Friday, 24 April 2026

அரசியல்

 மகன்: "அப்பா, அரசியல்ல நுழையணும்னா என்ன தகுதி வேணும்?"

அப்பா: "ஒண்ணுமே தெரியாத விஷயத்தைப் பத்தி கூட, மூணு மணி நேரம் விடாமப் பேசுற திறமை வேணும்டா!"

மகன்: "அப்பா, ஒரு நல்ல அரசியல்வாதிக்கு அழகு எது?"

அப்பா: "முன்னாடி நிக்குற மக்களுக்கு 'இலவசங்கள்' மேல ஆசையை வளர்க்குறதும், பின்னாடி நிக்குற அதிகாரிகளுக்கு 'கமிஷன்' மேல ஆசையை வளர்க்குறதும், ஆனா பார்க்குறதுக்கு 'எளிமையானவன்' மாதிரி நடிக்கிறதும்தான் மகனே அரசியல் அழகு!"

மகன்: "அப்பா, ஒரு அரசியல்வாதிக்கும் சாதாரண மனுஷனுக்கும் என்ன வித்தியாசம்?"

அப்பா: "சாதாரண மனுஷன் தப்பு பண்ணா ஜெயிலுக்குப் போவான்... அரசியல்வாதி தப்பு பண்ணா, அந்தத் தப்பை எப்படிச் சட்டப்படி நியாயப்படுத்தலாம்னு பார்க்க 'கமிட்டி' போடுவார்!"

மகன்: "அப்பா, அரசியல்ல எது ரொம்பக் கஷ்டம்?"

அப்பா: "ஜெயிக்கிறது கஷ்டம் இல்லடா... ஜெயிச்சதுக்கு அப்புறம் நாம சொன்ன வாக்குறுதி எதுவுமே ஞாபகம் இல்லாத மாதிரி நடிக்கிறது தான் ரொம்பக் கஷ்டம்!"

மகன்: "அப்பா, அரசியல்ல எது ரொம்ப ஈஸி?"

அப்பா: "சின்னக் கல்யாண வீட்டுக்குக் கூட 'மந்திரி' வர்ற மாதிரி பில்டப் கொடுத்து போஸ்டர் அடிக்கிறது தான்டா ரொம்ப ஈஸி. ஆனா உண்மையிலேயே மந்திரி வர்றதுக்குள்ள கல்யாணம் முடிஞ்சு அந்தத் தம்பதிகளுக்குக் குழந்தையே பிறந்துடும்!"

No comments:

Post a Comment