Friday, 24 April 2026

அறுகுண சீரமைப்பு - முதுநிலை பேராசிரியர் மாலா ஜெயபிரகாஷ்




COVID -19 ஊரடங்கு காலகட்டத்தில் ZOOM மூலம் பல இடங்களுக்கு வகுப்புகள், உரைகள் என நேரத்தினை பயனுள்ளதாக மாற்றினாள். அவள் நிகழ்த்திய உரைகளில் ஒன்றுதான் இங்கே தந்துள்ளேன்.

மாலா ஆன்ட்டியின் குரலை அடிக்கடி கேட்கும்படி ஏற்பாடு செய்யுங்கள் என்று பலரும் உருக்கமாக கேட்கும்போது என் கண்கள் குளமாகின்றன. பேசவும் முடிவதில்லை.

மாலா நூற்றுக்கணக்கானவர்களுக்கு கவுன்சலிங் தந்து அவர்கள் பிரச்சனைகளைப் போக்கியிருக்கின்றாள். தொலைபேசி மூலம் தந்த கவுன்சலிங் ஏராளம். சில தற்கொலைகலைத் தடுத்திருக்கின்றாள். பிரிந்திருந்த தம்பதிகளை சேர்த்து வைத்திருக்கின்றாள். பதின்பருவ காதல் பிரச்சனைகளில் சிக்குண்டு  கல்வியைத் தொலைத்த மாணவ, மாணவிகள் மாலாவினால் திருந்தி நல்ல நிலையில் இருக்கின்றார்கள். இரண்டு சைக்கியாட்ரிஸ்டுகள் மற்றும் ஒரு மனோதத்துவ பேராசிரியர் பிரச்சனைகளை எளிதில் தீர்த்து அவர்கள் அமைதியாக வாழ உதவியிருக்கின்றாள்.

மாலா ஒரு மிகச் சிறந்த தோழியாக மிகவும் ஜாலியாக சிரிக்க, சிரிக்க பேசுபவள்.

ஆள் கிடைத்தால் கலாய்ப்பதிலும் வல்லவள். அவள் விசில் சப்தம் பலமானது.

தமிழ்நாடு முழுக்க அவளுக்கு நண்பர்கள், ரசிகர்கள் உண்டு.

அவள் தொலைபேசி மூலம் பேசிய பல சம்பவங்களை எனது செல்போனில் பதிவு செய்திருந்தேன். அவள் சிரிப்பு, விசில் சப்தம் போன்றவற்றையும் பதிவு பண்ணியிருந்தேன். அந்த செல்போன் சில ஆண்டுகளுக்கு முன் காணாமல் போய்விட்டது. 

அதிலிருந்த போட்டோக்கள், செய்திகள், முக்கிய போன் நம்பர்கள என பலவற்றையும் இழந்து விட்டேன்.  கோடி, கோடியாக
 கொட்டினாலும் கிடைக்காத பொக்கிஷமாக அவற்றை இப்போது உணர்கின்றேன்.

எனவே எனக்காக இருப்பதையெல்லாம் இப்பகுதியில் பதிவு செய்கிறேன்.

என் உணர்வுகளை பரிந்து கொண்டதற்கு நன்றி. 


மாலா உரை கேட்க    CLICK HERE 

No comments:

Post a Comment