Showing posts with label Mala. Show all posts
Showing posts with label Mala. Show all posts

Tuesday, 23 June 2026

" பெண்களின் நலமே நாட்டின் வளம் " - முதுநிலை பேராசிரியர் அருள்நிதி மாலா ஜெயபிரகாஷ்


இன்று
( 24-06-2026 ) ஓர் இனிய நாள். எங்களது இருபது ஆண்டுகளுக்கு மேலான கனவுத் திட்டத்தின் முதற்கட்டம் மாலாவின் இடையறா வாழ்த்துகளாலும், அவள் என்னுள் இருந்து இயக்கியதாலும் இன்று இனிதே நிறைவேறியது. கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக இதற்கான பணிகளில் ஈடுபட்டதால்

' என் நெஞ்சில் புதைந்திருக்கும் ( மாலா ) நினைவுகள்' பற்றியும், மற்ற செய்திகளையும் தெரியப்படுத்த முடியவில்லை.

பல நண்பர்கள் மாலாவின் சிறப்புரைகளை அவ்வப்போது வெளியிட வேண்டினர். எனவே சில ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீலங்கா அன்பர்களுக்காக அவள் பேசிய " பெண்களின் நலமே நாட்டின் வளம் " என்ற உரையின் linkகினை கீழே கொடுத்துள்ளேன்.

LINK

எங்கள் கனவுத்திட்டத்தின்

இரண்டாம் கட்டம்

துவங்கியபின்

அது பற்றி

தெரிவிக்கின்றேன்.

வாழ்க வளமுடன்!

Sunday, 10 May 2026

கருவிலே திரு ...

மாலா தன் அம்மாவுடன்

த்தைக்கு ( மாலா அம்மா திருமதி ராஜம் அவர்களுக்கு ) மாலா மீது எப்போதும் ஒரு குறை - ரொம்ப சிம்பிளாக இருக்கிறாளே, நகைகளெல்லாம் போடுவதில்லை, பட்டு புடவை அணிவதில்லை, மேக்கப் கூட போடுவதில்லை என மாலா மீது ஒரு வருத்தம் அவர்களுக்கு உண்டு.

எங்களுடன் பலதடவை அத்தை ஆழியார் வந்திருக்கின்றார்கள். அங்கு அவர்கள் மாலாவிடம் " இங்கு எல்லோரும் எப்படி அழகாக ட்ரஸ் செய்து வந்திருக்கின்றார்கள். நீயோ ரொம்ப சாதாரணமாக இருக்கின்றாய். கழுத்துல ஒரு நல்ல நகையாவது போட்டு வந்திருக்கலாமே " என் குறை பட்டுக்கொண்டிருந்தார்கள்.

ஒரு தடவை ஆழியாரில் பேராசிரியை பிரமுக்குட்டி அம்மா ( தேசத்தியாகி செக்கிழுத்த செம்மல் ..சி. அவர்களின் பேத்தி - கூடுவாஞ்சேரியில் பெண்களுக்கென ஆன்மீக கல்வி நிலையம் நடத்தி ஆயிரக்கணக்கான பெண்களுக்கு தையல், கம்ப்யூட்டர் போன்ற பயிற்சிகளை தந்தவர் ) அத்தையிடம் வந்து மாலாவின் சேவைகளை பற்றி மிகவும் புகழ்ந்து பேசி " இப்படிப்பட்ட புண்ணியவதி இந்த மணி வயிற்றில் பிறக்க என்ன தவம் செய்தீர்களோ! " என்று சொல்லி அத்தையின் வயிற்றினைத் தொட்டு வணங்கினார்கள். அத்தை மிகவும் நெகிழ்ந்து போனார்கள்.


அன்றிலிருந்து
அத்தைக்கு மாலா மீது மிகவும்
அன்பு, கனிவு,பெருமை எல்லாம் அதிகமாயிற்று.





பிரமுக்குட்டி அம்மாவுடன் மாலா எடுத்துக்கொண்ட போட்டோக்கள் பல இருந்தாலும் இது கடைசி போட்டோ ....


Wednesday, 29 April 2026

சரணாகதி - மாலா எழுதிய கட்டுரை



இந்த கட்டுரையும் நாமக்கல் மனவளக்கலை மன்ற வெள்ளி விழா மலருக்காக மாலாவால் எழுதப்பட்டது.

இக்கட்டுரையில் நான் எவ்வாறு சிறுநீரகக்கற்களால் அவதிப்பட்ட சமயத்தில் எனக்காக எப்படியெல்லாம் உதவியாக இருந்து முற்றிலும் குணமாக உதவினாள் என்பதை சுருக்கமாகத்தான் விவரித்திருக்கின்றாள்.

என்னைவிட அவள் துன்பப்பட்டதுதான் அதிகம்.

என் இடுப்பில் கை வைத்து " கற்கள் கரைந்து வெளியேறட்டும் " என என் கிட்னிக்களை வாழ்த்தி, வாழ்த்தி எவ்வித சிரமமும் நான் படாமல் அத்தனை கற்களும் வெளியேறிவி இரவு முழுதும் விழித்திருப்பாள். நான் பூரண குணமான பிறகு எழுதிய கட்டுரை இது -


 

Monday, 27 April 2026

திருச்சி வேதாத்திரி நகர் அறிவுத்திருக்கோயில்

மாலாவின் பெருமுயற்சியால் இடம் வாங்கப்பட்டு, நிதி திரட்டப்பட்டு, திறக்கப்பட்ட திருச்சி வேதாத்திரி நகர் அறிவுத்திருக்கோயிலின் எழில் தோற்றம் பற்றிய video இங்கு தரப்பட்டுள்ளது.

இக்கோயில் 2006ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு, ரூ 3.5 கோடியில் கட்டப்பட்டு 2009ம் ஆண்டு அக்டொபரில்திறக்கப்பட்டது

இது தொடர்பான செய்திகளை பற்றி ஒரு புத்தகமே எழுதலாம்.

To see the video pl click the link below -

CLICK

அறிவுத்திருக்கோயிலின் அஸ்திவாரப்பணிகளை மாலா தொடங்கி வைக்கின்றாள்.



Thursday, 23 April 2026

என் நெஞ்சில் புதைந்திருக்கும் நிரந்தர ( மாலா ) நினைவுகள் ...3

SWAMI VINAYAGANANDHA MAHARAJ

எங்கள் ஞானியார் இல்லத்திற்கு வந்திருந்து எங்களுக்கு பெருமை சேர்த்த சுவாமி விநாயகானந்த மஹராஜ் அவர்களை பற்றி சொல்ல வேண்டும். எங்கள் இனிய நண்பர் திரு ரவிச்சந்தர் அவர்கள் சுவாமிகளை அழைத்து வந்திருந்தார்கள்.

சுவாமிகள் பற்றி சொல்ல நிறைய இருக்கின்றது. மெத்த படித்த ஸ்காலர். கல்கத்தா பேலூர் ராமகிருஷ்ணா மடத்தில் துறவறம் ஏற்று அங்கு சேவை செய்துவிட்டு பிறகு சாத்புரா மலைப்பகுதியில் நர்மதை நதி ஓரம் அடர்ந்த காடுகளின் நடுவில் தனிமை தவம் மேற்கொண்டவர். காட்டிலாகா அதிகாரிகள் கொடுக்கும் தானியம், பழங்கள், காய்கள் உண்டே மௌன தவம் செய்தவர். பிறகு ஹிமாலய மலைகள் பகுதியிலும் மற்றும் நாடு பூராவும் சுற்றித்திரிந்து அருளாசி வழங்கியவர். 2001ம் ஆண்டு கர்நாடகா உடுப்பி பகுதிக்கு வந்திருந்தபோது பையலூர் என்ற இடத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ணா ஆஷ்ரமத்தினை நிறுவி மகத்தான தொண்டாற்றி வருகின்றார்கள்.

எங்கள் அறிவுத்திருக்கோயிலிலும், இல்லத்திலும் மாலா அவரிடம் கேட்டு தெரிந்துகொண்ட ஆன்மீக விஷயங்கள் பற்பல. மாலாவை அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது. 'பெண்களில் இப்படி சமூகத்திற்கு தொண்டு செய்ய ஒரு சிலரே உள்ளனர். உன் ஆன்மீகத் தொண்டு சிறக்கட்டுமென' வாழ்த்தினார்.எனக்கும் அவரை மிகவும் பிடித்திருந்தது. அவர் சொன்ன இறைஞானம் அப்படியே மகரிஷி சொன்னதை போல எளிமையாக இருந்தது. அவருக்கு நான் மகரிஷி அருளிய ' பிரம்மஞானத்தினைப் ' பற்றி சொன்னபோது இது எவ்வளவு பேருக்குத் தெரியும் எனக் கேட்டார். குறைந்தது ஐம்பது லெட்சம் பேர்கள் பிரம்மஞானப்பயிற்சி எடுத்துளார்கள் என்று சொன்னபோது மிகவும் ஆச்சரியப்பட்டுப்போனார். அவ்வப்போது இறைநிலையோடு கலந்து நிற்க சில எளிய பயிற்சிகள் சொல்லிக்கொடுத்தார். மகரிஷி ஆங்கிலப் புத்தகங்களை அவருக்கு கொடுத்தோம்.



இருமுறை அவர் எங்கள் இல்லத்திற்கு வந்திருந்து மாலா சமைத்துத் தந்த உணவினை ஏற்றது நாங்கள் செய்த புண்ணிய பலன்.



தனது ஆஸ்ரமத்தில் " 100 அடி உயர ஒரே கல்லிலான விவேகானந்தர் சிலை நிர்மாணித்துக்கொண்டிருக்கின்றேன். நீஙகள் இருவரும் அவசியம் வரவேண்டும் " என அன்புடன் அழைத்தார். ஆனால் எங்களால் செல்ல இயலவில்லை.

இந்த ஆண்டு மாலாவுடன் அப்பகுதிக்குச் சென்று அவர் ஆஸ்ரமத்தில் இயற்கை சூழலில் தங்கிவரவேண்டுமென எண்ணியிருந்தோம்........