Wednesday, 29 April 2026

முதுமையும் இளமையும் (Old and Young):

 


நான் இளமையாக இருந்த போது,

காலை எழுவது மிகவும் கடினமாக இருந்தது.

இப்போது நான் முதுமையில் இருக்கிறோம், தூங்குவது தான் மிகவும் கடினமாக உள்ளது.

வாழ்க்கையின் உண்மை மற்றும் நிஜத்தை இவ்வளவு அழகாக சொல்லியிருக்கிறது.

இளமை மற்றும் முதுமை (Young and Old):

நான் இளமையாக இருந்த போது – என் முகப்பருக்கள் (பிம்பிள்ஸ்) பற்றிக் கவலைப்பட்டேன்.

நான் முதுமையில் இருக்கும்போது – என் சுருக்கங்கள் (Wrinkles) பற்றிக் கவலைப்படுகிறேன்.

நான் இளமையாக இருந்த போது – யாரோ ஒருவரின் கையைப் பிடிக்கக் காத்திருந்தேன்.

நான் முதுமையில் இருக்கும்போது – யாராவது என் கையைப் பிடிக்கக் காத்திருக்கிறேன்.

நான் இளமையாக இருந்த போது – என் பெற்றோர் என்னை தனியாக விட வேண்டும் என்று நினைத்தேன்.

நான் முதுமையில் இருக்கும்போது – தனியாக விடப்படுவேனோ என்று கவலைப்படுகிறேன்.

நான் இளமையாக இருந்த போது – அறிவுரை கேட்பதை வெறுத்தேன்.

நான் முதுமையில் இருக்கும்போது – பேசவோ அறிவுரை சொல்லவோ யாரும் இல்லை.

நான் இளமையாக இருந்த போது – அழகான விஷயங்களை ரசித்தேன்.

நான் முதுமையில் இருக்கும்போது – என்னைச் சுற்றியுள்ள எல்லாவற்றிலும் அழகை காண்கிறேன்.

நான் இளமையாக இருந்த போது – நான் என்றென்றும் இருப்பேன் என்று நினைத்தேன்.

நான் முதுமையில் இருக்கும்போது – விரைவில் அது என் முறை என்பதைக் அறிவேன்.

நான் இளமையாக இருந்த போது – அந்தக் கணங்களை கொண்டாடினேன்.

நான் முதுமையில் இருக்கும்போது – என் நினைவுகளை நேசித்து காப்பாற்றுகிறேன்.

வாழ்க்கையின் மிகுந்த தொடக்கமும் முடிவும் ஆகிய நிலையிலே நாம் கவலைப்படுகிறோம்;

ஆனால் வாழ்க்கையை உணர்ந்து வாழ மறந்துவிடுகிறோம்.

வாழ்க்கை அனுபவிக்கப்பட வேண்டியது.. ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றை கற்றுக் கொண்டே இருக்கிறேன் ஆனால் கற்பது மட்டும் முடியவே இல்லை...

நீங்கள் இளமையிலா அல்லது முதுமையிலா என்பது முக்கியமல்ல.

வாழ்க்கை வாழப்பட வேண்டியது —

அன்புடன் வாழவும், அன்புக்குரியவர்களுடன் வாழவும்.

நீங்கள் நிச்சயமாக அவர்களில் ஒருவர்தான்.

No comments:

Post a Comment