மகரிஷி அவர்களின் மறைவிற்குப் ( 2006 ) பிறகு மாலாவிற்கு உறுதுணையாக நின்று உற்சாகமும், ஊக்கமும் அளித்த இன்னொரு மஹான் தவத்திரு ராமதாஸ் அண்ணா சாமிகள் அவர்கள். கும்பகோணம் அடுத்துள்ள கொட்டையூரில் ஆசிரம் அமைத்து ஆயிரக்கணக்கான அனாதைக் குழந்தைகளை வளர்த்து ஆளாக்கிய பெருமையுடையவர். 99 வயது வரை அயராது தொண்டாற்றியவர். எங்கள் அறிவுத்திருக்கோயில் பணிகள் சிறப்பாக நடைபெற வாழ்த்திக்கொண்டே இருப்பார்.
மாலா மீது தனி அன்பும், பிரியமும் காட்டியவர்.
மாலாவிடம் " நான் குழந்தையாக இருக்கும்போதே அம்மாவை இழந்துவிட்டேன். என் கடைசி காலத்தில் இறைவன் உன்னை எனக்கு அம்மாவாக தந்துள்ளான் " என்று அவர் சொன்னது மாலாவை மிகவும் நெகிழச் செய்துவிட்டது. அவர் சமாதி ஆகும்வரை மாலா அவருக்குத் தாயாகவே விளங்கினாள்.
அண்ணா சாமிகள் மாலாவிடம் மனவளக்கலைப் பற்றி நிறைய பேசுவார்கள்.அவர் வள்ளலார் வழி வந்தவர் என்பதால் மாலாவிற்கு வள்ளலார் பற்றிய நிறைய பாடல்கள் / செய்திகள் சொல்லியிருக்கின்றார். ஒரு தைப்பூசத்தன்று மாலாவை அழைத்துக்கொண்டு வடலூர் சென்று ஜோதி தரிசனம் செய்துவைத்து வள்ளலார் மறைந்த மேட்டுக்குப்பம் மற்றும் பல இடங்களுக்கு அழைத்துச் சென்றவர்.
மாலாவுடன் ஆழியாருக்கும் சென்று வந்துள்ளார்.
2014ம் ஆண்டு திருச்சியில் நாங்கள் புது வீடு கட்டி புதுமனைப் புக ஏற்பாடுகள் செய்திருந்தோம். ஸ்ரீராம் USA விலிருந்து வரமுடியாத சூழ்நிலை. அண்ணா சாமிகளுக்கு அழைப்பு கொடுத்து ஆசீர்வாதம் பெற்றோம். அப்போது அவருக்கு ஓர் ஆபரேஷன் நடைபெற்று ஓய்விலிருந்தார்.
கிரகப்பிரவேசத்தன்று காலை நான்கு மணிக்கு அண்ணா சாமிகள் எங்கள் புது இல்லத்திற்கு வந்திருந்து வந்திருந்த அனைவரையும் வரவேற்று வாழ்த்தினார்கள்.
" நான் மாலா அம்மாவின் பிள்ளையாக வந்துள்ளேன் " என்று அவர் ( ஸ்ரீராம் வராத குறையை நீக்க ) கூறியபோது கண்ணீர் மல்க அப்படியே அவர் காலில் விழுந்து வணங்கினோம்.

2014 -ஞானியார் இல்லம் கிரகப்பிரவேஷத்தின்போது
ஐந்து முறை அவர் எங்கள் இல்லத்திற்கு வந்திருந்து எங்களுடன் இருந்தது நாங்கள் செய்த புண்ணிய பலன்கள்.
பெல் அறிவுத்திருக்கோயில் திறப்பு விழாவில் அண்ணா சாமிகள் முக்கிய பங்கேற்று எங்கள் சார்பில் ஒரு லட்சம் ரூபாய் தொகையினை உலக சமுதாய சேவா சங்கத் தலைவர் பத்மபூஷன் Dr SKM ஐயா அவர்களிடம் வழங்கினார்.
| 2009 -எங்கள் அறிவுத்திருக்கோயில் திறப்பு விழாவின்போது
கும்பகோணம் கொட்டையூரில் அண்ணா சாமிகளின் மஹா சமாதி. இந்த சமாதிக்கோவில் உருவாக்கியதிலும் மாலாவின் பங்கு முக்கியமானது. |


No comments:
Post a Comment