHARAJ |
எங்கள் ஞானியார் இல்லத்திற்கு வந்திருந்து எங்களுக்கு பெருமை சேர்த்த சுவாமி விநாயகானந்த மஹராஜ் அவர்களை பற்றி சொல்ல வேண்டும். எங்கள் இனிய நண்பர் திரு ரவிச்சந்தர் அவர்கள் சுவாமிகளை அழைத்து வந்திருந்தார்கள்.
சுவாமிகள் பற்றி சொல்ல நிறைய இருக்கின்றது. மெத்த படித்த ஸ்காலர். கல்கத்தா பேலூர் ராமகிருஷ்ணா மடத்தில் துறவறம் ஏற்று அங்கு சேவை செய்துவிட்டு பிறகு சாத்புரா மலைப்பகுதியில் நர்மதை நதி ஓரம் அடர்ந்த காடுகளின் நடுவில் தனிமை தவம் மேற்கொண்டவர். காட்டிலாகா அதிகாரிகள் கொடுக்கும் தானியம், பழங்கள், காய்கள் உண்டே மௌன தவம் செய்தவர். பிறகு ஹிமாலய மலைகள் பகுதியிலும் மற்றும் நாடு பூராவும் சுற்றித்திரிந்து அருளாசி வழங்கியவர். 2001ம் ஆண்டு கர்நாடகா உடுப்பி பகுதிக்கு வந்திருந்தபோது பையலூர் என்ற இடத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ணா ஆஷ்ரமத்தினை நிறுவி மகத்தான தொண்டாற்றி வருகின்றார்கள்.
எங்கள் அறிவுத்திருக்கோயிலிலும், இல்லத்திலும் மாலா அவரிடம் கேட்டு தெரிந்துகொண்ட ஆன்மீக விஷயங்கள் பற்பல. மாலாவை அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது. 'பெண்களில் இப்படி சமூகத்திற்கு தொண்டு செய்ய ஒரு சிலரே உள்ளனர். உன் ஆன்மீகத் தொண்டு சிறக்கட்டுமென' வாழ்த்தினார்.எனக்கும் அவரை மிகவும் பிடித்திருந்தது. அவர் சொன்ன இறைஞானம் அப்படியே மகரிஷி சொன்னதை போல எளிமையாக இருந்தது. அவருக்கு நான் மகரிஷி அருளிய ' பிரம்மஞானத்தினைப் ' பற்றி சொன்னபோது இது எவ்வளவு பேருக்குத் தெரியும் எனக் கேட்டார். குறைந்தது ஐம்பது லெட்சம் பேர்கள் பிரம்மஞானப்பயிற்சி எடுத்துளார்கள் என்று சொன்னபோது மிகவும் ஆச்சரியப்பட்டுப்போனார். அவ்வப்போது இறைநிலையோடு கலந்து நிற்க சில எளிய பயிற்சிகள் சொல்லிக்கொடுத்தார். மகரிஷி ஆங்கிலப் புத்தகங்களை அவருக்கு கொடுத்தோம்.
இருமுறை அவர் எங்கள் இல்லத்திற்கு வந்திருந்து மாலா சமைத்துத் தந்த உணவினை ஏற்றது நாங்கள் செய்த புண்ணிய பலன்.
தனது ஆஸ்ரமத்தில் " 100 அடி உயர ஒரே கல்லிலான விவேகானந்தர் சிலை நிர்மாணித்துக்கொண்டிருக்கின்றேன். நீஙகள் இருவரும் அவசியம் வரவேண்டும் " என அன்புடன் அழைத்தார். ஆனால் எங்களால் செல்ல இயலவில்லை.
இந்த ஆண்டு மாலாவுடன் அப்பகுதிக்குச் சென்று அவர் ஆஸ்ரமத்தில் இயற்கை சூழலில் தங்கிவரவேண்டுமென எண்ணியிருந்தோம்........


.jpg)
No comments:
Post a Comment